கதைகள்- கடிதங்கள்

வணக்கம் ஜெ,

தவளையும் இளவரசனும்.

மனிதர்கள் எப்போதும் தன் ஆடி பாவைகளையே தேடி அடைகிறார்கள் அவர்களுடன் பொறுந்தி போகிறார்கள், பிறகு அதையே பேசி பேசி சலித்து பின் விலகி புதியவை அதே தனது வட்டத்திற்குள் தனது குணநலன்னுடன், தனது வாழ்க்கை வட்டத்துடன் ஒத்ததை அடைவார்கள் முடிவில்லா ஆட்டம் இது. இதில் இருந்து விலகி முற்றிலும் புதியவைகளை அடைபர்களும் உண்டு அவர்களே இந்த கதையில் வருபவர்கள். மீ தங்கள் இக்குழுவில் பெண்கள் நடத்தப்படும் விதம் குறித்து சொல்வது நம்ம அதிர்ச்சியாக இருக்கலாம் ஆனால் அவர்களுக்கு அவர்கள் வாழ்க்கை வட்டம். புதிய மனிதனை நம் சந்திக்கையில் முதல் சொல்லிலேயே நான் உனக்கு சலைத்தவன் இல்லை என்று காட்டியாக வேண்டும் இல்லையெனில்  அவரே நம் மீது ஆதிக்கம் செலுத்துவார் இதுவே பெண்கள் வாழ்வில் நிகழ்கிறது. பொருத்தம் இல்லாதவைகள் இணையும் போதே வாழ்க்கை சுவைமிக்கதாக ஆகிறது.

வேட்டு.

புதிய புதிய தந்திரங்கள் உடன் ஆடுவதே வாழ்க்கை, வாழ்வும் சர்க்கஸ் கூடாரங்களில் இணையானது தான் போலும்..

ஏழுமலை.

 

அன்பு ஆசானுக்கு,

நலம், நலமறிய ஆவல். என்  முதல் வாசிப்பு அனுபவ கடிதம் இது.

சக்தி ரூபேண! – முந்தைய  இரு கதைகளைவிட வித்தியாசமான வாசிப்பு அனுபவத்தை கொடுத்ததெனவேச் சொல்வேன்.

உழிச்சில் வைத்தியத்திற்கு  எல்லா வடிவப் பொம்மை உடல் தான் எத்தனை  பொருத்தவுடல். எல்லா சொல்கிறமாதிரி லட்சிய உடலல்லவா அது? உயிருள்ள தெய்வமல்லவா அவள் கொள்ளை அழகு பொம்மை உடல்.

ஸ்ரீ  பயப்படும்படியாக வைத்தியசாலையில் பொம்மை வடிவவுடலை தவறாக பயன்படுத்தவோ, திருடி போகவோ வாய்ப்புள்ளது என்னும்  நிலை தான் எத்தனை  கேவலமானமாக ஒன்றாக உள்ளது. “இங்குள்ள வழக்கம் அப்படி”  – எப்படியான நிலை இங்கே!?

எல்லா தொலைந்து போய் ஸ்ரீ எல்லாயிடங்களுக்கும் தேடிச் செல்லச் செல்ல, மனம் உண்மையாகவே பதைப்பதைக்கிறது. எல்லாவுக்கு எந்த பிரச்சினையும் இல்லாமல் திரும்பி வந்திடவேண்டுமென ஆசைகொள்கிறது. ஊரில் எத்தனைப்  பேருக்குத்தான் அவளைத் தெரிந்திருக்கிறது. காமத்திற்காக அவள் உடலை அனுபவித்து கொன்றச்  சிதைத்தாலும் எல்லாவுக்கு  என்றும்  அழிவில்லை. உயிருள்ள உணர்ச்சியாக தேவியானவள் அவள் சக்தி ரூபமாய் வேறு  வடிவத்தில் உறைந்திருக்கிறாள், உறைந்திருப்பாள் என்றும்!

சிவராஜ்

பின்குறிப்பு: கதைகளின் ஊடுருவலாக நரம்புப் புள்ளிகள் அழுத்தம், வியர்வை வெளியேற்ற வழிகள், உழிச்சில் வைத்தியமுறை, பாகன் மத மந்திரங்கள், தைலவகைகள், ஆன்மீக கதைகள் (நிறைய விடுபட்டிருக்கலாம் குறிப்பிட இங்கு – 3 கதை மறுவாசிப்புகள்  தேவை எனக்கு :-)) என அநேக தகவல்களையும், நல்ல தமிழ்வார்த்தைகளையும்  தொடர்ந்து எங்களுக்கு கற்றுக்கொடுத்து  வருவதற்கு நன்றிகள் பல.

திரு ஜெயமோகன் அவர்களுக்கு,

நான் இவ்வருடம் ஜூன் மாதம் 22ம் தேதியன்று உள்நாடடுக் கடித உறையில் எழுதிய கடிதத்தின் நகல் இது.

நான் உங்களின் புதிய வாசகன். நவம்பர் 2019 முதற்கொண்டு உங்கள் தளத்தை வாசித்து வருகிறேன். மகாபாரதம் வாசிக்கவே வந்தேன். வெண்முரசு முழுவதும் வாசிததேன். மீண்டும் மீள் வாசிப்பு செய்தல் வேண்டும். இக்கடிதமானது ஆமை சிறுகதை குறித்து மட்டுமே. முதல் முறையாக நூறு நாற்கலிகள் வாசித்த போது எனக்குத் தோனறியது என்னவென்றால் காப்பானின் (தர்மபாலின்) தாய் போன்ற கதாபாத்திரத்தை யாராவது உலக இலக்கியத்தில் எழுதி இருப்பார்களா என்ற ஐயம் தான். நான் அறிந்த வரையில் எழுதியிருக்க வாய்ப்பில்லை என்றுதான் தோன்றியது. உலக இலக்கியம் குறித்து எழுதும் அளவுக்கு நான் வாசிப்பு அனுபவம்  கொண்டவனல்லநான் வாசித்த வரையில் தமிழில் யாரும் இது போன்ற ஒரு கதாபாத்திரத்தை தங்கள் எழுத்தில் கொண்டு வந்ததாகத் தெரியவில்லை. | நீங்களே மீண்டும் ஆமைக் காரி மூலம் நிகரான கதாபாத்திரத்தை படைத்துள்ளீர்கள்.

ஆமைக்காரி எல்லா வழிகளும் அடைக்கப்பட்ட சூழலில் தன் பிள்ளைக்காக போராடி வாழ்வது மிக அற்புதமாக சொல்லப்பட்டுள்ளது கதையின் கடைசி வரிகள் கதையின் கருவினை மிகச் சுருக்கமாக சொல்லி முடிகிறது. |(ஆமைக்க சக்தி அதாக்கும் மக்கா அதுக்கு வேகமில்லை ஆனா விட்டுக் குடுக்காத பிடிவாதம் உண்டு) பனையின் பயன்களையும், கொரம்பை எனும் சொல்லையும் கதை பனையில்லா பகுதி மக்களுக்கு  அறிமுகப்படுத்தி மிக நல்ல வாசிப்பபவனுபவத்தை  வழங்குகிறது.

நூறு நாற்காலிகள் மற்றும் ஆமை கதாபாத்திரத்தை நாம் வெண்முரசு நாவல் தொகையிலும் காணலாம். நீர்க்கோலம் நாவலில் பேரரசி தமயந்தி சேதி நாட்டு அல்லங்காடி வீதிகளில் பிச்சியாக பெருச்சாளிகளுடன் உணவு தேடி இரவுகளில் அலைந்த போது ஊழின் பெருவலி கண்முன் நிகழ்ந்தது. தேவயானிக்கு நிகரான பேரரசி ஒரு நாயாடிக் குறவர் பெண்மணியின் வாழ்க்கையை வாழ நேர்ந்த சூழ்நிலையை உணரும் போது வாழ்வின் நிலையின்மையும், வெறுமையும் விளங்கியது. நல்ல சிறுகதைக்கு நன்றி.

என்றென்றும் நன்றியுடன்
V.
தேவதாஸ்

100. வரம் [சிறுகதை]

99. முதலாமன் [சிறுகதை]

98. அருகே கடல் [சிறுகதை]

97. புழுக்கச்சோறு [சிறுகதை]

96. நெடுந்தூரம் [சிறுகதை]

95. எரிமருள் [சிறுகதை]

94. மலைவிளிம்பில் [சிறுகதை]

93. அமுதம் [சிறுகதை]

92. தீவண்டி [சிறுகதை]

91. பீடம் [சிறுகதை]

90. சிந்தே [சிறுகதை]

89. சாவி [சிறுகதை]

88. கழுமாடன் [சிறுகதை]

87. கீர்ட்டிங்ஸ் [சிறுகதை]

86. தூவக்காளி [சிறுகதை]

85. சிறகு [சிறுகதை]

84. வண்ணம் [சிறுகதை]

83. ஆபகந்தி [சிறுகதை]

82. ஆமை [சிறுகதை]

81. கணக்கு [சிறுகதை]

80. சுக்ரர் [சிறுகதை]

79. அருள் [சிறுகதை]

78. ஏழாவது [சிறுகதை]

77. மணிபல்லவம் [சிறுகதை]

76. மூத்தோள் [சிறுகதை]

75. அன்னம் [சிறுகதை]

74. மலையரசி [சிறுகதை]

73. குமிழி [சிறுகதை]

72. லட்சுமியும் பார்வதியும் [சிறுகதை]

71. செய்தி [சிறுகதை]

70. ‘தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 2

70. ‘தங்கப்புத்தகம்’ [குறுநாவல் -1

69. ஆகாயம் [சிறுகதை]

68. ராஜன் [சிறுகதை]

67. தேனீ [சிறுகதை]

66. முதுநாவல்[சிறுகதை]

65. இணைவு [சிறுகதை]

64. கரு [குறுநாவல்]- பகுதி 1

64. கரு [குறுநாவல்]- பகுதி 2

63. ‘பிறசண்டு’ [சிறுகதை]

62. நிழல்காகம் [சிறுகதை]

61. லாசர் [சிறுகதை]

60. தேவி [சிறுகதை]

59. சிவம் [சிறுகதை]

58. முத்தங்கள் [சிறுகதை]

57. கூடு [சிறுகதை]

56. சீட்டு [சிறுகதை]

55. போழ்வு [சிறுகதை]

54. நஞ்சு [சிறுகதை]

53. பலிக்கல் [சிறுகதை]

52. காக்காய்ப்பொன் [சிறுகதை]

51. லீலை [சிறுகதை]

50. ஐந்து நெருப்பு[ சிறுகதை]

49. கரவு [சிறுகதை]

48. நற்றுணை [சிறுகதை]

47. இறைவன் [சிறுகதை]

46. மலைகளின் உரையாடல் [சிறுகதை]

45. முதல் ஆறு [சிறுகதை]

44. பிடி [சிறுகதை]

43.. கைமுக்கு [சிறுகதை]

42. உலகெலாம் [சிறுகதை]

41. மாயப்பொன் [சிறுகதை]

40. ஆழி [சிறுகதை]

39. வனவாசம் [சிறுகதை]

38. மதுரம் [சிறுகதை]

37. ஓநாயின் மூக்கு [சிறுகதை]

36. வான்நெசவு [சிறுகதை]

35. பாப்பாவின் சொந்த யானை [சிறுகதை]

34. பத்துலட்சம் காலடிகள் [சிறுகதை]

33. வான்கீழ் [சிறுகதை]

32. எழுகதிர் [சிறுகதை]

31. நகைமுகன் [சிறுகதை]

30. ஏகம் [சிறுகதை]

29. ஆட்டக்கதை [சிறுகதை]

28. குருவி [சிறுகதை]

27. சூழ்திரு [சிறுகதை]

26. லூப் [சிறுகதை]

25. அனலுக்குமேல் [சிறுகதை]

24. பெயர்நூறான் [சிறுகதை]

23. இடம் [சிறுகதை]

22. சுற்றுகள் [சிறுகதை]

21. பொலிவதும் கலைவதும் [சிறுகதை]

20. வேரில் திகழ்வது [சிறுகதை]

19. ஆயிரம் ஊற்றுக்கள் [சிறுகதை]

18. தங்கத்தின் மணம் [சிறுகதை]

17. வானில் அலைகின்றன குரல்கள் [சிறுகதை]

16. ஏதேன் [சிறுகதை]

15. மொழி [சிறுகதை]

14. ஆடகம் [சிறுகதை]

13. கோட்டை [சிறுகதை]

12. விலங்கு [சிறுகதை]

11. துளி [சிறுகதை]

10. வேட்டு [சிறுகதை]

9. அங்கி [சிறுகதை]

8. தவளையும் இளவரசனும் [சிறுகதை]

7. பூனை [சிறுகதை]

6. வருக்கை [சிறுகதை]

5. “ஆனையில்லா!” [சிறுகதை]

4. யா தேவி! [சிறுகதை]

3. சர்வ ஃபூதேஷு [சிறுகதை]

2. சக்தி ரூபேண! [சிறுகதை]

1. எண்ண எண்ணக் குறைவது [சிறுகதை]

முந்தைய கட்டுரைபழுவேட்டையர் கதைகள்
அடுத்த கட்டுரைஎழுத்தின் இருள்