இன்று முன் சுவடுகள் படி த்துமுடித்தேன். நீங்கள் வாசகனை சலிப்படையச் செய்யக் கூடாது என. முடிவு செய்து விட்டு எழுத துவங்குகிறீர்களா? என்ன. இக்கட்டுரைகளை வாசிக்கும் போது என் தன்னகங்காரம் புன்படுகிறது. எனது இலக்குகள், தியாகங்கள், அறிவு, எனது சிறுமைத்தனத்தை எண்ணி மனம் புழுங்குகிறேன்.
இவரலாற்று நூலில் நீங்கள் தொட்டுக் காட்டும் இடங்கள் வாழ்வின் சரி தவறுகள் ஒழுக்கவரையறைகள் போன்றவற்றை மீண்டும் ஒரு முறை பரிசீலனை செய்ய வைக்கிறது
இன்று சுனில் பி இளயிடத்தின் காந்தி பற்றிய ஒரு பேச்சை கேட்டேன். சில இடறல்கள் இருந்தாலும் ஒரு நல்ல உரையென்றுதான் தோன்றுகிறது.
அதில் இந்தியாவில் வரலாறு இல்லாமை பற்றி காந்தியிடம் ஒருவர் கேட்கிறார் அதற்கு காந்தி வரலாறு என்பதென்ன ஆண்களின் அதிகாரத்தின் வரலாறு தானே என்று சொன்னதாக குறிப்பிடுகிறார். சட்டென அது தானே உண்மை எனத் தோன்றியது நாம் படிக்கும் வரலாறு ஆண்களின் அதிகாரத்தின், அல்லது ஆணாக மாறிய பெண்ணின் வரலாறு என்பது எவ்வளவு பெரிய உண்மை. அக்கணங்களில் யோசித்துப் பார்த்தேன் இந்த பதினோரு வரலாற்று மனிதர்களுடைய புத்தகங்களும் அதை அறிமுகப்படுத்தும் இக்கட்டுரைகள் எவ்வளவு அவசியமானவை!
இப்புத்தகத்தை மீண்டும் ஒரு முறை படித்துவிட்டு ஒரு கட்டுரை எழுத வேண்டும் முடிந்தால் அவர்களின் வரலாற்றையும் படிக்க வேண்டும்.
மேலும் அவர் இப்பேச்சில் குறிப்பிடும் காந்தி தண்டியாத்திரையை ரயில் நிலையங்கள் உள்ள கிராமங்கள் வழியாக நடத்தியதின் நுட்பம். இந்தியாவில் முழுமையாக விவாசாயிகள் விளைச்சலுக்கு விலைகேட்டு போராடிய வரலாறு காந்தி இந்தியாவில் பங்க்கேற்று நடத்திய சம்பரான் இயக்க த்திலிருந்து தான் துவங்குகிறது என்கிறார். நாராயணன் குரு காந்தி ஒப்பீடு எனக்கு சிந்திப்பதற்கு ஒரு புதிய கோணம். வள்ளத்தோள் குமரனாசன் இருவரின் கவிதை உரையாடல் இவர் பேச்சின் உச்சம்
அடி கண்ட ஆள்கு பரயாம்
கொண்ட ஆள்கு பரயான் பற்றத்தில்லா….
சில இடங்களில் கே கே எம் பேச்சு ஒருவேலை இப்படி த்தான் இருக்குமோ என்றளவு உணர்ச்சிகரமாக பேசினார். சமனிலை தவறாமல் கிட்டத்தட்ட ஒன்றறை மணி நேரம் இவர் பேசிய பேச்சை கேட்பவர்களுக்கு இது கண்டிப்பாக நேரத்தை வீணாக்கும் உரையென்று தோன்றாது என்பதை மட்டும் சொல்லிக் கொள்கிறேன்.
கதிரேசன்
நாகை