நூல்களை தரவிறக்க…

ஒரு விமர்சனம்

நீங்கள் இத்தனை முஸ்லிம் எழுத்தாளர்களைப் பற்றி இவ்வளவு எழுதியிருக்கிறீர்கள், அவருக்கு ஒன்றும் நினைவில் இல்லை. என்ன சதவீதத்தில் அவர்கள் எழுதியிருக்கிறார்களோ அதைவிட அதிகமாகவே நீங்கள் அவர்களைப்பற்றி எழுதியிருக்கிறீர்கள். இதில் குறைப்பட்டுக்கொள்ள ஒன்றுமில்லை. ‘நாலு முறை விட்டுவிட்டு ஒரு மணி வரை விவாதம்’ என்று படித்தபோதே தெரிந்தது இது நீங்கள் ஒரு ‘பொறுப்பில்லாத’ காலகட்டத்தில் எழுதியது என்று. மறுபிரசுரம் என்று கடைசியில்தானே போடுகிறீர்கள். அதேபோல 2011இல் எழுதியிருக்கிறீர்கள். சின்னவயசுன்னா அப்பிடித்தான். நிற்க.

உங்கள் கட்டுரையில் குறிப்பிட்டிருந்த எழுத்தாளர் ஆபிதீன் அவர்களின் இணையப்பக்கங்களை பற்றி வாட்சப்பில் யாரோ அனுப்பியிருந்தார்கள்.

‘பழைய புத்தகங்களை யாராவது இணையத்தில் பிரசுரித்தால்  தேவலை’ என்று குறைப்பட்டிருந்தீர்கள். உங்கள் குறை நீங்கியது. ஆபிதீன் பக்கங்களில் இந்த 22 நாவல்களும் கிடைக்கின்றன. தரவிறக்கம் செய்து கொள்ளலாம். அவருக்கு ஒரு பெரிய நன்றி.

1. அக்னி நதி (Aag ka Daryah) –  உருது :  குர்அதுல்ஐன் ஹைதர் (தமிழாக்கம் : சௌரி)

2. அரை நாழிகை நேரம் – மலையாளம் : பாறப்புறத்து (தமிழாக்கம் : கே. நாராயணன்)

3. அழிந்த பிறகு (Alida Mele) – கன்னடம் : சிவராம காரந்த் (தமிழாக்கம் : எம். சித்தலிங்கய்யா)

4. தர்பாரி ராகம் (Raag Darbari) – இந்தி : ஸ்ரீலால் சுக்ல (தமிழாக்கம் : சரஸ்வதி ராம்நாத்)

5. ஃபாத்துமாவுடைய ஆடும் இளம் பருவத்துத் தோழியும் (Pathummavude Adum Baliyakala Sakhiyum) – மலையாளம் : வைக்கம் முகம்மது பஷீர் (தமிழாக்கம் :  சி எஸ் விஜயம்)

6. ஜன்னலில் ஒரு சிறுமி (Totto-Chan) ஜப்பான் : டெட்சுகோ குயோயாநாகி (தமிழாக்கம் : அ. வள்ளிநாயகம் , சொ.பிரபாகரன்)

7. கருப்பு மண் (Nalla Regadi) – தெலுங்கு : பாலகும்மி பத்மராஜு (தமிழாக்கம் : பா பாலசுப்ரமணியன்)

8. கிராமாயணம் – கன்னடம் : ஆர்.பி. குல்கர்னி (’ராவ் பகதூர்’) (தமிழாக்கம் : எஸ் கெ சீதாதேவி)

9. கோயில் யானை (Thevarutu Aana) – மலையாளம் : ஓம்சேரி என்.என்.பிள்ளை ( தமிழாக்கம் : இளம்பாரதி)

10. முதலில்லாததும் முடிவில்லாததும் (Anadi Anantha) – கன்னடம் :  ஸ்ரீரங்க. (தமிழாக்கம் : ஹேமா ஆனந்த தீர்த்தன்)

11. நான் (Mee) – மராத்தி : ஹரிநாராயண் ஆப்தே (தமிழாக்கம் : மாலதி புணதாம் பேகர்)

12. நீலகண்டப் பறவையைத் தேடி (Neelakanth Pakhir Khonje) – வங்காளம் : அதீன் பந்த்யோபாத்யாய (தமிழாக்கம் : எஸ். .கிருஷ்ணமூர்த்தி)

13. ஒரு குடும்பம் சிதைகிறது (Griha Bhanga) – கன்னடம் : எச்.எல். பைரப்பா (தமிழாக்கம் : எச்.வி.சுப்ரமணியம்)

14. பகல் கனவு (Divasapna) – குஜராத்தி : ஜிஜூபாய் பதேக்கா (தமிழாக்கம் : சங்கரராஜுலு)

15. பன்கர்வாடி (Bangarwadi) – மராத்தி : வெங்கடேஷ் மாட்கூல்கர் (தமிழாக்கம் : உமாசந்திரன்)

16. சிப்பியின் வயிற்றில் முத்து (Jhinuker Pete Mukto) – வங்காளம் : போதிசத்வ மைத்ரேய (தமிழாக்கம் : எஸ். கிருஷ்ணமூர்த்தி)

17. துளியும் கடலும் (Boond aur Samudra) – இந்தி : அம்ரித்லால் நாகர் (தமிழாக்கம் : துளசி ஜெயராமன்)

18. உம்மாச்சு – மலையாளம் : உரூப் (தமிழாக்கம் : இளம்பாரதி)

19. உயிரற்ற நிலா (Mala Janha) – ஒரியா : உபேந்திர கிஷோர் தாஸ் (தமிழாக்கம் : பானுபந்த்)

20. வாழ்க்கை ஒரு நாடகம் (Manaveni Bhavai) – குஜராத்தி : பன்னாலால் பட்டேல் (தமிழாக்கம் : துளசி ஜெயராமன்)

21. விடியுமா (Jagari) – வங்காளம் : ஸதீநாத் பாதுரி (தமிழாக்கம் : என். எஸ். ஜகந்நாதன்)

22. விஷக்கன்னி (Visha Kanyaka) – மலையாளம் : எஸ்.கே. பொற்றேகாட் (தமிழாக்கம் : குறிஞ்சிவேலன்)

அன்புடன்,

கிருஷ்ணன் சங்கரன்

முந்தைய கட்டுரைவெண்முரசுக்கு நன்றி -கடிதம்
அடுத்த கட்டுரைகதைகளின் ஆண்டு