அந்தக்கதைகள்- கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன்,

“இறைவன் ” சிறுகதையை படித்தவுடன் முதலில் தோன்றிய கேள்வி ” இறைவன் யார்? என்பதுதான். நம் அனைவருக்கும் நன்றாக தெரியும் விடைதான்… இறைவன் என்பது “எழுத்தும் ஓவியமும் அவரவர்க்கு அவரவரின் கற்பனையும் என்று. அதை சுற்றித்தான் ஆயிரம் ஆயிரம் ஞானங்களும் தத்துவங்களும். ஆனால் அடிக்கட்டு  கருணை.  தாங்கள்  இழந்ததை அல்லது தொலைத்ததை கேட்டு தன்னிடம் மன்றாடுபவர்களுக்கு  கொடுக்கும் உள்ளம் எனவும் கூறலாம். இது ஒரு பகுதி.

இன்னொன்று :  ” இறைவன் உண்மையில் நம் யில் இருக்கிறான்.நமது தொழிலில் தமது திறமையில் நமது கலையில் இருக்கிறான். அதில் கரைந்து போய்  செய்து முடிக்கும்போது அவன் வெளிப்படுகிறான்.

அடுத்தது:  இலக்கியம் என்பதே இறந்தகாலம்தானா? என உங்களுக்குள் கேட்டிருந்தீர்கள். நேசித்ததை ..கொண்டாடாமலே தன்னிடம் இருந்து பறிபோனதை ஒருவன் உயிர்ப்பித்து தரவேண்டும் என கேட்கும்போது அரவணைக்கிறவன் …தருகிறேன் என வாக்குகொடுப்பவன்.

மாணிக்கம் ஆசாரி வரைந்துகொடுக்கபோவதும் இசக்கி அம்மைக்கு ஒரு பகவதிதானே.

ஸ்டீபன் ராஜ் குலசேகரன்

இனிய ஜெயம்,

புனைவுக் களியாட்டுக் கதைகள் வரிசையில் பல கதைகள் சாரமான ஒன்றை நோக்கி சென்று அதை பரிசீலிப்பவையாக இருக்கிறது. இதில் பரிசீலிக்கப்படுவது hate and love relation .

காதல் வாழ்வின் ஊடலும் கூடலும் என்னவாக வெளிப்படுகிறது, அது என்னவாக புரிந்து கொள்ளப்படுகிறது. சாரத்தில் அது என்னவாக இருக்கிறது என்பதை அக் கடலே குறியீடாக மாறி அவர்களுக்கு உணர்த்துகிறது.

தர்க்கபூர்வமாக இது இதனால்தான் என அவர்கள் வகுத்து சொல்லும் எதுவும், அந்த அதர்க்க கடலின் ஒரு அலையே.  அனுதினமும் சண்டையிட்டும் பிரிய இயலாமல் அவர்களை பிணைத்து வைப்பது எது என அவர்களால் அக வயமாக புரிந்து கொள்ள முடியாத அது, அதுவே புறத்தில் கடலாக அவர்களை ஏந்தி நிற்கிறது. அந்தக் கடலில் மிதக்கும் சிறு துரும்பு அவர்கள். கடலில் எழும் எல்லா அலையும் மீண்டும் கடலையே சேரும். சேந்து வாழ இயலாது என தர்க்க பூர்வமாக அறிந்து பிரிய முடிவு செய்தவர்களை, பிரிந்து வாழவும் முடியாது என அவர்களின் நிலையின் சாரத்தை காட்டிவிட்டது கடல்.

இனி என்ன செய்யப் போகிறார்கள்? என்னதான் செய்ய முடியும்?

 

கடலூர் சீனு

அன்புநிறை ஜெ,

தனிமையின் புனைவுக் களியாட்டு கதைகள் முழுவதையும் இரண்டு நாட்களாய் மீண்டும் தொடர்ச்சியாக வாசித்தேன்.

என்னவொரு பிரவாகம். எங்கிருக்கின்றன இவற்றின் ஊற்றுகள். அனைவருக்கும் கண்ணெதிரே இருந்தும் காணும் கண்ணற்று உதிரும் எண்ணற்ற தருணங்களை, பேரன்பை, மனிதத்தை, சிறுமையை, கண்ணீரை, மானுடத்தின் முடிவிலாக் கதையை தொட்டெடுத்து பெரும் மாலை உருவாகி வருகிறது. ‘பெருந்தச்சன் தொட்ட மரம் சில்பம்’ என்று சூழ்திருவில் வருவது போல ஒவ்வொன்றும் தங்கள் விரல்பட்டுக் கதையாகக் காத்திருந்தது போலும் காலம் காலமாக.

எங்கிருந்து தொடங்குவதெனத் தெரியவில்லை. பெருநதியின் வெள்ளத்தில் மூழ்கி எழ மூச்சு திணறுவது போல இருக்கிறது. இவையனைத்தையும் உள்வாங்கிக் கொள்ளவேனும் திடம் இருக்கிறதா என மலைப்பாக இருக்கிறது. மலைவிட்டிறங்கும் வான் நதியின் வேகம்.

பிரயாகையிலும் நீர்ச்சுடரிலும் கங்கை தோற்றுவாய் குறித்து வரும் இவ்வரிகளே இக்கதைப் பெருக்கிற்கு உரியவை:

மலைசரிந்து இறங்கி, மண் செழிக்க ஒழுகி, அழிமுகத்தில் கடலைச் சேர்ந்து விரிநீர் என்றானது கங்கை. அலையலையெனப் பெருகி தன்னைத் தானே நிறைத்துக்கொண்டது. 

பரம்பொருளின் ஒருதுளியே பெருவெளி. அகண்டாகாசம் என அதைச் சொல்கின்றன யோகநூல்கள். அதை நிறைக்கும் பாலொளிப்பெருக்கு மண்ணில் இறங்குவது மானுடனின் அகவெளியிலேயே. அதை சிதாகாசம் என்கின்றன யோகநூல்கள். விண் நிறைத்து சித்தம் நிறைத்து பின் மண் நிறைத்துப் பெருகும் பேரன்பையே கங்கை என வணங்குகின்றன உயிர்க்குலங்கள் 

வெண்முரசெனும் பெருநதி ஒரு புறமும் அன்றாடம் புதிது புதிதாக மலரும் இச்சிறுகதைகளின் நிரை ஒரு புறமும் என புனைவுகளின் கங்கைப் பெருக்கு இது. விரிசடை விரித்துத் தாங்கவும் உள்வாங்கவும் திறன் உலகுக்கு வேண்டும்.

பெருகுக கங்கை!

மிக்க அன்புடன்,

சுபா

100. வரம் [சிறுகதை]

99. முதலாமன் [சிறுகதை]

98. அருகே கடல் [சிறுகதை]

97. புழுக்கச்சோறு [சிறுகதை]

96. நெடுந்தூரம் [சிறுகதை]

95. எரிமருள் [சிறுகதை]

94. மலைவிளிம்பில் [சிறுகதை]

93. அமுதம் [சிறுகதை]

92. தீவண்டி [சிறுகதை]

91. பீடம் [சிறுகதை]

90. சிந்தே [சிறுகதை]

89. சாவி [சிறுகதை]

88. கழுமாடன் [சிறுகதை]

87. கீர்ட்டிங்ஸ் [சிறுகதை]

86. தூவக்காளி [சிறுகதை]

85. சிறகு [சிறுகதை]

84. வண்ணம் [சிறுகதை]

83. ஆபகந்தி [சிறுகதை]

82. ஆமை [சிறுகதை]

81. கணக்கு [சிறுகதை]

80. சுக்ரர் [சிறுகதை]

79. அருள் [சிறுகதை]

78. ஏழாவது [சிறுகதை]

77. மணிபல்லவம் [சிறுகதை]

76. மூத்தோள் [சிறுகதை]

75. அன்னம் [சிறுகதை]

74. மலையரசி [சிறுகதை]

73. குமிழி [சிறுகதை]

72. லட்சுமியும் பார்வதியும் [சிறுகதை]

71. செய்தி [சிறுகதை]

70. ‘தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 2

70. ‘தங்கப்புத்தகம்’ [குறுநாவல் -1

69. ஆகாயம் [சிறுகதை]

68. ராஜன் [சிறுகதை]

67. தேனீ [சிறுகதை]

66. முதுநாவல்[சிறுகதை]

65. இணைவு [சிறுகதை]

64. கரு [குறுநாவல்]- பகுதி 1

64. கரு [குறுநாவல்]- பகுதி 2

63. ‘பிறசண்டு’ [சிறுகதை]

62. நிழல்காகம் [சிறுகதை]

61. லாசர் [சிறுகதை]

60. தேவி [சிறுகதை]

59. சிவம் [சிறுகதை]

58. முத்தங்கள் [சிறுகதை]

57. கூடு [சிறுகதை]

56. சீட்டு [சிறுகதை]

55. போழ்வு [சிறுகதை]

54. நஞ்சு [சிறுகதை]

53. பலிக்கல் [சிறுகதை]

52. காக்காய்ப்பொன் [சிறுகதை]

51. லீலை [சிறுகதை]

50. ஐந்து நெருப்பு[ சிறுகதை]

49. கரவு [சிறுகதை]

48. நற்றுணை [சிறுகதை]

47. இறைவன் [சிறுகதை]

46. மலைகளின் உரையாடல் [சிறுகதை]

45. முதல் ஆறு [சிறுகதை]

44. பிடி [சிறுகதை]

43.. கைமுக்கு [சிறுகதை]

42. உலகெலாம் [சிறுகதை]

41. மாயப்பொன் [சிறுகதை]

40. ஆழி [சிறுகதை]

39. வனவாசம் [சிறுகதை]

38. மதுரம் [சிறுகதை]

37. ஓநாயின் மூக்கு [சிறுகதை]

36. வான்நெசவு [சிறுகதை]

35. பாப்பாவின் சொந்த யானை [சிறுகதை]

34. பத்துலட்சம் காலடிகள் [சிறுகதை]

33. வான்கீழ் [சிறுகதை]

32. எழுகதிர் [சிறுகதை]

31. நகைமுகன் [சிறுகதை]

30. ஏகம் [சிறுகதை]

29. ஆட்டக்கதை [சிறுகதை]

28. குருவி [சிறுகதை]

27. சூழ்திரு [சிறுகதை]

26. லூப் [சிறுகதை]

25. அனலுக்குமேல் [சிறுகதை]

24. பெயர்நூறான் [சிறுகதை]

23. இடம் [சிறுகதை]

22. சுற்றுகள் [சிறுகதை]

21. பொலிவதும் கலைவதும் [சிறுகதை]

20. வேரில் திகழ்வது [சிறுகதை]

19. ஆயிரம் ஊற்றுக்கள் [சிறுகதை]

18. தங்கத்தின் மணம் [சிறுகதை]

17. வானில் அலைகின்றன குரல்கள் [சிறுகதை]

16. ஏதேன் [சிறுகதை]

15. மொழி [சிறுகதை]

14. ஆடகம் [சிறுகதை]

13. கோட்டை [சிறுகதை]

12. விலங்கு [சிறுகதை]

11. துளி [சிறுகதை]

10. வேட்டு [சிறுகதை]

9. அங்கி [சிறுகதை]

8. தவளையும் இளவரசனும் [சிறுகதை]

7. பூனை [சிறுகதை]

6. வருக்கை [சிறுகதை]

5. “ஆனையில்லா!” [சிறுகதை]

4. யா தேவி! [சிறுகதை]

3. சர்வ ஃபூதேஷு [சிறுகதை]

2. சக்தி ரூபேண! [சிறுகதை]

1. எண்ண எண்ணக் குறைவது [சிறுகதை]

முந்தைய கட்டுரைவெண்முரசின் கிருஷ்ணன் – ரகுராமன்
அடுத்த கட்டுரைகுரு- ஆளுமையும் தொன்மமும்