சொல்

ஆழ்ந்த
தனித்த
துயருற்ற
ஒன்று
பிரார்த்தனை செய்யவேண்டியதில்லை.
அதன் இருப்பே ஒரு பிரார்த்தனை
அதன் சலிப்பும் நம்பிக்கையும்
துயிலும் விழிப்பும் மன்றாட்டுக்கள்

ஒரு சொல்லை
மிகமிகக் கவனமாக நகர்த்துபவன்
ஒரு சொல் நகர்ந்த இடைவெளியை
திடுக்கிடலுடன் கண்டுகொள்பவன்
வேறெந்த தோத்திரத்தையும் தேடுவதில்லை.
நாவரைக்கும் வந்தமையாத
சொற்கள் ஒவ்வொன்றும் சிறுபுயல்கள்.

அழியாதவற்றை கண்டுகொண்டபின்
அவன் எழும்போது
முற்றிலும் தோற்கடிக்கப்பட்டவனாக உணர்கிறான்
அவனைப்போல்
எண்ணியதை வென்ற எவருமில்லை

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் விருதுவிழா 2016 உரைகள்
அடுத்த கட்டுரைபீடமா?