வணக்கம். எழுத்தாளர் கி.ரா. அவர்களின் நிகழ்வில், அவருக்கு சிரமத்தை குறைக்க சில எண்ணங்களை, உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.
1) கி.ரா. அவர்கள் பேசும் நேரம் முப்பது நிமிடங்கள் இருப்பதுபோல் இருக்கட்டும். நிகழ்வை ஒரு மணி நேரம்தான் என்று வைத்துக்கொள்வோம்.
2) நிகழ்வின் நேரம் குறைவாக இருக்கட்டும் என்பதற்காக , ஆரம்பத்தில் மட்டும் , நம் ஆஸ்தானப் பாடகரில் ஒருவரை பாட வைக்கலாம். கி.ரா. இசையை விரும்பிக் கேட்பவர் என்பதால், நண்பர்கள் ராஜன் சோமசுந்தரமும், விஷ்ணுப்ரியாவும் கலந்தோலசித்து தயாராகிவிடுவார்கள்.
3) மாதிரி நிகழ்வின் பொழுதே நண்பர்கள், நல்ல கேள்விகளைக் கேட்டார்கள்.அந்த zoom பதிவை , நாம் கேட்டு கலந்தாலோசித்து பதிவேற்றம் செய்யலாம். இது குறைவான கேள்விகளைக் கேட்கிறோம் என்ற குறைபாட்டைத் தவிர்க்க உதவலாம். அன்று கேள்விகள் கேட்ட நண்பர்கள் மற்றவர்களுக்கு விட்டுக்கொடுக்கலாம்.
4) கி.ரா. அவர்கள் ஒவ்வொரு கேள்விக்கும் நீண்ட பதில்கள் சொல்லும் பட்சத்தில், நாம் , கேட்கவேண்டிய கேள்விகளைக் குறைக்கும் கட்டாயத்தில் உள்ளோம்.ஆதலால், நண்பர்கள் கேட்கவிருக்கும் கேள்விகளை முன்னரே தயாரித்து தரம் பார்த்து அடுக்கி வைக்கவும்.
கி.ரா-வைப் பார்த்தாலே போதும் என்று வாசக நண்பர்கள் இருப்பதாலும், அவருக்கும் நம் வாசகர்களை சந்திப்பதில் மகிழ்ச்சி இருப்பதாலும், இந்த சரித்திர நிகழ்வை நடத்துகிறோம். அவருடன் அதிக நேரம் செலவிடமுடியாது என்ற ஏக்கம் வாசக நண்பர்களுக்கு இருக்கும் என்பதை புரிந்துகொள்கிறேன்.
அன்புடன்,
வ. சௌந்தரராஜன்
ஆஸ்டின்