அன்பு ஜெமோவுக்கு,
நலம். நலமறிய ஆவல். எங்களது தமிழ்ப் பாரம்பரிய அறக்கட்டளை போன்று வெண்முரசு வாசகர்களுக்கும் இந்தியப் பாரம்பரியம் குறித்து பரந்துபட்ட தேடல் உண்டு என்பது தெரிந்த விஷயம். பேச்சுக் கச்சேரியின் முதல் உரையான குறுந்தொகை தொடங்கி பத்து ஆண்டுகளுக்கும் மேலாக நம்முடைய பந்தம் தொடர்கிறது.
2020 கொரோனா ஊரடங்கால் முடங்க வேண்டியிருந்தாலும் இணையத்தில் தொடர்ந்து இயங்க வேண்டியிருந்தது. ஆனாலும், இணைய வழியில் இயங்குவது சாபமல்ல, வரம் என்பதை புரிந்து கொண்டோம். இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர்களோடு தொடர்பு கொள்ள முடிந்தது. இணைய வழியில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வுகளில் தமிழ்நாட்டிற்கு வெளியே உள்ள ஏராளமான ஆய்வாளர்களின் உரைகளை கேட்க முடிந்தது.
நடப்பு ஆண்டில் இரு முக்கியமான முன்னெடுப்புகளை செய்து முடிந்திருக்கிறோம். இந்திய வரலாறு, பண்பாடு, கலாச்சாரத் துறையில் தொடர்ந்து இயங்குவதோடு, இந்தியப் பண்பாட்டு அம்சங்களை சாமானியர்களுக்கு எடுத்துச் செல்வதில் கணிசமான பங்களிப்பு செய்து வருபவர்களை கௌரவித்து, பேரா. சாமிநாதன் பெயரில் விருது வழங்க ஆரம்பித்திருக்கிறோம். இது தவிர இந்தியத் தன்மையை மையப்படுத்தி, இந்தியா என்னும் தேசத்தையும், அதன் பண்பாட்டையும் கொண்டாடும் விதமாக இந்தாலஜி திருவிழாவை ஏற்பாடு செய்திருக்கிறோம்.
இந்தாலஜி திருவிழா (Indology Festival) வரும் திங்கள் கிழமை இணைய வழியில் ஆரம்பமாகிறது. திங்கள் முதல் தொடர்ந்து எழு நாட்களுக்கும் மாலை எழு மணிக்கு அடுத்தடுத்து இரண்டு வரலாற்று ஆய்வாளர்களின் உரை இடம் பெறுகிறது. இந்தியாவின் வரலாற்று தொன்மையை வெளிப்படுத்தும் வகையிலும், இந்தியக் கலை, கட்டிடங்கள் சிறப்பம்சங்களை மையப்படுத்தி, அதை அடுத்து தலைமுறைக்கு எடுத்துச் செல்வதற்கான ஆக்கப்பூர்வமான விவாதங்களாக அமையும்படியும் ஒட்டுமொத்த விழா நிகழ்வுகளை வடிமைத்திருக்கிறோம்.
மேலதிக விபரங்களுக்கு… http://www.tamilheritage.in/ அனைவரும் பங்கேற்கலாம். கட்டணம் எதுவுமில்லை. வெண்முரசு வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்
ஜெ. ராம்கி
With regards,
Ramakrishnan Jayabalan (Ramki)
Reachable @ Mobile: +91 9444321608
FaceBook: https://www.facebook.com/ramkij