மனிதன் தான் உருவாக்கும் எதுவும் காலம் காலமாக நிலைத்து நிற்க வேண்டும் என்ற எண்ணத்தோடே செய்கிறான். ஒரு எளிய வீட்டைக் கட்டுகையில்கூட இது தன் காலத்திற்கு பிறகும் நிலைத்து நிற்க வேண்டும் என நினைக்கிறோம். இப்படியே நம் குடும்பம் வாழையடி வாழையாக வாழவேண்டும் என நினைக்கிறோம். ஒரு அரசு என்றும் வீழாமல் நிலைத்து நிற்கும் எண்ணத்துடனே நெறியமைத்து கட்டமைக்கப்படுகின்றன. ஆனால் மனிதனின் இந்தக் கட்டுமானங்களை எல்லாம் காலம் சிதலென பெருகி அரித்து அழிக்கிறது
மழைப்பாடல் உரை தண்டபாணி துரைவேல்