குருக்ஷேத்திரப்போரின் பேரோவியம் இந்நாவல். பெருங்காவியங்கள் என நமக்குக் கிடைப்பவை பெரும்பாலும் போர்க்களங்களை தீட்டிக்காட்டுபவை. இலியட் அல்லது ராமாயணம். இன்றைய படைப்புக்களில் போரும் அமைதியும்கூட அவ்வாறுதான். ஏனென்றால் போர் ஓர் உச்சம். ஒரு களத்தில் ஒரு காலஅளவில் மானுடன் தன் அனைத்து ஆற்றல்களையும் வெளிப்படுத்தியாகவேண்டும், வென்றால் வாழ்வு இல்லையேல் சாவு என்னும் நெறி திகழும் பிறிதொரு தருணம் வாழ்க்கையில் இல்லை.
அதனாலேயே அது மாபெரும் நாடகத்தருணங்களால் ஆனது. மானுட விழுமியங்கள் அனைத்தையும் உச்சத்தில் நிறுத்தி பேசுவதற்குரியது. இந்நாவலிலும் போர்க்களம் அவ்வாறே எழுதப்பட்டுள்ளது. உணர்வெழுச்சிகளின், உளநிலைகளின் காட்சி. உளப்பெயர்வுகளின் கனவுகளின் காட்சி. உச்சங்கள் உச்சங்களால் நிகர்செய்யப்படும் ஒரு வெளி.
வெண்முரசு நாவல்நிரையின் பத்தொன்பதாம் நூலான இதை பெருமதிப்பிற்குரிய டி.பாலசுந்தரம் அவர்களுக்கு படைக்கிறேன்.
ஜெயமோகன்