அன்புள்ள ஜெ
விகடன் இந்த இதழில் தமிழருவி மனியனின் பேட்டியில் இந்தக்கேள்வியும் பதிலும் இடம்பெற்றுள்ளது. அதைக்கண்டு மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன்
”அரசியல் தெளிவு பெற நான் படிக்க வேண்டிய 10 நூல்களின் (தமிழில்) பட்டியல்கூறுங்களேன்!”
1. ”பிளேட்டோவின் ‘குடியரசு’ (ராமானுஜாசாரி)
2. அரிஸ்டாட்டிலின் ‘அரசியல்’ (சி.எஸ்.சுப்பிரமணியம்)
3. மார்க்ஸின் ‘மூலதனம்’ (க.ரா.ஜமதக்னி)
4. லூயி பிஷரின் ‘காந்தி வாழ்க்கை’ (தி.ஜ.ர)
5. ‘காந்திஜியின் இறுதி 200 நாட்கள்’ (வி.ராமமூர்த்தி)
6. ‘இந்திய அரசமைப்பு’ (ஆ.சந்திரசேகரன்)
7. ‘பண்டைய இந்தியா’ (டி.டி.கோசாம்பி – தமிழில் ஆர்.எஸ்.நாராயணன்)
8. ரஜனி பாமிதத் எழுதிய ‘இன்றைய இந்தியா’ (எஸ்.ராமகிருஷ்ணன்)
9. ‘பெரியார் ஆகஸ்ட் 15’ (எஸ்.வி.ராஜதுரை)
10. ‘இன்றைய காந்தி’ (ஜெயமோகன்)
கணேஷ்
அன்புள்ள கணேஷ்
வாசித்த வரை எல்லாமே முக்கியமான நூல்கள். ராஜதுரையின் நூலைத்தவிர.
ஜெ