நற்றுணையும் வண்ணமும்- கடிதங்கள்

ஆசிரியருக்கு வணக்கம் ,

உங்களின் வாசக நண்பர் சேர்ந்து உருவாக்கிய சுக்கிரி குழுவில் நீங்கள் எழுதிய நூறு கதைகளிலிருந்து வாரம்தோறும் இரு சிறுகதைகளை விவாதம் செய்கிறோம் .

ஆரம்பத்தில் என் வாசிப்பு எங்கே இருக்கிறது என தெரிந்து கொண்டேன் .பின்னர் வாசிப்பில் விடுபட்டவையெல்லாம் புரிந்து  என் அறிவு மேலே சென்று கொண்டிருப்பதை  உணர்ந்தேன் .

நான் ஜெயமோகனின் வாசகன் என்பதில் பெருமை கொண்டிருந்தேன். இவையனைத்தும் கடந்த ஞாயிறு  நற்றுணையை. விவாதிக்கும்வரைதான் .மறுநாள் காலை வீட்டிலிருந்து கிளம்பி நீங்கள் படித்த ,கல்லூரி தாண்டி பார்வதிபுரம் பாலம் கீழே சாராதா நகரில் உங்கள் வீடு தாண்டியதும்,கள்ளியங்காடு ,சுங்கான்கடை ஐயப்பா பெண்கள் கல்லூரி ,பஸ் நிறுத்ததிலுள்ள ஆல மரம் (முதல் ஆறு )குதிரை பாய்ஞ்சான் குளம் ,குமாரகோவில் (நற்றுணை )புலியூர்குறிச்சி தேவசாகாயம் பிள்ளை ஆலயம்,வில்லுக்குறி தாண்டி தாங்கள் பணி செய்த தக்கலை பி எஸ் என் எல் தாண்டி திருவிதாங்கோடு சென்றேன் .கல்லுபள்ளியும் ,அரை பள்ளியும்அங்குள்ளது  பழைய திருவாங்கூரின் தலைநகர் இது.சிவன்கோவில் அங்கு தான் இருக்கிறது .

மீண்டும் தக்கலை வழியாக வள்ளியாறு தாண்டி பத்மநாபபுரம் அரண்மனை வழியாக சைதன்யா ஒரு வயதாக இருக்கும்போது நீங்கள் குடியிருந்த வீடு தாண்டி அரண்மனையின் பின்புறமுள்ள நமது நண்பர் கே பி  வினோத்தின் இல்லம் சென்று அவரை  சந்தித்தேன் .

அவரது இல்லமும் அரண்மனையின் வேலைபாடுகளுடன் உள்ள மிக பழமையான இல்லம். பின்னர் திரும்பி வருகையில் புகைப்படங்கள் எடுத்துகொண்டு. என் கால் படும் இடமெல்லாம் வரலாறு என மனம் துள்ளி குதித்தது .இவையனைத்தும் பதினைந்து கிலோமீட்டருக்குள் .

நேற்று காலை எதிர் திசையில் சென்று மருத்துவமலை அடிவாரத்தில் இருக்கையில் சகோதரி கல்பனாவின் நாகர்கள் பற்றிய கட்டுரையை படித்தேன் .

அதன் பின் தான் மண்டைக்குள் ஏதேதோ செய்தது .நற்றுணையில் கதைகளங்கலான கடிகைபட்டினம் துறைமுகம்.நான் பிறந்து,வளர்ந்த மணவாளக்குறிச்சி கிராமத்தின் அடுத்த கிராமம் .வள்ளியாறு கடலில் சேரும் பொழி தாண்டி தான் கடிகைபட்டினம் தொடங்குகிறது .நான் படித்த பள்ளியின் பின் புறம் .

இரண்டு கிலோமீட்டர் தூரமுள்ள திருநயினார்குறிச்சிக்கு சைக்கிளிலேயே சென்றிருக்கிறேன் .ஆனாலும் தமிழ்நாட்டின் மிக பழமையான கர்கண்டேஸ்வரர் ஆலயம் அங்கிருப்பது எனக்கு தெரியவில்லை. நண்பன் சனில் நாயரை அழைத்து அந்த கோயிலை பற்றி கேட்டேன் .

டதி பள்ளியருகில் தான் ஏழு ஆண்டுகள் குடியிருந்தேன்,சுனிதா அந்த பள்ளியில்தான் ஆசிரியை பயிற்சிக்கு போயிருந்தாள்.ஹோம் சர்ச்சும்,அந்த மயானமும்  இங்குதான் இருக்கிறது.என் கால் படும் இடமனைத்தும் வரலாறு. அதை தெரிந்தபோது உளம் கொந்தளித்து ,வெட்கி தலைகுனிந்தேன்.இந்த வரலாற்று பூமியில் நாற்பத்தி நான்கு ஆண்டுகள் வாழ்ந்து நான் ஜெயமோகனை வந்தடையாமல் இருந்திருந்தால்,இந்த வாழ்வு வீணாகி போயிருக்குமோ என.

ஷாகுல் ஹமீது,

நாகர்கோயில்

அன்பு ஜெ,

உலகின் எந்தப் பகுதியை எடுத்துக் கொண்டாலும் அவை பெரும்பாலும் புலம் பெயர்ந்த குடிகளால் தான் கட்டமைக்கப் படுகின்றன. வரலாறு அவர்களைப் பற்றி சொல்வதில்லை. பெரும்பாலும் அரசர்களின் வரலாறோடு அது நின்றுவிடுகிறது. சில அரசர்கள் நீங்கள் சொல்வது போல உருவகங்களாகவும்,  ஊகங்களுமாக நின்றுவிடுகிறார்கள் தான். ஆனால் குடிகளைப் பற்றிய சித்திரமும் அவர்களின் இன்னல்களும் தெளிவாக எடுத்தியம்படாத ஒன்று. இங்கு இக்கதையில் நீங்கள் தமிழகத்திலிருந்து புலம் பெயர்ந்த வேளாண் குடிமக்களின் வாழ்வுச்சித்திரத்தை காணித்திருக்கிறீர்கள்.

ஆறில் ஒரு பங்கு அரசனுக்கு என்பது கி.மு மூன்றாம் நூற்றாண்டிலிருந்தே நாம் அறியப்பட்டிருக்கும் முறை தான். அதை எளியதெனக் கருதி ஒற்றை வரியாக கடந்து விட்டுப் போயிருந்திருக்கிறேன். ஆனால், புவியியல், காலநிலை, விளைச்சல் சார்ந்திருக்கும் விவசாயத்தை நம்பியிருக்கும் மக்கள் அதனை எளிதாக எதிர்கொண்டிருப்பார்களா என்பது ஐயமே. அவர்களின் இன்னல்களை எடுத்துரைத்திருந்தீர்கள்.

கல்லாக மாறுவதென்பது ஒரு நிலை எனலாம் ஜெ. மனதாலும், உடலாலும் சோர்ந்து அடுத்து வேறு எதையும் சொல்லாலும் செயலாலும் செய்ய இயலாத ஒரு நிலை. நானும் அந்த நிலையை அறிந்திருக்கிறேன். பித்துக்கு முந்தைய நிலை அது. அந்தப் புள்ளியை கடந்தால் பித்து பிடித்துவிடும் என்றறியும் நிலை. அங்கு கல்லாக மாறுகிறது இருதையமும், மூளையும், ஆன்மாவும். மக்களின் கையறு நிலை அது. அங்கிருந்து அவர்களை மீட்க ஓர் உணர்வு பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

பிரசவத்திற்குப் பிந்தையதான காலத்தில் உடல் சோர்வாலும், உள்ளச் சோர்வாலும் பெண் ஒரு பித்து நிலை அடைகிறாள் என்கிறார்கள். அதை அவள் கடக்க தாய்மை உணர்வு பெரிதும் துணைபுரிகிறது. ஒருவகையில் அந்த ஒரு அஸ்திரத்தையே இவர்களும் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்றே நினைத்துக் கொண்டேன். “ஒரு சின்ன வண்ணத்துப்பூச்சி!” ; “நாலு சொட்டு  நிறம்” என்பதும் அந்த உணர்வைதான் என்றே நினைத்தேன் ஜெ.

கேரளவர்மாவின் ஆட்சியில் நீங்கள் சொல்லிய மந்திரிகளை/அதிகாரிகளை நினைக்கையில் பழுதெண்ணும் மந்திரியின் பக்கத்துள் தெவ்வோர் எழுபது கோடி உறும் என்ற குறள் நினைவிற்கு வந்தது ஜெ. அது என்ன எழுபது கோடி? ஒரு வேளை ஒரு எதுகை மோனைக்காக இருக்குமோ என்று வள்ளுவன் தாத்தாவை தவறாக நினைத்துவிட்டேன். இப்பொழுது தான் புரிகிறது. எவ்வளவு குலறுபடிகளை பார்த்திருந்தால் அவர் இங்ஙனம் சொல்லியிருக்கக் கூடும். மந்திரிகளல் மட்டுமல்ல இங்கு அதிகாரப்படியிலிருக்கும் கீழ் நிலையிலுள்ளவர்கள் முதற்கொண்டு இருக்கும் நிலையைச் சொல்லியிருந்தீர்கள். நிலைமை இன்னும்/இன்றும் மாறவில்லை ஜெ.

தெரிந்த நண்பர் ஒருவர் கால்நடை ஆய்வாளராக இருக்கிறார். கால்நடைகள் கணக்கெடுக்கும் பணிக்காக சோம்பல்பட்டு ஊரிலிருக்கும் ஓர் ஊதாரி படித்த இளைஞனிடம் நூறு ரூபாய் தருவதாகச் சொல்லி கணக்கெடுக்கச் சொல்லியிருக்கிறார். அவன் ஆங்காங்கே மேய்ந்துவிட்டு அறிக்கையை சமர்ப்பித்துவிட்டான். நண்பரும் பொறியியல் படித்தவனாயிற்றே என்று நம்பி சரிபார்க்காமல் அறிக்கையை மேலதிகாரியிடம் சமர்ப்பித்துவிட்டார். மேலதிகாரியும் சரிபார்க்காமல் அறிக்கையை துறைக்கு அனுப்பிவிட்டார். இறுதி அறிக்கையை வாசித்த அனைத்து அதிகார்களும் திகைத்து விட்டனர். அதெப்படி இந்த சூரியன் சுட்டெறிக்கும் விருதுநகர் மாவட்டத்தில் 5 யாக்(YAK) இருக்கிறதென்று வாயடைத்துவிட்டனர். நலத் திட்டங்கள் தீட்டுவதற்காக எடுக்கப்படும் தரவுகளின் நிலை இன்று இது தான். நூற்றாண்டுகள் பல ஓடிவிட்டன ஜெ. அதிகாரிகள் ஏனோ அப்படியே தான் இருக்கின்றனர். கதையைப் படித்தபோது இந்த சம்பவம் தான் நினைவிற்கு வந்தது. சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை ஜெ.

அருமையான கதை. நன்றி.

அன்புடன்

இரம்யா.

100. வரம் [சிறுகதை]

99. முதலாமன் [சிறுகதை]

98. அருகே கடல் [சிறுகதை]

97. புழுக்கச்சோறு [சிறுகதை]

96. நெடுந்தூரம் [சிறுகதை]

95. எரிமருள் [சிறுகதை]

94. மலைவிளிம்பில் [சிறுகதை]

93. அமுதம் [சிறுகதை]

92. தீவண்டி [சிறுகதை]

91. பீடம் [சிறுகதை]

90. சிந்தே [சிறுகதை]

89. சாவி [சிறுகதை]

88. கழுமாடன் [சிறுகதை]

87. கீர்ட்டிங்ஸ் [சிறுகதை]

86. தூவக்காளி [சிறுகதை]

85. சிறகு [சிறுகதை]

84. வண்ணம் [சிறுகதை]

83. ஆபகந்தி [சிறுகதை]

82. ஆமை [சிறுகதை]

81. கணக்கு [சிறுகதை]

80. சுக்ரர் [சிறுகதை]

79. அருள் [சிறுகதை]

78. ஏழாவது [சிறுகதை]

77. மணிபல்லவம் [சிறுகதை]

76. மூத்தோள் [சிறுகதை]

75. அன்னம் [சிறுகதை]

74. மலையரசி [சிறுகதை]

73. குமிழி [சிறுகதை]

72. லட்சுமியும் பார்வதியும் [சிறுகதை]

71. செய்தி [சிறுகதை]

70. ‘தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 2

70. ‘தங்கப்புத்தகம்’ [குறுநாவல் -1

69. ஆகாயம் [சிறுகதை]

68. ராஜன் [சிறுகதை]

67. தேனீ [சிறுகதை]

66. முதுநாவல்[சிறுகதை]

65. இணைவு [சிறுகதை]

64. கரு [குறுநாவல்]- பகுதி 1

64. கரு [குறுநாவல்]- பகுதி 2

63. ‘பிறசண்டு’ [சிறுகதை]

62. நிழல்காகம் [சிறுகதை]

61. லாசர் [சிறுகதை]

60. தேவி [சிறுகதை]

59. சிவம் [சிறுகதை]

58. முத்தங்கள் [சிறுகதை]

57. கூடு [சிறுகதை]

56. சீட்டு [சிறுகதை]

55. போழ்வு [சிறுகதை]

54. நஞ்சு [சிறுகதை]

53. பலிக்கல் [சிறுகதை]

52. காக்காய்ப்பொன் [சிறுகதை]

51. லீலை [சிறுகதை]

50. ஐந்து நெருப்பு[ சிறுகதை]

49. கரவு [சிறுகதை]

48. நற்றுணை [சிறுகதை]

47. இறைவன் [சிறுகதை]

46. மலைகளின் உரையாடல் [சிறுகதை]

45. முதல் ஆறு [சிறுகதை]

44. பிடி [சிறுகதை]

43.. கைமுக்கு [சிறுகதை]

42. உலகெலாம் [சிறுகதை]

41. மாயப்பொன் [சிறுகதை]

40. ஆழி [சிறுகதை]

39. வனவாசம் [சிறுகதை]

38. மதுரம் [சிறுகதை]

37. ஓநாயின் மூக்கு [சிறுகதை]

36. வான்நெசவு [சிறுகதை]

35. பாப்பாவின் சொந்த யானை [சிறுகதை]

34. பத்துலட்சம் காலடிகள் [சிறுகதை]

33. வான்கீழ் [சிறுகதை]

32. எழுகதிர் [சிறுகதை]

31. நகைமுகன் [சிறுகதை]

30. ஏகம் [சிறுகதை]

29. ஆட்டக்கதை [சிறுகதை]

28. குருவி [சிறுகதை]

27. சூழ்திரு [சிறுகதை]

26. லூப் [சிறுகதை]

25. அனலுக்குமேல் [சிறுகதை]

24. பெயர்நூறான் [சிறுகதை]

23. இடம் [சிறுகதை]

22. சுற்றுகள் [சிறுகதை]

21. பொலிவதும் கலைவதும் [சிறுகதை]

20. வேரில் திகழ்வது [சிறுகதை]

19. ஆயிரம் ஊற்றுக்கள் [சிறுகதை]

18. தங்கத்தின் மணம் [சிறுகதை]

17. வானில் அலைகின்றன குரல்கள் [சிறுகதை]

16. ஏதேன் [சிறுகதை]

15. மொழி [சிறுகதை]

14. ஆடகம் [சிறுகதை]

13. கோட்டை [சிறுகதை]

12. விலங்கு [சிறுகதை]

11. துளி [சிறுகதை]

10. வேட்டு [சிறுகதை]

9. அங்கி [சிறுகதை]

8. தவளையும் இளவரசனும் [சிறுகதை]

7. பூனை [சிறுகதை]

6. வருக்கை [சிறுகதை]

5. “ஆனையில்லா!” [சிறுகதை]

4. யா தேவி! [சிறுகதை]

3. சர்வ ஃபூதேஷு [சிறுகதை]

2. சக்தி ரூபேண! [சிறுகதை]

1. எண்ண எண்ணக் குறைவது [சிறுகதை]

முந்தைய கட்டுரைகமல்,வெண்முரசு- எதிர்வினைகள்
அடுத்த கட்டுரைபொய்த்தேவு- கண்டடைதல்