காந்தி,திருமா

இந்தியாவின் கருத்தியல் களத்தில் என்றும் நான்கு தரப்புகள் நின்றிருக்கும். முன்னும்பின்னும் என அவற்றின் இடம் மாறிக்கொண்டிருக்கும். இன்று மேலோங்கியிருக்கும் இந்துத்துவத் தரப்பு, மார்க்ஸியத் தரப்ப்பு, அம்பேத்கரை முதன்மையாகக் கொண்ட தலித் தரப்பு, இஸ்லாமிய அடிப்படைவாதத் தரப்பு. இவற்றின் உரையாடலும் சமநிலையுமே இந்திய அரசியல்.இணைப்பு மற்றும் சமரசத்தன்மையை அடிப்படையாகக் கொண்ட காங்கிரஸ் ஒரு கருத்தியல் தரப்பு அல்ல.

காந்தி ஓர்அரசியல்- கருத்தியல் தரப்பு அல்ல. காந்தியப்பார்வை என்பது அரசியல், சூழியல், ஆன்மிகம் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் ஒரு தத்துவ தரிசனம். அதை எவரும் தங்கள் நோக்கில் விரித்தெடுக்கலாம், தங்கள் தரப்பை முன்வைத்து அதனுடன் உரையாடலாம்

அம்பேத்கர் மரபினராக தொல் திருமாவளவன் அவர்கள் காந்தியைப்பற்றி விவாதிக்கும் இந்த பேட்டி அவ்வகையில் முக்கியமானது

முந்தைய கட்டுரைநோய்,மழை-கடிதங்கள்-2
அடுத்த கட்டுரைமணி ரத்னம் உரையாடல்- கடிதங்கள்-6