மல்லர் கம்பம்  நிகழ்ச்சி

ஆசிரியருக்கு வணக்கம் ,

தோல் பாவை நிழற்கூத்து கலைஞர்களுக்கு உதவும் பொருட்டு இணையவழி நிகழ்ச்சி நடத்தி வந்த பணத்தில் அவர்களின் வாழ்வாதாரத்திற்கு தொழில்கள் தொடங்கி கொடுத்துள்ளோம்.உங்களது வாசகர்கள்,நண்பர்கள் பெருமளவில் பங்கு கொண்டு நிதியுதவி செய்தார்கள் .அந்த நிகழ்ச்சியை உலகம் முழுவதிலிருந்தும் கண்டு ரசித்தனர் .ஒருவருக்கு தேநீர் கடை ,மாற்றுத்திறனாளி ஒருவருக்கு அவரிடம் உள்ள இருசக்க வாகனத்திலேயே நடமாடும் தேநீர் கடை அமைத்து கொடுத்தோம் .

வில்லுப்பாட்டு கலைஞர் ஒருவருக்கு வியாபாரத்திற்காக  தள்ளு வண்டி ஒன்று  ஆ கா பெருமாள் தலைமையில் இன்று மாலை கொடுக்க இருக்கிறோம் .

இந்நிலையில் விழுப்புரதில் மல்லர் கம்பம்  நிகழ்ச்சியை  மாற்றுதிறனாளிகள் குழுவினர் வரும் ஜனவரி வரையில் எங்களுக்கு நிகழ்ச்சிகள் ஏதும் இல்லை என உதவி கோரியது .அவர்களுக்காக எங்கள் கிளப் டென் அமைப்பு மூலமாக வரும் 27 ஆம் தியதி இணையவழி நிகழ்ச்சி ஒன்றை ஒருங்கிணைத்துள்ளோம்.கட்டணம் செலுத்தி நிகழ்ச்சியை கண்டு ரசித்து அவர்களின் வாழ்விலும் ஒளியேற்றிட வேண்டுகிறேன் .
பதிவு செய்ய: https://forms.gle/7gxBevdXaXoC5TDc7
நேரலை: https://meet.google.com/uco-drjb-czp

ஷாகுல் ஹமீது,

நாகர்கோயில்.

முந்தைய கட்டுரைஅந்தச்சிலர்
அடுத்த கட்டுரைவெண்முரசு மறுவாசிப்பு