மழைப்பாடலின் குரல்கள்

வெண்முரசு விவாதங்கள்

அன்புள்ள ஜெ

மழைப்பாடலை வாசித்து முடித்துவிட்டு இதை எழுதுகிறேன். மழைப்பாடல் ஒரு பெரிய பெருக்குபோல அடித்துச் சுருட்டிக் கொண்டுசெல்கிறது.முதலில் அந்தத் தொடக்கம், பாலையில் மழைபெய்யும் காட்சி. மழைவழியாகவே பீஷ்மர் திரும்பி வருகிறார். அஸ்தினபுரி மாறியிருக்கிறது. அங்கே அன்னையர் நடுவே அதிகாரப்போட்டி தொடங்கிவிட்டது

டால்ஸ்டாயின் போரும் அமைதியும் போல இருக்கிறது மழைப்பாடல். மிகமிக விரிவான காட்சியாக நிலம் காட்டப்படுகிறது. அதுவும் இன்றுள்ள நிலம் அல்ல, மிகத்தொன்மையான காலத்தில் இருந்த நிலம். வெண்முரசு என்ற நாவல்வரிசை எந்த நிலத்திலே நிகழவிருக்கிறதென்பதை இந்நிலக்காட்சிகள் வழியாகத்தான் நம்மால் உணரமுடிகிறது. பாலைநிலத்தின் விரிவான சித்தரிப்பு. கூடவே துர்வசுவின் குடி காந்தாரர்களாக ஆனதன் வம்சகதை. இந்தப்பக்கம் யதுவின் கொடிவழியினரின் கதை. புல்வெளிகள் யாதவர்களின் ஊர்களாக ஆனதன் கதை

அந்தக்கதைகள் வழியாக இரு அரசியர் அஸ்தினபுரிக்குள் வருகிறார்கள். முடிசூடும்போட்டியில் பாண்டுவெல்கிறார். ஆனால் அரசைதுறந்து சதசிருங்கம் செல்கிறார். குழந்தைகள் பிறக்கின்றன. பாண்டுவின் இறப்பு சட்டென்று அதிகாரப்போட்டியின் அபத்த்தைச் சுட்டிக்காட்ட அரசியர் காடு செல்கிறார்கள். நாவலின் உச்சம் இந்த இடம். விளங்கமுடியாததும்கூட. ஆனால் மனதில் ஒரு அடிபோல விழுகிறது

மழைவரப்போகிறது. தவளைகளின் பாடல்.தவளைவேதம் முழங்குகிறது.வாழ்வுக்காகவா அழிவுக்காகவா மழை வரப்போகிறது?ஏற்கனவே அஸ்தினபுரியில் அனல்வெள்ளமும் புனல்வெள்ளமும் குருதிமழையும் பொன்மழையும் கரிமழையும் பெய்துவிட்டன. எஞ்சப்போவது என்ன?

எவ்வளவு பெரிய சித்திரம் என்ற மாபெரும் பிரமிப்புதான் மிஞ்சுகிறது

எஸ்.ஆர்.சுந்தர்ராஜன்

பீஷ்மர் முதலில் ஒரு கம்பீரமான ஆளுமையாக இருக்கிறார். தியாகியாகவும் மதியூகியாகவும் இருக்கிறார். கொஞ்சம்கொஞ்சமாக அவர் தனிமையான மனிதராக ஆகிக்கொண்டே இருக்கிறார். சத்யவதியால் அவர் திருப்பி அனுப்பப்பட்டு தன் கிராமத்துக்குப்போய் அங்கும் தனிமைப்பட்டு தேசாந்திரியாக போகும்போது அந்தக் கதாபாத்திரம் கனத்துக்கொண்டே போகிறது

மழைப்பாடல்- மாறுதலின் கதை

மழைப்பாடலைப்பற்றி நீங்கள் சொன்னது உண்மை. கதைப்படி பெரியதாக ஏதும் நிகழவில்லை. திருமணங்கள் மட்டுமே. ஆனால் கடைசிவரை மகாபாரதத்தில் நீடிக்கும் சிக்கல்களும் முடிச்சுகளும் இங்குதான் விழுகின்றன

மழைப்பாடலின் மௌனம்

முந்தைய கட்டுரைபிணைப்பு [சிறுகதை]- தனா
அடுத்த கட்டுரைதியடோர் பாஸ்கரன் சந்திப்பு