அன்புள்ள ஜெ
கழுகு/கருடன்/ராசாலி/வல்லூறு என்ற வார்த்தைகளிலேயே ஒருவித பயத்தை/வீரத்தை உணர்ந்திருக்கிறேன் ஜெ. தன்னைத் தானே சிதைத்து மீட்டுருவாக்கம் செய்து கொள்ளும் ஊக்கமான பறவை என்றே மெய் சிலிர்த்திருக்கிறேன். ஓர் பசியினால் வாடி எழமுடியாத குழந்தையை தின்னுவதுபோன்ற புகைப்படத்தைப் பார்த்து இரக்கமற்றதென மனம் வெம்பியிருக்கிறேன்.
ஆனால் அதற்கெல்லாம் முற்றிலும் வேறான கழுகைக் காணித்திருக்கிறீர்கள். இப்படிப்பட்ட ஓர் கழுகை மனிதன் வளர்ப்பினால் தான் உருவாக்க முடியும் போல. நீங்கள் காட்டியிருப்பது போன்ற குடிசைப் பகுதிகளில் வாழும் மனிதர்கள் கூட தன்னிலையை உணராதவர்கள் அல்லது அப்படி ஆக்கப்பட்டவர்களாகப் பார்க்கிறேன். ஓர் கழுகு தனக்கான வானிலிருந்து பிரிக்கப்பட்டு கூவத்தில் வாழ்வதைப் போல மனிதர்கள் வாழ்கிறார்கள். அந்த வாட்ச்மேன் ஒச்சனும், கருப்பசாமியும், டில்லியும், நைனாவும் யாவரும் இப்படி மாற்றப்பட்ட ஆல்ஃபா, பீட்டா கழுகுகள் தான் என்வரையில்.
“பறவைகள் வானுக்குரியவை” என்பது எத்துனை அற்புதமான வரிகள் ஜெ. இந்நேரம் மன்னரின் இராச்சியத்தில் கூடமைத்து வளர்ந்து வான் நோக்கி சென்ற அடைக்கலாம் குருவிகளை நினைத்துப் பார்க்கிறேன். அவற்றின் பிரபஞ்சப் பசியைப் பற்றி சொல்லியிருந்தீர்கள். அவைகள் அதைத் தேடி வளர்ந்து கொண்டிருக்கும் இந்நேரம். ஆனால் இந்த மனிதக் கழுகுகளின் “தீ” மேல் நோக்கி வளர முடியாது, எந்தவித உந்து சக்தியுமின்றி, தாழ்த்தப்பட்டு, தன் குடலையே தின்னும் நிலைக்கு வருவது கண்டு மனம் நொந்து கொண்டேன்.
வானுக்குரிய கழுகை தன் சுயநலத்திற்காக ஆல்ஃபாவாகவும் பீட்டாவாகவும் நைனா போன்றோர்கள் மாற்றியது போலவே, இந்த சமூகத்தில் அந்தந்த காலகட்ட தேவைக்காக மனிதர்கள் இங்ஙனம் மாற்றப்படுகிறார்கள். அந்த தேவைகள் காலமாற்றத்திற்கேற்ப தேவையற்றுப் போகும் பட்சத்தில் தனக்கான வானின் தொலைவு கண்டு அஞ்சி கூவத்தில் கரைந்துவிடுகிறார்கள்.
தானும் கழுகென்றறியாத அல்லது அறிந்தும் ஆக முடியாத டில்லி வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான் எனும் போது மனம் கனத்துவிட்டது ஜெ.
இது யாருடைய குற்றம். மாற்றம் எங்கிருந்து தொடங்க வேண்டும்? இந்தக் கழுகு மனிதர்களான விளிம்பு நிலை மக்களை எங்ஙனம் உயர்த்த வேண்டும் என்ற சமூகக் கேள்வியை என்னுள் எழுப்பிக் கொண்டேன். அதை நோக்கி பயணப்படுகிறேன்.
அன்புடன்
இரம்யா.
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
நலம். நாடுவதும் அதுவே.
எத்தனை கஷ்டம் இருந்தாலும், ஒரு குழந்தையின் சிரிப்பில் , அதன் மழலை மொழியில் எல்லாம் மறந்து விடுகிறது. கீர்ட்டிங்ஸ் கதையின் முடிவை மட்டும் வைத்துப் பார்த்தால் மேலோட்டமான கதையாக இருந்தாலும், கதை முழுதும் நிரம்பி வழியும் பதட்டமும், உரையாடலும், அனந்தனின் கிண்டலும் ஒரு அரசாங்க அலுவலகத்தின் உண்மைச் சித்திரத்தை, கதை வரைந்துள்ளது. நான் டில்லி மத்திய அரசாங்கத்தில் வேலை பார்த்தபொழுது எனது டெக்னிகல் டைரக்டர் , டிஜி-யிடம் இருந்து போன் வந்தால்கூட, நின்றுகொண்டுதான் பேசுவார்.
ஒரு எழுத்தாளனின் கதையில் அவனே எல்லாமும் என்று தெரிந்தாலும், அந்த டேபிளுக்கு அடியில் விளையாடும் குழந்தை இந்த தொடர் வாசகனுக்கு அறிமுகம் இருப்பதால், அந்தக் குழந்தை யார் என்று தெரிந்து சில வருடங்களுக்கு முன்னால் சென்று வராமல் இருக்க முடியவில்லை. கதையில் வரும் குழந்தையின் பெயரும், எங்களுக்குத் தெரிந்த அந்தக் குழந்தையின் பெயரும் , ‘யா’ வில் முடியும்.
அ.முத்துலிங்கம் அவர்களின், பூமாதேவி கதையில், கதை சொல்லி வளர்ந்த பெண்ணோடு காரில் போய்க்கொண்டே , அவள் குழந்தையாக இருந்தபொழுது , லாண்டரி அறைக்குச் சென்று அவர்கள் காசு போட்டு துவைக்கும் நிகழ்வை நினைவு கூர்வதுபோல் தெரிந்தாலும், புலம் பெயர்ந்தவனின் அமெரிக்க வாழ்க்கையை திறம்பட சித்தரிக்கும் கதை அது.
உங்களின் கதை , என்னுடைய இந்திய மத்திய அரசாங்க வாழ்க்கையையும், அ. முத்துலிங்கம் அவர்களின் பூமாதேவி கதை , என் அமெரிக்க வாழ்வையும் மீட்டெடுப்பதால், உடனிருக்கும் நண்பர்களைப் போல அணுக்கமானவையாக ஆகிவிடுகின்றன.
அன்புடன்,
வ. சௌந்தரராஜன்
அன்புள்ள ஜெ
நலம்தானே?
நூறுகதைகளின் வழியாகச் சென்றுகொண்டிருக்கிறேன். ஒவ்வொரு கதையும் என்னை வெவ்வேறு உலகங்களுக்குள் கொண்டுசெல்கின்றன. ஆனால் இன்றைக்கு ஓர் அனுபவம். எங்களுக்கு சிலசிக்கல்கள். கொடுக்கல்வாங்கலில். மனம் சோர்ந்திருந்தது. அருகே இருக்கும் மலைக்கோயிலுக்குச் சென்றிருந்தோம். மேலே செல்லச்செல்ல மனம் இந்த உலகத்தின் சின்னச் சிக்கல்களில் இருந்தெல்லாம் விடுபட்டுவிட்டது. வேறு ஒரு மனநிலை வந்தமைந்தது.இதெல்லாம் சின்ன விஷயம், வந்தோம் வாழ்ந்து போகலாம் என்று தோன்றிவிட்டது.
அந்த மனநிலை எப்படி வருகிறது என்று யோசித்துக்கொண்டிருந்தேன். அப்போதுதான் வான்கீழ் என்னும் கதை நியாபகம் வந்தது. அற்புதமான கதை. அதை என் மனைவியிடம் சொன்னேன். அவளும் நெகிழ்ந்துவிட்டாள். வானம் முடிவில்லாதது. பூமியிலுள்ள சின்ன விஷயங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டது. ஆன்மீகம் என்பது மண்ணிலிருந்து வானைநோக்கி நம்மை நகர்த்திக்கொள்வதுதான்
கா.மாணிக்கராஜ்
100. வரம் [சிறுகதை]
99. முதலாமன் [சிறுகதை]
98. அருகே கடல் [சிறுகதை]
97. புழுக்கச்சோறு [சிறுகதை]
96. நெடுந்தூரம் [சிறுகதை]
95. எரிமருள் [சிறுகதை]
94. மலைவிளிம்பில் [சிறுகதை]
93. அமுதம் [சிறுகதை]
92. தீவண்டி [சிறுகதை]
91. பீடம் [சிறுகதை]
90. சிந்தே [சிறுகதை]
89. சாவி [சிறுகதை]
88. கழுமாடன் [சிறுகதை]
87. கீர்ட்டிங்ஸ் [சிறுகதை]
86. தூவக்காளி [சிறுகதை]
85. சிறகு [சிறுகதை]
84. வண்ணம் [சிறுகதை]
83. ஆபகந்தி [சிறுகதை]
82. ஆமை [சிறுகதை]
81. கணக்கு [சிறுகதை]
80. சுக்ரர் [சிறுகதை]
79. அருள் [சிறுகதை]
78. ஏழாவது [சிறுகதை]
77. மணிபல்லவம் [சிறுகதை]
76. மூத்தோள் [சிறுகதை]
75. அன்னம் [சிறுகதை]
74. மலையரசி [சிறுகதை]
73. குமிழி [சிறுகதை]
72. லட்சுமியும் பார்வதியும் [சிறுகதை]
71. செய்தி [சிறுகதை]
70. ‘தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 2
70. ‘தங்கப்புத்தகம்’ [குறுநாவல் -1
69. ஆகாயம் [சிறுகதை]
68. ராஜன் [சிறுகதை]
67. தேனீ [சிறுகதை]
66. முதுநாவல்[சிறுகதை]
65. இணைவு [சிறுகதை]
64. கரு [குறுநாவல்]- பகுதி 1
64. கரு [குறுநாவல்]- பகுதி 2
63. ‘பிறசண்டு’ [சிறுகதை]
62. நிழல்காகம் [சிறுகதை]
61. லாசர் [சிறுகதை]
60. தேவி [சிறுகதை]
59. சிவம் [சிறுகதை]
58. முத்தங்கள் [சிறுகதை]
57. கூடு [சிறுகதை]
56. சீட்டு [சிறுகதை]
55. போழ்வு [சிறுகதை]
54. நஞ்சு [சிறுகதை]
53. பலிக்கல் [சிறுகதை]
52. காக்காய்ப்பொன் [சிறுகதை]
51. லீலை [சிறுகதை]
50. ஐந்து நெருப்பு[ சிறுகதை]
49. கரவு [சிறுகதை]
48. நற்றுணை [சிறுகதை]
47. இறைவன் [சிறுகதை]
46. மலைகளின் உரையாடல் [சிறுகதை]
45. முதல் ஆறு [சிறுகதை]
44. பிடி [சிறுகதை]
43.. கைமுக்கு [சிறுகதை]
42. உலகெலாம் [சிறுகதை]
41. மாயப்பொன் [சிறுகதை]
40. ஆழி [சிறுகதை]
39. வனவாசம் [சிறுகதை]
38. மதுரம் [சிறுகதை]
37. ஓநாயின் மூக்கு [சிறுகதை]
36. வான்நெசவு [சிறுகதை]
35. பாப்பாவின் சொந்த யானை [சிறுகதை]
34. பத்துலட்சம் காலடிகள் [சிறுகதை]
33. வான்கீழ் [சிறுகதை]
32. எழுகதிர் [சிறுகதை]
31. நகைமுகன் [சிறுகதை]
30. ஏகம் [சிறுகதை]
29. ஆட்டக்கதை [சிறுகதை]
28. குருவி [சிறுகதை]
27. சூழ்திரு [சிறுகதை]
26. லூப் [சிறுகதை]
25. அனலுக்குமேல் [சிறுகதை]
24. பெயர்நூறான் [சிறுகதை]
23. இடம் [சிறுகதை]
22. சுற்றுகள் [சிறுகதை]
21. பொலிவதும் கலைவதும் [சிறுகதை]
20. வேரில் திகழ்வது [சிறுகதை]
19. ஆயிரம் ஊற்றுக்கள் [சிறுகதை]
18. தங்கத்தின் மணம் [சிறுகதை]
17. வானில் அலைகின்றன குரல்கள் [சிறுகதை]
16. ஏதேன் [சிறுகதை]
15. மொழி [சிறுகதை]
14. ஆடகம் [சிறுகதை]
13. கோட்டை [சிறுகதை]
12. விலங்கு [சிறுகதை]
11. துளி [சிறுகதை]
10. வேட்டு [சிறுகதை]
9. அங்கி [சிறுகதை]
8. தவளையும் இளவரசனும் [சிறுகதை]
7. பூனை [சிறுகதை]
6. வருக்கை [சிறுகதை]
5. “ஆனையில்லா!” [சிறுகதை]
4. யா தேவி! [சிறுகதை]
3. சர்வ ஃபூதேஷு [சிறுகதை]
2. சக்தி ரூபேண! [சிறுகதை]
1. எண்ண எண்ணக் குறைவது [சிறுகதை]