கதைகளின் வழியே… கடிதங்கள்

அன்புள்ள ஜெ

பூனை கதையை இன்றைக்கு வாழ்க்கையின் ஒரு சந்தர்ப்பத்தில் சொல்லநேர்ந்தது. ஒரு குடும்பப்பூசல். எங்கள் வீட்டில் எல்லாரும் கூடியிருந்தோம். எல்லாரும் கவலையும் எரிச்சலும் கொண்டிருந்தோம். நான் பேசுவதற்கு முன் பூனை கதையைச் சொன்னேன். “நாம எதுக்கு இன்னொருத்தரோட பூனையை புலியாக்கணும்?”என்று சொன்னதுமே அத்தனைபேரும் சிரித்துவிட்டார்கள். தமிழில் எழுதப்பட்ட அற்புதமான நகைச்சுவைக்கதைகளில் ஒன்று அது. சந்தேகமே இல்லை. நல்ல நகைச்சுவைக்கதை என்பது சொல்லச்சொல்ல இனிப்பதாகவும் நினைக்க நினைக்க அர்த்தம்கொள்வதாகவும் இருக்கவேண்டும். பூனை அத்தகைய கதை.

ஏ,ராஜா குமரேசன்

அன்பிற்கினிய ஜெ,

தங்களுடைய சிறுகதைகளின் தொடர்ச்சியை வாசித்தும் பகிர்ந்தும் வருகிறேன். ஒவ்வொன்றும் என்னுடைய அனுபவத்தோடு முட்டி மோதி வெள்ளமாக பெருகுகிறது. நான் அதில் நீந்தி கரைகிறேன். முன்பு நான் வாசித்த காடு முற்றிலும் தன்னை வேறாக காட்டுகிறது. இன்று யானைகள் வந்து போன காட்டினை ஏற்கனவே வேறொரு வெளிச்சத்தில் பார்த்திருக்கிறேன். பர்மா காடும்தான்.

காலத்தை முன்னும் பின்னுமாக இந்தச் சிறுகதை ஆட்டுகிறது. என்னுள் உறைந்த ஒரு தோற்றத்தினை அசைத்து மாற்றுகிறது எழுத்து வடிவில் வந்த இந்த பூதங்கள்.

முன்னே சென்றவன் மூங்கில் ஈட்டியும் பின்தொடர்ந்து சென்றவன் வில் அம்பு வைத்திருந்தனர்.  தொடர்ந்து கண்ணனும், முகுந்தனும், சக்கரைவியாதிக்காரனும், பெயர்கள் தற்செயலானதாக தெரியவில்லை!!!

வாழ்க்கையை வலியுறுத்தும் வைணவ கண்ணன் வழிகாட்டுகிறான். முகுந்தன் தன்னுடைய மனதில் வைத்துக் கொண்டிருந்த வன்மத்தை உரித்து விடுகிறது காடும் பசியும், ஒருமையில் விளிக்கின்றான். அவனது இயல்பை பசி வெளிக் கொண்டு வந்துவிடுகிறது.

முதலில் கண்ணன் சட்டை அவிழ்த்து தீயிட்டுக் கொளுத்தி யானைகளை விரட்டுகிறான், இரண்டாவது அபயம் கோரி முகுந்தனும் சட்டையை எரித்து விடுகிறான், மூன்றாவதாக இவனும் சட்டையை கழற்றி எரிந்துவிட்டு சோற்றில் புரண்டு வான் நோக்கி கூவுகிறான். சட்டையை கழற்றுவது வேடம் கலைவது போலவும் படுகிறது.

பசியும் காமமும் ஒன்றே, உடலே நாவாகி உண்கிறான். பின்பு உண்ணும் சோறே இந்த உடல்தான் உடலும் சோறும் பசியும் ஒன்றே என ஆனந்தக் களியாடுகிறான்.

வாசிக்கும் போது காலத்தை பின்னோக்கி திருப்பி ஒரு தரிசனம் உடன் ஒடிவருகிறது. வாசிக்கும் போது மாயவிசை ஒன்று காட்சிகளை மாற்றி மாற்றி போட்டபடியே என்னை முன்னகர்த்துகிறது. மாயாஜாலம்தான். நன்றி.

கண்ணன் கே கே

அன்புள்ள ஜெ,

அற்புதமான உணர்வைத் தந்த கதை  ‘வரம்’. அதை வாசித்த போது பெரியபுராணம் கூறும் இறையடியார்களது நினைவு வந்தது.

திருடனுக்கு எல்லாம் தெரியும்’ என்ற ஆரம்பம், கதையை வாசித்து முடித்தபின் இவன்தான் இறைவனோ என்ற பிரமையைத் தோற்றுவித்தது. அதனால்தான் ஒரு உயிருக்கு வாழும் வரத்தை அவனால் தர முடிந்தது. இறைவனை மனிதவடிவில் தான் இன்றைய உலகில் காணமுடியும் என்பதோடு ‘அன்பே சிவம்’  என்பதுதான் எல்லோரும் புரிந்து கொள்ளக் கூடிய இறைசூத்திரம் என்பதையும் இக்கதை கூறுகிறது.

“பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான் அவன் கருணையுள்ள நெஞ்சினிலே கோயில் கொள்கிறான்” என்பது உண்மையான கூற்று. ‘உள்ளங்கவர் கள்வன்’ இவனுள்ளும் இறைவன் நிச்சயம் இருக்கிறான்.

திருடன் கோயிலில் திருடப் போகிறானா, அந்தப் பெண் திருடனைக் களவாக சந்திக்கப் போகிறாளா, இவளுக்கும் அவனுக்குமுள்ள தொடர்பு என்ன என்றுதான் குறுக்குவழியில் மனம் சிந்தித்ததே தவிர, நல்லவிதமாக யோசிக்க முடியவில்லையே என்ற குற்ற உணர்வு இறுதியில் ஏற்பட்டது உண்மை. எதிர்பாராத திருப்பம் படைப்பின் வெற்றி.

“சொற்களால் நெஞ்சத் திரையில் வரையும் ஓவியம்தான் படிமம் என்பது” இது உங்கள் வசனம் என நினைக்கிறேன்.இந்தக் கதை  ஆரம்பித்த இடத்திலிருந்து முடிவு வரை ஓவியமாய் மனதில் படிந்தது சிறப்பு. ‘ஏழாம் நிலவின் மென்னொளி, தாரவாகினி ஆற்றங்கரை, தென்னந்தோப்பு, குன்றின் அடிவாரம், மேப்பலூர் கோயில், அங்கு உறையும் மலர்ந்தவிழிகளும் கன்னங்கரிய உடலும் கொண்ட பேரழகியான ஸ்ரீமங்கலை பகவதி, குருதிநிறச் சேலையில், பூரண அலங்கார பூஷிதையாய்  நூற்றெட்டு கல்லகல் விளக்குகளின் சிவந்த ஔியில் அனல் கொண்ட  அவளது திருமுகம்……’

ஏகாந்தமான இரவுநேரம், யாருமே எதிர்பாராத ஒரு கணத்தில், தேவியின் இவ்வாறான திவ்யதரிசனம் .ஆகா….நினைத்தாலே மெய்சிலிர்க்கிறதே.

அநாதரவான ஒவ்வொரு உயிரின் மறுமலர்ச்சிக்காகவும் இறைவனின் அற்புத தரிசனம் எங்கோ காத்துக் கொண்டுதான் இருக்கிறது.விரக்தியும், இயலாமையும் கொண்ட எந்த ஒரு உள்ளத்துக்கும் நம்பிக்கையின் ஔிக்கீற்றை வரமாகக் கொடுக்கும் கதையிது.

ரஞ்ஜனி சுப்ரமணியம்

கொழும்பு

100. வரம் [சிறுகதை]

99. முதலாமன் [சிறுகதை]

98. அருகே கடல் [சிறுகதை]

97. புழுக்கச்சோறு [சிறுகதை]

96. நெடுந்தூரம் [சிறுகதை]

95. எரிமருள் [சிறுகதை]

94. மலைவிளிம்பில் [சிறுகதை]

93. அமுதம் [சிறுகதை]

92. தீவண்டி [சிறுகதை]

91. பீடம் [சிறுகதை]

90. சிந்தே [சிறுகதை]

89. சாவி [சிறுகதை]

88. கழுமாடன் [சிறுகதை]

87. கீர்ட்டிங்ஸ் [சிறுகதை]

86. தூவக்காளி [சிறுகதை]

85. சிறகு [சிறுகதை]

84. வண்ணம் [சிறுகதை]

83. ஆபகந்தி [சிறுகதை]

82. ஆமை [சிறுகதை]

81. கணக்கு [சிறுகதை]

80. சுக்ரர் [சிறுகதை]

79. அருள் [சிறுகதை]

78. ஏழாவது [சிறுகதை]

77. மணிபல்லவம் [சிறுகதை]

76. மூத்தோள் [சிறுகதை]

75. அன்னம் [சிறுகதை]

74. மலையரசி [சிறுகதை]

73. குமிழி [சிறுகதை]

72. லட்சுமியும் பார்வதியும் [சிறுகதை]

71. செய்தி [சிறுகதை]

70. ‘தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 2

70. ‘தங்கப்புத்தகம்’ [குறுநாவல் -1

69. ஆகாயம் [சிறுகதை]

68. ராஜன் [சிறுகதை]

67. தேனீ [சிறுகதை]

66. முதுநாவல்[சிறுகதை]

65. இணைவு [சிறுகதை]

64. கரு [குறுநாவல்]- பகுதி 1

64. கரு [குறுநாவல்]- பகுதி 2

63. ‘பிறசண்டு’ [சிறுகதை]

62. நிழல்காகம் [சிறுகதை]

61. லாசர் [சிறுகதை]

60. தேவி [சிறுகதை]

59. சிவம் [சிறுகதை]

58. முத்தங்கள் [சிறுகதை]

57. கூடு [சிறுகதை]

56. சீட்டு [சிறுகதை]

55. போழ்வு [சிறுகதை]

54. நஞ்சு [சிறுகதை]

53. பலிக்கல் [சிறுகதை]

52. காக்காய்ப்பொன் [சிறுகதை]

51. லீலை [சிறுகதை]

50. ஐந்து நெருப்பு[ சிறுகதை]

49. கரவு [சிறுகதை]

48. நற்றுணை [சிறுகதை]

47. இறைவன் [சிறுகதை]

46. மலைகளின் உரையாடல் [சிறுகதை]

45. முதல் ஆறு [சிறுகதை]

44. பிடி [சிறுகதை]

43.. கைமுக்கு [சிறுகதை]

42. உலகெலாம் [சிறுகதை]

41. மாயப்பொன் [சிறுகதை]

40. ஆழி [சிறுகதை]

39. வனவாசம் [சிறுகதை]

38. மதுரம் [சிறுகதை]

37. ஓநாயின் மூக்கு [சிறுகதை]

36. வான்நெசவு [சிறுகதை]

35. பாப்பாவின் சொந்த யானை [சிறுகதை]

34. பத்துலட்சம் காலடிகள் [சிறுகதை]

33. வான்கீழ் [சிறுகதை]

32. எழுகதிர் [சிறுகதை]

31. நகைமுகன் [சிறுகதை]

30. ஏகம் [சிறுகதை]

29. ஆட்டக்கதை [சிறுகதை]

28. குருவி [சிறுகதை]

27. சூழ்திரு [சிறுகதை]

26. லூப் [சிறுகதை]

25. அனலுக்குமேல் [சிறுகதை]

24. பெயர்நூறான் [சிறுகதை]

23. இடம் [சிறுகதை]

22. சுற்றுகள் [சிறுகதை]

21. பொலிவதும் கலைவதும் [சிறுகதை]

20. வேரில் திகழ்வது [சிறுகதை]

19. ஆயிரம் ஊற்றுக்கள் [சிறுகதை]

18. தங்கத்தின் மணம் [சிறுகதை]

17. வானில் அலைகின்றன குரல்கள் [சிறுகதை]

16. ஏதேன் [சிறுகதை]

15. மொழி [சிறுகதை]

14. ஆடகம் [சிறுகதை]

13. கோட்டை [சிறுகதை]

12. விலங்கு [சிறுகதை]

11. துளி [சிறுகதை]

10. வேட்டு [சிறுகதை]

9. அங்கி [சிறுகதை]

8. தவளையும் இளவரசனும் [சிறுகதை]

7. பூனை [சிறுகதை]

6. வருக்கை [சிறுகதை]

5. “ஆனையில்லா!” [சிறுகதை]

4. யா தேவி! [சிறுகதை]

3. சர்வ ஃபூதேஷு [சிறுகதை]

2. சக்தி ரூபேண! [சிறுகதை]

1. எண்ண எண்ணக் குறைவது [சிறுகதை]

முந்தைய கட்டுரைஉடையாள் – கடிதங்கள்
அடுத்த கட்டுரைபிணைப்பு [சிறுகதை]- தனா