கதைகள், கடிதங்கள்

Black and white portrait of an old woman with an angelic smile from Trivandrum, Kerala

அன்புள்ள ஜெ

சென்ற ஆண்டு முதல்முறையாக கேதார்நாத் சென்றேன். கெளரிகுண்டத்திலிருந்து பாதயாத்திரை காலை ஆறுமணிக்கு தொடங்கியது. என்னுடன் வந்த என் மாமாவின் அறிவுரைபடி உணவேதும் அருந்தவில்லை.முழுஉற்சாகத்தில் தொடக்கம் இருந்தாலும் செல்ல செல்ல உடல்   அதன் எல்லையை தொட்டு தொட்டு மீண்டது. இருவரும் ஆளுக்கொரு கைதடியை துணையாக எடுத்து கொண்டோம். வழியில் எங்களை டோலிக்களும் ,கோவேறு கழுதைகளும் கடந்து சென்று கொண்டிருந்தன.

ஒரு கட்டத்தில் எங்கள் நடை தளர்ந்தது. இருவரின் பேச்சு முற்றிலும் நின்றது. பார்வை மட்டுமே மொழியானது.கைதடியே கால்தடத்தின் இடைவெளியை தீர்மானித்தது. பின் எங்கள் இருவரின் பார்வை கூட சந்திப்பதை நிறுத்தி கொண்டன.இருவரின் உடலும் ஒற்றை மனதிற்கு கட்டுபட்டது. என் உடல் அதன் உச்ச வழுவை  அடைந்தது. அப்போதும் நாங்கள் உணரவில்லை உணவின்மையால் தான் இப்படி நிகழ்கிறதென்று.

மதியம் 1200 மணிக்கு கேதார்நாத் சமவெளியில் உள்ள பேஸ் கேம்ப் சென்று சேர்ந்தோம். உணவருந்த முற்பட்டோம் முடியவில்லை. ஆலயத்தை நெருங்கிய போது தான் அதன் கலசம் தென்பட்டது. மந்தாகினி நதியை  கடந்து ஆலயத்திற்குள் நுழைந்ததும் பஞ்சபாண்டவர்கள் தனிச்சிற்பங்களாக இருபுறமும் நின்றார்கள். அவர்களை கடந்து உள்ளே மூலபிரகாரத்திற்கு சென்றால் மூலவர் மலைவடிவமாகவே அமைந்திருந்தார்.

அனைவரும் அவரை சுற்றி கொண்டே தொட்டு அவர் மேல் உள்ள சந்தனம் போல் எதோ ஒரு திரவியத்தை வழித்து கொண்டிருந்தனர். இவரை பார்க்க தான் வந்திருக்கிறோம் என்று எனக்கே சொல்லி கொண்டிருக்கிறேன். தொடமுடியாத ஒரு இலக்கை அனைவரும் தொட்டுவிட்டோம் என்று ஆனந்தபடுகிறார்களா?

விழிகளில் நீர் நிறைந்து வழிந்துகொண்டிருக்கிறது.

நானும் தொடுகிறேன். ஏன்? ஏன்? என்று புலம்புவதை போல வெளியே என் செவி என் சொல்லை கேட்கும்படி  கேட்டுகொள்கிறேன்.ஒன்றுமே புரியவில்லை. இதோ சுற்று முடியபோகிறது இக்கணத்தை தவறவிட்டால் மீண்டும் நிகழுமா? இக்காட்சி.

வெளியே வந்து என் மாமாவிடம் கேட்டேன் எதற்காக இவ்வளவு தூரம். இத்தனை மலையை தாண்டி, மனிதனால் கடவுள் கண்டடைய பட்டார் ?யாராவது முனிவரின் தவத்தில் தோன்றியிருக்கலாம் என்று எளிமையாக சொன்னார்.

அந்த பதிலால் என்னை நிரப்பி கொள்ளவே முடியவில்லை.நிரம்பமுடியாமையே ஆழம் என்ற தமது சொல்லே தற்போது வரை நீடிக்கிறது. இன்றுவரை அக்காட்சியை நிகழ்த்திகொண்டிருக்கிறேன்.

இன்று தேவகியும் மீனாட்சியும்மையும் தென்அறையில் எழுந்த பகவதியை கண்டு விழி கலங்கி அழுகையில் என் அகத்தில் உள்ள காட்சியின் பிரதியாகவே உணர்ந்தேன்.அவர்களுடன் சேர்ந்து நானும் நீர் வடிக்கதான் செய்தேன்.

மாணிக்கம் மூலமாக எழுந்த பகவதியை கொண்டு என் நிரம்பாத ஆழத்தை நிரப்பிகொள்ளமுடிகிறது.அதே மாணிக்கம் நீலாம்பாளை எழச்செய்து இசக்கியம்மாளை நிறைவுறசெய்வான்.

திகழ்வதால் தீ என்பீர்கள்.அவனுள் திகழ்ந்து அவன் சிதையை உண்டு
பின் நீலாம்பாளாகவும்,பகவதிகளாகவும் திகழும் தீ. அத்தீயே குழைக்கும் மையிலும்,அவன் கையிலும்,கையிலுள்ள தூரிகையிலும்,எழும் தேவியாக திகழும் தீ.

கலையின் உச்சத்தில் ஆன்மீகம் வெளிபடுகிறதா?இல்லை ஆன்மீக உச்சமே கலை என்றாகிறதா?

உங்களுக்கும் மாணிக்கத்திற்கும் என்ன வேறுபாடு.அவன் பீடியும் மதுவும் அருந்துவான் நீங்கள் அருந்தமாட்டீர்கள்.உங்களை போலவே அவனும் தன் வாயால் வாங்கிகொள்கிறான்.

பிரம்மனையும் மிஞ்சி நிற்கிறான். தீயே தன் அகமாக கொண்டவன்.உங்களை போலவே

என்றும் நன்றிகளுடன்
மணிவாசகம்
புதுச்சேரி

அன்புள்ள ஜெ,

நூறு கதைகளை மீண்டும் வாசித்துக்கொண்டிருந்தேன். என் அம்மா என்ன கதை என்று கேட்டாள். நான் கதைகளைச் சொன்னேன். வரம் கதையைச் சொன்னபோது அம்மா உணர்ச்சிவசப்பட்டு கைகூப்பிவிட்டாள். “தெய்வம் மனுஷ்யரூபேண”என்று சொன்னாள்

அம்மா ஓர் அனுபவம் சொன்னாள். அம்மாவின் சித்தி கணவனின் வீட்டில் கடுமையான சித்திரவதைக்கு ஆனாள். ஆதரவு யாருமில்லை. பிறந்தவீட்டில் அம்மா அப்பா இல்லை. ஒரே ஒரு குழந்தை. செத்துவிடலாம் என்று முடிவுசெய்து கிளம்பிச் சென்றிருக்கிறார். ஒரு ஆழமான கிணறு மாடசாமி கோயில் அருகே உண்டு. அங்கே சென்று கிணற்றை நோக்கிச் சென்றிருக்கிறாள்

அப்போது காற்றுவீசி மாடன்கோயிலில் உள்ள மணிகள் எல்லாம் அதுவாகவே அடித்தன. அவள் திரும்பிப்பார்த்தபோது மாடசாமி கையில் ஆயுதத்துடன் சிரித்தபடி நிற்பதைக்கண்டால். எவரோ கொளுத்திவைத்த விளக்கு சரிந்து தரையிலே விழுந்து தீ ஓங்கி எரிய சுடரில் முகம் தெரிந்தது

அவ்வளவுதான் மாடசாமி துணை என்று கூவிக்கொண்டே திரும்பிவிட்டாள். கணவனின் வீட்டுக்குப் போகவில்லை. தன் வயதான சித்தி ஒருத்தி ஒரு இடிந்த வீட்டில் தனித்து வாழ்ந்தது தெரிந்து பதினெட்டுகிலோமீட்டர் நடந்தே அங்கே சென்று சேர்ந்தாள். ஒரு இட்லிக்கடை நடத்தினாள். அதை மெஸ் ஆக மாற்றினாள். மகளை கௌரவமாகக் கட்டிக்கொடுத்தாள். கணவனை சேர்த்துக்கொள்ளவே இல்லை. சனிக்கிழமை தோறும் மாடனுக்காக விரதம் எடுப்பாள். ஆனால் கடைசிக்காலத்தில் அந்தக் கணவனை அவள்தான் பார்த்துக்கொண்டாள்

வாழ்க்கைக்கு கதை எந்த அளவு நெருக்கமானது என்று உணர்ந்தேன்

ஆர்.முத்துச்செல்வம்

100. வரம் [சிறுகதை]

99. முதலாமன் [சிறுகதை]

98. அருகே கடல் [சிறுகதை]

97. புழுக்கச்சோறு [சிறுகதை]

96. நெடுந்தூரம் [சிறுகதை]

95. எரிமருள் [சிறுகதை]

94. மலைவிளிம்பில் [சிறுகதை]

93. அமுதம் [சிறுகதை]

92. தீவண்டி [சிறுகதை]

91. பீடம் [சிறுகதை]

90. சிந்தே [சிறுகதை]

89. சாவி [சிறுகதை]

88. கழுமாடன் [சிறுகதை]

87. கீர்ட்டிங்ஸ் [சிறுகதை]

86. தூவக்காளி [சிறுகதை]

85. சிறகு [சிறுகதை]

84. வண்ணம் [சிறுகதை]

83. ஆபகந்தி [சிறுகதை]

82. ஆமை [சிறுகதை]

81. கணக்கு [சிறுகதை]

80. சுக்ரர் [சிறுகதை]

79. அருள் [சிறுகதை]

78. ஏழாவது [சிறுகதை]

77. மணிபல்லவம் [சிறுகதை]

76. மூத்தோள் [சிறுகதை]

75. அன்னம் [சிறுகதை]

74. மலையரசி [சிறுகதை]

73. குமிழி [சிறுகதை]

72. லட்சுமியும் பார்வதியும் [சிறுகதை]

71. செய்தி [சிறுகதை]

70. ‘தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 2

70. ‘தங்கப்புத்தகம்’ [குறுநாவல் -1

69. ஆகாயம் [சிறுகதை]

68. ராஜன் [சிறுகதை]

67. தேனீ [சிறுகதை]

66. முதுநாவல்[சிறுகதை]

65. இணைவு [சிறுகதை]

64. கரு [குறுநாவல்]- பகுதி 1

64. கரு [குறுநாவல்]- பகுதி 2

63. ‘பிறசண்டு’ [சிறுகதை]

62. நிழல்காகம் [சிறுகதை]

61. லாசர் [சிறுகதை]

60. தேவி [சிறுகதை]

59. சிவம் [சிறுகதை]

58. முத்தங்கள் [சிறுகதை]

57. கூடு [சிறுகதை]

56. சீட்டு [சிறுகதை]

55. போழ்வு [சிறுகதை]

54. நஞ்சு [சிறுகதை]

53. பலிக்கல் [சிறுகதை]

52. காக்காய்ப்பொன் [சிறுகதை]

51. லீலை [சிறுகதை]

50. ஐந்து நெருப்பு[ சிறுகதை]

49. கரவு [சிறுகதை]

48. நற்றுணை [சிறுகதை]

47. இறைவன் [சிறுகதை]

46. மலைகளின் உரையாடல் [சிறுகதை]

45. முதல் ஆறு [சிறுகதை]

44. பிடி [சிறுகதை]

43.. கைமுக்கு [சிறுகதை]

42. உலகெலாம் [சிறுகதை]

41. மாயப்பொன் [சிறுகதை]

40. ஆழி [சிறுகதை]

39. வனவாசம் [சிறுகதை]

38. மதுரம் [சிறுகதை]

37. ஓநாயின் மூக்கு [சிறுகதை]

36. வான்நெசவு [சிறுகதை]

35. பாப்பாவின் சொந்த யானை [சிறுகதை]

34. பத்துலட்சம் காலடிகள் [சிறுகதை]

33. வான்கீழ் [சிறுகதை]

32. எழுகதிர் [சிறுகதை]

31. நகைமுகன் [சிறுகதை]

30. ஏகம் [சிறுகதை]

29. ஆட்டக்கதை [சிறுகதை]

28. குருவி [சிறுகதை]

27. சூழ்திரு [சிறுகதை]

26. லூப் [சிறுகதை]

25. அனலுக்குமேல் [சிறுகதை]

24. பெயர்நூறான் [சிறுகதை]

23. இடம் [சிறுகதை]

22. சுற்றுகள் [சிறுகதை]

21. பொலிவதும் கலைவதும் [சிறுகதை]

20. வேரில் திகழ்வது [சிறுகதை]

19. ஆயிரம் ஊற்றுக்கள் [சிறுகதை]

18. தங்கத்தின் மணம் [சிறுகதை]

17. வானில் அலைகின்றன குரல்கள் [சிறுகதை]

16. ஏதேன் [சிறுகதை]

15. மொழி [சிறுகதை]

14. ஆடகம் [சிறுகதை]

13. கோட்டை [சிறுகதை]

12. விலங்கு [சிறுகதை]

11. துளி [சிறுகதை]

10. வேட்டு [சிறுகதை]

9. அங்கி [சிறுகதை]

8. தவளையும் இளவரசனும் [சிறுகதை]

7. பூனை [சிறுகதை]

6. வருக்கை [சிறுகதை]

5. “ஆனையில்லா!” [சிறுகதை]

4. யா தேவி! [சிறுகதை]

3. சர்வ ஃபூதேஷு [சிறுகதை]

2. சக்தி ரூபேண! [சிறுகதை]

1. எண்ண எண்ணக் குறைவது [சிறுகதை]

முந்தைய கட்டுரைகணையாழி,டார்த்தீனியம்
அடுத்த கட்டுரைவண்ணங்களை மீட்டெடுத்தல்