உண்மையில் கதைகள் நமக்குள் நிகழ்த்துவதென்ன என்ற பெருவினாவில் முட்ட வைக்கின்றன இத்தொன்மங்கள். காலத்தில் மெல்ல பின் சென்ற எண்ணங்கள் மனம் எனும் தொல்பொருளாக நம்முள் இருந்து கொண்டே இருக்கின்றன. படிமங்களான அவை தொன்மங்கள் வாயிலாகவே வெளிப்படுகின்றன. வெண்முரசின் எவ்வொரு தொன்மும் வலிந்து திணிக்கப்பட்டதாகவோ வெண்முரசுக்கே உரிய கோணம் வெளிப்படாததாகவோ இருப்பதில்லை.மூன்றில் ஒன்றென பன்னிரு படைக்களத்தின் அத்தியாயங்களை நிறைத்துள்ள அசுரர்கள் குறித்த தொன்மங்களும் அவ்வகையினதே
கட்டுரை பன்னிரு படைக்களம்- சுரேஷ் பிரதீப்