நீலம் நிகழ்ந்தபோது…

வெண்முரசு முழுத்தொகுப்பு : முன்பதிவு

அன்புள்ள ஜெ

நீலம் நாவல் எழுதிய நாட்களைப் பற்றிய மூன்று கட்டுரைகளையும் வாசித்தேன். அக்கட்டுரைகளில் தெரிந்த தவிப்பும் மீட்சியும் அந்நாவலிலும் உள்ளது. நான் என் வாசிப்பில் ஒட்டுமொத்த வெண்முரசே நீலத்தை நோக்கி வந்து நீலத்திலிருந்து மெலே சென்ற ஒன்று என்றுதான் புரிந்துகொள்கிறேன்.

நீலம் பற்றி பல குறிப்புகள் இந்த தளத்திலே வந்திருக்கின்றன. நீலம் நாவலை நான் இப்போதுதான் வந்தடைந்திருக்கிறேன். நானும் என் மனைவியும் அவ்வப்போது வெண்முரசை படித்திருந்தாலும்கூட இப்போதுதான் நீலம் நாவலை அனுபவித்து வாசிக்கிறேன். நீலம் சம்பந்தமான கடிதங்களை எல்லாம் தேடித்தேடி வாசிக்கிறேன். மேலும் மேலும் அந்தச் சொற்கள் அர்த்தப்பட்டுக்கொண்டே இருக்கின்றன

அருண்குமார்

வெண்முரசு விவாதங்கள்

நீலமேகவண்ணனாகிய கண்ணனின் கதையைச் சொல்லும் நவீன நாவல் ‘நீலம்’. கண்ணனின் இளமைத்தோழியான ராதையை மையமாக்கி கண்ணனின் கதை விரிகிறது. ராதை அறியும் கண்ணன் ஒரு சித்திரம். அவளைச்சுற்றி இருப்பவர்கள் அறியும் கண்ணன் இன்னொரு சித்திரம். ராதை அறிவது குழந்தையை, தோழனை, காதலனை. அவள் கொண்டது அழியாத பிரேமை. மறுபக்கம் கம்சனின் சிறையில் பிறந்து கோகுலத்தில் வளர்ந்து மதுரையை வென்றடக்கும் கிருஷ்ணனின் கதை.

நீலம் -வரைபடம்

நீலம் வாசித்துக்கொண்டிருந்தபோது ஒரு விதமான போதைநிலைதான் இருந்தது. அதன்பிறகு கடிதங்களையும் கூடவே வந்துகொண்டிருந்த படங்களையும் பார்த்துப்பார்த்துதான் என்னுடைய எண்ணங்களை நான் வளர்த்துக்கொண்டேன். நீலம் என் வாசிப்பில் ஒரு மாஸ்டர்பீஸ். நீங்கள் எழுதியதிலும்கூட அதுதான் மாஸ்டர்பீஸ் என்று சொல்வேன்

குழலிசை

அவன் அந்த சிறிய பறவைக்குக் காட்டும் கருணை அவன் மனம் நாடிழந்து கூடிழந்து பதைப்பவர்களை எப்படிப் புரிந்துகொள்கிறது என்பதை காட்டுகிறது. அதேபோல அவன் வைரம் போலவும் இருக்கிறான். அறுக்கமுடியாத, அனைத்தையும் அறுக்கிற கூர்மையுடன் இருக்கிறான்

கிருஷ்ணன் வருகை

எனக்கும் அந்த விசித்திரமான அனுபவம் ஒருமுறை அமைந்தது. எப்போதோ ஒருமுறை மேஜைமேல் கிடந்த நீலத்தை எடுத்துப்புரட்டி ஒரு பக்கத்தை வாசித்தேன். வெறும் சொற்களின் வரிசை என்று தோன்றியது . ஒன்றுமே பொருள்படவில்லை.

நீலம்- மொழி மட்டும்

===================================

முந்தைய கட்டுரைமதம் கடந்த ஆன்மிகம்
அடுத்த கட்டுரைதண்தழல்- கடிதம்