ஒருமறுப்பு

அன்பின் திரு.ஜெயமோகன் அவர்களுக்கு:

வணக்கம். சமீப காலமாக உங்கள் வலைத் தளத்திற்கு வரத் தொடங்கியுள்ளேன். உங்களின் அறச் சீற்றம் கொண்ட சிறு கதைகள் தொடரை வாசிக்கும் வாய்ப்பைப் பெற்றேன். ஆழமான எழுத்துக்கள். அறிவைத் தூண்டும் சிந்தனைகள். அறம் வழி நடக்க உந்துதல் அளிக்கும் மன எழுச்சிகள். அவ்வுலகில் பயணம் செய்ய அதைப் படைத்துத் தந்த உங்களுக்கு என் நன்றிகள் பலப் பல.

மார்ச் 30 அன்று, உங்கள் இணையதளத்தில், ’காந்தியைப் பற்றிய அவதூறுகள்’ என்ற தலைப்பில் ஒரு இடுகையிட்டுருந்தீர்கள். அதில் உங்கள் நண்பர் திரு.அரவிந்தன் நீலகண்டன் எழுதிய பதில் கடிதமொன்றையும் இணைத்திருந்தீர்கள். அக்கடிதத்தின் அடிக் குறிப்பில் ‘Breaking India’ என்ற நூலிற்கான அறிமுகத்திற்கான சுட்டி தரப்பட்டிருந்தது. அந்நூலில், 10வது அத்தியாயத்தில், ‘The Berkeley Tamil Chair’ பற்றி எழுதப்பட்டிருக்கின்றது. மிகைப்படுத்தியோ, உண்மையைத் திரித்தோ அல்லது உண்மைக்குப் புறம்பாகவோ எழுதப்பட்ட விபரங்கள் அவை என்று வருத்தத்துடன் இங்கு பதிவு செய்கின்றேன். அங்கு முன்வைக்கப்பட்டிருப்பது அந்த அறக்கட்டளை மீதான அவதூறுகள்.

அந்த அறக் கட்டளையின் நிதி திரட்டும் குழுவிற்கு தலைவன் என்ற பொறுப்பிலிருந்தவன் நான். மேற்கத்திய நாடுகளின் உந்துதல் எதுவுமின்றி, முழுக்க முழுக்க தமிழ் ஆர்வலர்களின் முயற்சியில், 5 வருடங்களுக்கு மேல், சிறுகச் சிறுக சேமித்து, உருவாக்கப் பட்ட அறக் கட்டளை அது. அது நிறுவப்பட்ட நோக்கங்களுக்கும், அந்நூல் தொடுக்கும் குற்றச்சாட்டிற்கும் தொடர்பேயில்லை. நியாயமற்று, அந்த அறக்கட்டளையின் மீது சேறு பூசும் முயற்சிதான் அந்நூல் முன்வைக்கும் குறிப்புகள். அந்நூலில் குறிப்பிடப் பட்டிருக்கும் இரு பேராசிரயர்களை நன்கு அறிவேன். அவர்களைப் பற்றி அந்நூல் எழுப்ப முயலும் சித்திரம், உண்மைக்குப் புறம்பானது. உங்கள் வாசகர்களுக்கு இந்த எதிர்வினையையும் முன்வைக்க வேண்டுகின்றேன்.

உங்கள் விபரத்திற்காக, அந்த குறிப்பிட்ட அத்தியாயத்தின் ஒரு சிறு பகுதியை இத்துடன் இணைத்துள்ளேன்.

அன்புடன்,

குமார் குமரப்பன்,

அன்புள்ள குமார் குமரப்பன்

இதுபற்றி எனக்கு ஏதும் தெரியாதென்பதனால் நான் ஒன்றும் சொல்வதற்கில்லை. உங்கள் மறுப்பை வெளியிடுகிறேன்

ஜெயமோகன்

In 1996, the University of California at Berkeley launched a Tamil Chair, calling it ‘the first of its kind – – in an American University’. The person hired for the Chair was not a native Tamil speaker, but Professor George L. Hart, whose pro-Dravidian politics were mentioned above. One of the major campaigners and fund raisers for the Berkeley Chair was the Federation of Tamil Sangams of North America (FeTNA), whose links with Tamil nationalist movements are explained later in this Chapter. The first visiting Professoe invited to Berkeley as part of the work done by the Chair was Professor Ilakkuvanar Maraimalai from Chennai. Ilakkuvanar had previously visited the U.S.A. in 1987 to attend a linguistic conference. At that conference, he expressed his delight to have learned ‘many things about the Mormon religion and the Church of the Latter Day Saints’. The Mormon Bible reminded him ‘of a prominent religious literature in Tamil, TIRUVACHAGAM’. Like a true Dravidianist, Ilakkunavar believes that the Government of India discriminates against its Tamil citizens and that ‘India remains North’, and that present-day India is a ‘torture camp for religious minorities’. His writings feature topics like ‘sexual assault on Christian nuns’ in India, and, ‘I love America’. He praised the ‘nobility and greatness of George Hart’, and in turn, Hart wrote to the Government of India, supporting Ilakkunavar’s Dravidianist positions, including his opinions on the status of Tamil studies in India. Hart used the Berkeley Tamil Studies Chair to boost those scholars who emphasise the separateness of Tamil from Indian traditions. He accomplishes this by organizing forums where such scholars come together to reinforce Dravidian separatist identity politics in India. For instance, he organized a meeting of Western Tamil educators featuring Thomas Malten, whose Tamil Studies department at Cologne University was closely associated with Germany’s Lutheran Church (whose activities in India are discussed in Chapter 17 and also Appendix H). Another guest was Norman Cutler of the University of Chicago, who studied Tamil under an American National Defence Foreign Language fellowship and whose work is considered to have opened up for U.S. policymakers ‘an India that does not speak Hindi and looks back to nearly 2,000 years of tradition outside of Sanskrit’. Tamil conferences organized by the Berkeley Tamil Chair often feature papers that deconstruct traditional Tamil images of devotion, in the same manner as is found in modern Dravidian politics. For example, a paper by Hart interprets RAMAYANA as ‘a strange work’ filled with contradictions between ‘Brahminical thought’ and ‘martial valour’. He sees RAMAYANA primarily and yet ‘subtly’ as a way to oppress the Dravidians. Hart claims that this was later reflected in the way that the ‘great military and imperial power of the Cholas was leavened by the Brahminical system that they supported’. This nuanced anti-Brahminism is camouflaged in academic language. Hart stresses that his interpretation ‘brings to mind some modern political themes’. In this manner, India’s classics are DECONSTRUCTED as a method to tease out the oppression inherent in Indian civilization.

முந்தைய கட்டுரைகாந்தியைப் பற்றிய அவதூறுகள்
அடுத்த கட்டுரைஓரினச்சேர்க்கை- அனுபவக்கட்டுரை