சிவம், புழுக்கச்சோறு- கடிதங்கள்

அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு,

சோறே தெய்வம். இது குடிகள் அனைவரும் அறிந்த ஒன்று தான். அன்றாடத்தில் உழல்வதால் நாம் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. பசியைக் கூட இப்பொழுது பெரிதாக பொருட்படுத்துகிறார்களா என்ற ஒரு சந்தேகம் உண்டு. ஆனால்., பசி அதற்குப்பின்னான சோறு, இவ்விரண்டையும் ஒரு நாடகியத் தருணமாகவே நான் எடுத்துக்கொள்வேன். சிறிது பசியெடுத்தாளும், அதைப் பெருமளவு என்னுள் வளர்த்துக்கொள்வேன். ஏனென்றால், அந்த வேலை கிடைக்கப்போகும் சோற்றை அமிர்தமாக்குவது அதுதான். சுடுச்சோற்றை வடித்தவுடனே, தட்டிலில் கொட்டி, கையை விரித்து அதனருகே கொண்டு செல்வேன். அதிலிருந்து வரும் வெம்மையான ஆவி, நரம்புகளை மேலும் சுண்டச்செய்து பசியை ஒருபடி மேலே கொண்டு செல்லும். அப்பொழுது அருந்தும் முதற்கவலம், பெரும்பேறு. அதையே இக்கதையிலும் காண்கிறேன்.

சோற்றுக்கணக்கு கதையில் வரும் பசியைவிட, இக்கதையில் உருவகிக்கும் பசி மிகப்பெரியது. அதற்கு துணைசெய்யவே இன்சுலின் உபயோகிக்கும் சர்க்கரை நோயாளியின் பசி எடுத்தாளப்படுகிறது. நீங்கள் சொல்வது போல, சோறு என்ற ஒற்றை நினைப்பே மொத்த உடலாக மாறி உள்ளது. இந்த பசியைப் போக்க கவித்துவமான உச்சம் தேவைப்படுகிறது. அதுவே அந்த பழங்குடிகள் கொண்டாடும் சோரிகொடை நிகழ்வு. சோற்றுக்குவியலுக்குள் புழு போல நெளிந்து வளைந்து சோற்றைத்தின்று குவிக்கும் தருணம். நாம் அனைவருமே புழுக்கள் தாம் என்று உணரும் கணம். சோறு தான் தெய்வமாக நின்று அருள்பாலிக்கிறது. நம் கூட்டு நனவிலி மனத்தில் இது இன்றும் இருக்கவே செய்கிறது.

காணிக்காரர்கள் வாத்தியங்களை முழங்கியவுடன், மூப்பன்  சோற்றுக்குவியலுக்குள் துள்ளி குதித்து, வானுயர எம்பி, தாவி, சோற்றை நாலப்புறங்களிலும் வீசியெரிந்து புரியும் களி நடனம், என் அகத்தினுல் நான் சோற்றை மிக விரும்பி உண்ணும்தோறும் ஆடும் நடனமாகவே காண்கிறேன். பெரும்பசியின் இறுதியில் உண்ணும் முதல் கவலம் சோறு வரவழைக்கும் ஆற்றவல்லா கண்ணீரை நினைவப்படுத்தியதற்கு நன்றி. சோறு அளிக்கும் மிகப்பெரும் கொண்டாட்டம் அளப்பரியது. இம்மானுடப்பிறவி தேடிச்சோறு நிதந்திங்கத்தான் வேண்டும். சோறே தெய்வம்.

கார்த்திக் குமார்

 

அன்புள்ள ஜெ

புழுக்கச்சோறு ஒரு விசித்திரமான கதை.அந்தக்கதையை வாசிக்கும்போது நினைத்துக்கொண்டேன், குடும்பம் காதல் காமம் ஆகிய மூன்று வழக்கமான கருக்களிலிருந்து வெளியே சென்றோம் என்றால் நமக்குச் சொல்வதற்கு எத்தனை கதைகள் உள்ளன என்று.

சோறு என நாம் சொல்லும் இப்பொருள் நமக்கு ஒரு வயசில் அறிமுகமாகி சாகும் நாள் வரை கூடவே இருக்கிறது. அது நமக்கு ஒன்றேதான் பொருளை அளிக்கிறது என்று நினைக்கிறோம். ஆனால் அதன் பொருள் மாறிக்கொண்டே இருக்கிறது. சிலசமயம் சட்டென்று ஒரு பெரிய அனுபவத்தில் அதன் அர்த்தம் முழுமையாகவே மாறிவிடுகிறது. பசியை அறிந்தவனே சோறை அறியமுடியும்

 

ராஜ் சிவக்கண்ணன்

அன்புடன் ஆசிரியருக்கு

விடயபுரத்தில் ஒரு பதினேழு வயதுப் பையன் கட்டுவிரியன் பாம்பொன்றை எடுத்து சில நாட்களாக வீட்டில் வளர்த்திருக்கிறான். அவனை அது கடித்துவிட்டது. பாம்பு கடித்ததும் அவனுக்கு முதலில் குளிக்கத்தான் தோன்றியிருக்கிறது. ஆற்றில் போய் விழுந்திருக்கிறான். விஷமேறி மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டவன் இன்று இறந்திருக்கிறான். அவன் எரிந்து கொண்டிருப்பதன் நாற்றத்தை நாசியில் உணர்ந்தபடியே, அது சிதைநாற்றம்தான் என்று தெரியாமலேயே சிவம் கதையை வாசித்துக் கொண்டிருந்திருக்கிறேன். சில நேரங்களில் இது போன்ற வினோதமான தற்செயல்கள் அந்த நாளினை மர்மமான விதத்தில் சுவாரஸ்யப் படுத்திவிடுகின்றன.

அன்புடன்

 

சுரேஷ் பிரதீப்

அன்புள்ள ஜெ

சிவம் கதையை வாசித்து மீண்டும் ஒரு இடைவேளைக்குப்பின் வாசித்தேன். எங்கோ ஓர் இடத்தில் நமக்கு மனித உடலும் ஓர் உணவு என்னும் எண்ணம் இருக்கிறது. நான் சுடுகாட்டில் வெட்டியான்கள் ஜோக்காக கிழங்கு சுடுவது என்று பேசுவதைக் கேட்டிருக்கிறேன். நமக்குள் ஆழமாக இருக்கும் ஒரு பெர்வெர்ஷன். அதை வெளியேகொண்டுவந்து நேருக்குநேர் பார்க்கிறார்கள் யோகிகள் என நினைக்கிறேன்

சந்திரகுமார் எம்.ஆர்.

100. வரம் [சிறுகதை]

99. முதலாமன் [சிறுகதை]

98. அருகே கடல் [சிறுகதை]

97. புழுக்கச்சோறு [சிறுகதை]

96. நெடுந்தூரம் [சிறுகதை]

95. எரிமருள் [சிறுகதை]

94. மலைவிளிம்பில் [சிறுகதை]

93. அமுதம் [சிறுகதை]

92. தீவண்டி [சிறுகதை]

91. பீடம் [சிறுகதை]

90. சிந்தே [சிறுகதை]

89. சாவி [சிறுகதை]

88. கழுமாடன் [சிறுகதை]

87. கீர்ட்டிங்ஸ் [சிறுகதை]

86. தூவக்காளி [சிறுகதை]

85. சிறகு [சிறுகதை]

84. வண்ணம் [சிறுகதை]

83. ஆபகந்தி [சிறுகதை]

82. ஆமை [சிறுகதை]

81. கணக்கு [சிறுகதை]

80. சுக்ரர் [சிறுகதை]

79. அருள் [சிறுகதை]

78. ஏழாவது [சிறுகதை]

77. மணிபல்லவம் [சிறுகதை]

76. மூத்தோள் [சிறுகதை]

75. அன்னம் [சிறுகதை]

74. மலையரசி [சிறுகதை]

73. குமிழி [சிறுகதை]

72. லட்சுமியும் பார்வதியும் [சிறுகதை]

71. செய்தி [சிறுகதை]

70. ‘தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 2

70. ‘தங்கப்புத்தகம்’ [குறுநாவல் -1

69. ஆகாயம் [சிறுகதை]

68. ராஜன் [சிறுகதை]

67. தேனீ [சிறுகதை]

66. முதுநாவல்[சிறுகதை]

65. இணைவு [சிறுகதை]

64. கரு [குறுநாவல்]- பகுதி 1

64. கரு [குறுநாவல்]- பகுதி 2

63. ‘பிறசண்டு’ [சிறுகதை]

62. நிழல்காகம் [சிறுகதை]

61. லாசர் [சிறுகதை]

60. தேவி [சிறுகதை]

59. சிவம் [சிறுகதை]

58. முத்தங்கள் [சிறுகதை]

57. கூடு [சிறுகதை]

56. சீட்டு [சிறுகதை]

55. போழ்வு [சிறுகதை]

54. நஞ்சு [சிறுகதை]

53. பலிக்கல் [சிறுகதை]

52. காக்காய்ப்பொன் [சிறுகதை]

51. லீலை [சிறுகதை]

50. ஐந்து நெருப்பு[ சிறுகதை]

49. கரவு [சிறுகதை]

48. நற்றுணை [சிறுகதை]

47. இறைவன் [சிறுகதை]

46. மலைகளின் உரையாடல் [சிறுகதை]

45. முதல் ஆறு [சிறுகதை]

44. பிடி [சிறுகதை]

43.. கைமுக்கு [சிறுகதை]

42. உலகெலாம் [சிறுகதை]

41. மாயப்பொன் [சிறுகதை]

40. ஆழி [சிறுகதை]

39. வனவாசம் [சிறுகதை]

38. மதுரம் [சிறுகதை]

37. ஓநாயின் மூக்கு [சிறுகதை]

36. வான்நெசவு [சிறுகதை]

35. பாப்பாவின் சொந்த யானை [சிறுகதை]

34. பத்துலட்சம் காலடிகள் [சிறுகதை]

33. வான்கீழ் [சிறுகதை]

32. எழுகதிர் [சிறுகதை]

31. நகைமுகன் [சிறுகதை]

30. ஏகம் [சிறுகதை]

29. ஆட்டக்கதை [சிறுகதை]

28. குருவி [சிறுகதை]

27. சூழ்திரு [சிறுகதை]

26. லூப் [சிறுகதை]

25. அனலுக்குமேல் [சிறுகதை]

24. பெயர்நூறான் [சிறுகதை]

23. இடம் [சிறுகதை]

22. சுற்றுகள் [சிறுகதை]

21. பொலிவதும் கலைவதும் [சிறுகதை]

20. வேரில் திகழ்வது [சிறுகதை]

19. ஆயிரம் ஊற்றுக்கள் [சிறுகதை]

18. தங்கத்தின் மணம் [சிறுகதை]

17. வானில் அலைகின்றன குரல்கள் [சிறுகதை]

16. ஏதேன் [சிறுகதை]

15. மொழி [சிறுகதை]

14. ஆடகம் [சிறுகதை]

13. கோட்டை [சிறுகதை]

12. விலங்கு [சிறுகதை]

11. துளி [சிறுகதை]

10. வேட்டு [சிறுகதை]

9. அங்கி [சிறுகதை]

8. தவளையும் இளவரசனும் [சிறுகதை]

7. பூனை [சிறுகதை]

6. வருக்கை [சிறுகதை]

5. “ஆனையில்லா!” [சிறுகதை]

4. யா தேவி! [சிறுகதை]

3. சர்வ ஃபூதேஷு [சிறுகதை]

2. சக்தி ரூபேண! [சிறுகதை]

1. எண்ண எண்ணக் குறைவது [சிறுகதை]

முந்தைய கட்டுரைதற்பிரிந்து அருள்புரி தருமம் – அருணாச்சலம் மகராஜன்
அடுத்த கட்டுரைபச்சை- கடிதங்கள்