ஜெ,
முதலாமன் கதை ஒரு ஃபேபிள் போல மனதிலே நின்றுவிட்டது. பலகோணங்களில் அதை நினைத்துக்கொண்டே இருக்கிறேன். ஊருக்கு ஒருவன் போகவேண்டும் என்றால் யார் போக முன்வருவார்கள்? எவனுக்கு சுயநலம் இல்லையோ எவனுக்கு பயமே இல்லையோ அவன்தானே? அவன் முதலாமன், தலைசிறந்தவன். எல்லா சமூகப்புரட்சிகளிலும் அவன் களப்பலியாவான். தன்னலவாதிகள் உயிரைக் கவ்விக்கொண்டு பிழைத்துக்கிடப்பார்கள். தன்னலவாதிகள் தியாகிகளைக் கொண்டாடுவதே தன்னலம் மீது அவனுக்கே உருவாகும் குற்றவுணர்ச்சியால்தான் இல்லையா?
நவீன இலக்கியம் என நாம் சொல்லும் எந்த அம்சங்களும் இல்லாத கதை. ஒரு நாட்டுப்புறக்கதைபோல தொன்மம் போல ஒலிக்கிறது. ஆனால் நவீன வாழ்க்கையின் ஒரு முக்கியமான கருவை பேசுகிறது. நவீன இலக்கியத்தின் சாத்தியக்கூறுகள் முடிவே இல்லாதவை
பாஸ்கர் சி
***
அன்பு ஜெ,
காட்டை வெறியுடன் பார்க்கும் ஊரைத் தான் இங்கு சுற்றிலும் பார்த்துக் கொண்டிருக்கிறேன். “ஊரை பசியுடன், உடைமைவெறியுடன் காடு உற்றுநோக்கிக் கொண்டே இருந்தது.” என்ற சித்தரிப்பு புனைவைக் கட்டமைத்து, அதில் அமிழ்ந்து கொள்ள ஏதுவாயிருந்தது. பின்னும் இரவில் காட்டுடன் இணைந்து கொள்ளும் ஊர்.. அருமை.
இயற்கையையே தெய்வமாக்கி வழிபடும் தொல்குடி தமிழர்கள் தானே நாம். அந்த சங்கச் சித்திரம் போல் அமைந்தது இந்தக் கதை. குளிகன்,மாதி, பிறுத்தா, கடுத்தா, நீலி, கேசி, முத்தி, சோதி, நாகினி என நூற்றெட்டு தெய்வங்கள் என்றீர்களே. நூற்றெட்டு ஊர்களுக்குமான தெய்வங்கள். அவர்களின் குழந்தைகளாக மக்கள். அப்படியே இருந்து உள்ளுணர்வுகளால் வழிநடத்தப்பட்ட, மூதாதைகளை வணங்கிய ஓர் தொல்குடி அழிந்து போன இடத்தில் கண்டெடுக்கப்பட்ட நடுகல்லை வைத்து புனைவை ஊற்றி உருவாக்கிய கதை எனக் கண்டடைந்தேன் ஜெ.
“பைதல் ஒக்கல் தழீஇ அதனை
வைகம் வம்மோ வாய்மொழிப் புலவீர்
நனந்தலை உலகம் அரந்தை தூங்கக்
கெடுவில் நல்லிசை சூடி
நடுகல் ஆயினன் புரவலன் எனவே“
என்ற புறநானூற்று வரிகளை நினைவுகூர்கிறேன் ஜெ. அது காளியனே தான். ஊருக்காக தன் உயிரை காலமாக்கியவர்கள். காலமே அவர்களாய் ஆனவர்கள். குல தெய்வங்களை நினைத்துப் பார்க்கிறேன். எங்கள் குல தெய்வத்தின் பெயர் இருளப்பசாமி. இந்த குலதெய்வம் பெரும்பாலும் தூரத்தில் காடுகளில் தான் வாழ்கிறது. குடும்பத்தின் நல்லது கெட்டதுகளுக்கு காட்டுக்குள் சென்று அந்த இடத்தை கண்டுபிடித்து திருத்தி பலியும், பொங்கலும் கொடுப்பார்கள். இன்று அந்த சிறுபிராய நினைவுகளை மீட்டினேன். அங்கு இருந்தது மிக நீண்ட கருங்கல் மட்டுமே. ஆம் அது நடுகல்லே தான். எங்கள் ஊரிலுள்ள இரண்டு கோயிலையும் நினைத்துப் பார்க்கிறேன். ஒன்று முப்பிடாரி, இன்னொன்று மாரியாத்தாள். இருவருமே இயற்கை தெய்வங்கள். வளர்ந்து பெரிதான பின்னர் தான் திருவில்லிபுத்தூர் ஆண்டாளையும் ரெங்கமன்னாரையும் அறிந்தேன். அதுவரை எனக்குத் தெரிந்தவர்கள் இவர்கள் தான். இது எங்கள் கதை தான். தொல்குடி தமிழர்கள் அனைவரின் கதையே தான்.
குலத்திலுள்ள அத்தனைபேரும் தெய்வமாவதில்லை. தெய்வமாவதற்கு அவன் முதலாமனாக வேண்டுமே. நடுகற்கள் தோறும் இனி காளியனையே காண்பேன் ஜெ. நன்றி.
அன்புடன்
இரம்யா.
***
அன்பு ஜெ,
“ஒவ்வொன்றும் பொன் என மாறும் ஒரு தருணம் உண்டு.” அது போலவே ஒவ்வொரு வரத்திற்கும் ஒரு காலமும், யாரால் கொடுக்கப்பட வேண்டுமென்றும் ஒன்று இருக்கிறதே. இங்கு வரம் மூவருக்குக் கிடைத்திருக்கிறது. ஸ்ரீ தேவிக்கு அவள் வாழ்க்கைக்கான உந்து சக்தி, மேப்பலூர் பகவதி கோயிலுக்கு அதன் மறுபிறப்பு, திருடன் திருடிக் கொண்ட முத்தம். வரங்களால் நிறைந்து ததும்பியுள்ளது கதை. வரம் அளிக்கையில் இருக்கும் திருடனின் மனநிலையை இலயித்தேன். இத்தகையதொரு மனமுவந்த வரத்தை எந்த மனம் தான் விரும்பாது?? வரம் என்றால் அப்படி இருக்க வேண்டும்.
ஒரு தேரையாக மாறிப் போயிருந்த ஸ்ரீதேவியின் தனிமையின் கனவுகளை எண்ணிப் பார்த்தேன். அந்த முடிவிலி கருங் கிணருக்குள் தன்னை மாய்க்கத் துணிந்த அகோரத் தனிமையும், வறுமையும், துக்கத்தின் உச்சியும் வரம் பெறத் தகுந்த நேரமாகப் பட்டது. வரம் பெற்ற இரண்டு தேவியாரும் காலத்தில் மிளிர்வது கண்டு மகிழ்ச்சி பொங்கியது.
ஆனாலும் ஏதோ உறுத்தியது. மீண்டும் கதையைப் படித்தேன். அதில் நீங்கள் திருடனைப் பற்றியல்லவா சொல்லியிருக்கிறீர்கள்.
அப்படிப் பார்த்தால் “வரம்” ஒரு வகையில் கைதேர்ந்த திருடன் சொன்ன கதை போல தோன்றியது. ஒரு நுட்பமான கதை போல… நடந்த ஒன்றை வேறுவகையாக மாற்றி வரம் கொடுத்தார் போல பெருமையடித்துக் கொள்ளுகிற கதையாக… இறுதி முடிபில் வேறொன்றாக மாற்றி கண்ணீர் கதையாக… அப்படியும் ஒரு திருடன் அளந்துவிட்ட கதையாக சிரிப்பு வந்தது.
இரண்டு வகையிலும் அருமையான கதை ஜெ. நன்றி.
அன்புடன்
இரம்யா.
***
அன்புள்ள ஜெ
வரம் கதை நெகிழ்ச்சியான கவித்துவமான ஒரு கவிதை. ஒரு திருடன் தெய்வமாக வந்து அளிக்கும் வரம். அவன் சாமானியனாக இருக்கலாம். அவனுக்கு பணம் இல்லாமலிருக்கலாம். அவன் மனம் கனியும்போது தெய்வமாக ஆகிவிடுகிறான். தெய்வமாக ஆனால் மானுடனால் எதையும் அளிக்கமுடியும்.
அந்த தரிசனம் என்ன என்று யோசித்துக்கொண்டிருந்தேன். அது தெய்வதரிசனம். அல்லது அது ஸ்ரீதேவி கண்ட ஆத்மதரிசனம். அவள் அவளையே தேவியாகப் பார்க்கிறாள். அதன்பின் அவளுக்கு இந்த பூமியில் தோல்வி என்பதே இல்லை
சந்தானகிருஷ்ணன்
100. வரம் [சிறுகதை]
99. முதலாமன் [சிறுகதை]
98. அருகே கடல் [சிறுகதை]
97. புழுக்கச்சோறு [சிறுகதை]
96. நெடுந்தூரம் [சிறுகதை]
95. எரிமருள் [சிறுகதை]
94. மலைவிளிம்பில் [சிறுகதை]
93. அமுதம் [சிறுகதை]
92. தீவண்டி [சிறுகதை]
91. பீடம் [சிறுகதை]
90. சிந்தே [சிறுகதை]
89. சாவி [சிறுகதை]
88. கழுமாடன் [சிறுகதை]
87. கீர்ட்டிங்ஸ் [சிறுகதை]
86. தூவக்காளி [சிறுகதை]
85. சிறகு [சிறுகதை]
84. வண்ணம் [சிறுகதை]
83. ஆபகந்தி [சிறுகதை]
82. ஆமை [சிறுகதை]
81. கணக்கு [சிறுகதை]
80. சுக்ரர் [சிறுகதை]
79. அருள் [சிறுகதை]
78. ஏழாவது [சிறுகதை]
77. மணிபல்லவம் [சிறுகதை]
76. மூத்தோள் [சிறுகதை]
75. அன்னம் [சிறுகதை]
74. மலையரசி [சிறுகதை]
73. குமிழி [சிறுகதை]
72. லட்சுமியும் பார்வதியும் [சிறுகதை]
71. செய்தி [சிறுகதை]
70. ‘தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 2
70. ‘தங்கப்புத்தகம்’ [குறுநாவல் -1
69. ஆகாயம் [சிறுகதை]
68. ராஜன் [சிறுகதை]
67. தேனீ [சிறுகதை]
66. முதுநாவல்[சிறுகதை]
65. இணைவு [சிறுகதை]
64. கரு [குறுநாவல்]- பகுதி 1
64. கரு [குறுநாவல்]- பகுதி 2
63. ‘பிறசண்டு’ [சிறுகதை]
62. நிழல்காகம் [சிறுகதை]
61. லாசர் [சிறுகதை]
60. தேவி [சிறுகதை]
59. சிவம் [சிறுகதை]
58. முத்தங்கள் [சிறுகதை]
57. கூடு [சிறுகதை]
56. சீட்டு [சிறுகதை]
55. போழ்வு [சிறுகதை]
54. நஞ்சு [சிறுகதை]
53. பலிக்கல் [சிறுகதை]
52. காக்காய்ப்பொன் [சிறுகதை]
51. லீலை [சிறுகதை]
50. ஐந்து நெருப்பு[ சிறுகதை]
49. கரவு [சிறுகதை]
48. நற்றுணை [சிறுகதை]
47. இறைவன் [சிறுகதை]
46. மலைகளின் உரையாடல் [சிறுகதை]
45. முதல் ஆறு [சிறுகதை]
44. பிடி [சிறுகதை]
43.. கைமுக்கு [சிறுகதை]
42. உலகெலாம் [சிறுகதை]
41. மாயப்பொன் [சிறுகதை]
40. ஆழி [சிறுகதை]
39. வனவாசம் [சிறுகதை]
38. மதுரம் [சிறுகதை]
37. ஓநாயின் மூக்கு [சிறுகதை]
36. வான்நெசவு [சிறுகதை]
35. பாப்பாவின் சொந்த யானை [சிறுகதை]
34. பத்துலட்சம் காலடிகள் [சிறுகதை]
33. வான்கீழ் [சிறுகதை]
32. எழுகதிர் [சிறுகதை]
31. நகைமுகன் [சிறுகதை]
30. ஏகம் [சிறுகதை]
29. ஆட்டக்கதை [சிறுகதை]
28. குருவி [சிறுகதை]
27. சூழ்திரு [சிறுகதை]
26. லூப் [சிறுகதை]
25. அனலுக்குமேல் [சிறுகதை]
24. பெயர்நூறான் [சிறுகதை]
23. இடம் [சிறுகதை]
22. சுற்றுகள் [சிறுகதை]
21. பொலிவதும் கலைவதும் [சிறுகதை]
20. வேரில் திகழ்வது [சிறுகதை]
19. ஆயிரம் ஊற்றுக்கள் [சிறுகதை]
18. தங்கத்தின் மணம் [சிறுகதை]
17. வானில் அலைகின்றன குரல்கள் [சிறுகதை]
16. ஏதேன் [சிறுகதை]
15. மொழி [சிறுகதை]
14. ஆடகம் [சிறுகதை]
13. கோட்டை [சிறுகதை]
12. விலங்கு [சிறுகதை]
11. துளி [சிறுகதை]
10. வேட்டு [சிறுகதை]
9. அங்கி [சிறுகதை]
8. தவளையும் இளவரசனும் [சிறுகதை]
7. பூனை [சிறுகதை]
6. வருக்கை [சிறுகதை]
5. “ஆனையில்லா!” [சிறுகதை]
4. யா தேவி! [சிறுகதை]
3. சர்வ ஃபூதேஷு [சிறுகதை]
2. சக்தி ரூபேண! [சிறுகதை]
1. எண்ண எண்ணக் குறைவது [சிறுகதை]