இந்தக் கதைகள் நவீன தலவரலாறுகளாக உள்ளன.
முதுநாவல் மரம் அருகே கோயிலும் தர்காவும் உருவான கதை, அமிர்தலட்சுமி கோயில், மேப்பலூர் ஸ்ரீமங்கலை, கழுமாடன் கோயில் என்று ஒவ்வொன்றும் தலவரலாறு டெம்ப்ளேட்டில் உள்ளது. சட்டென்று ‘எழுதாக் கிளவி’ நூலில் ஸ்டாலின் ராஜாங்கம் கக்கன் சிலை, அன்னை ஆசிரமம் பள்ளி என்று தேடிச் செல்லும் கதைகளுடன் இணைதத்துக்கொள்ளத் தோன்றுகிறது.
முதலாமான் கதையில் காளியனுக்கு ஒரு நினைவுச்சின்னம் வைக்கவேண்டும் என்று பேசிக்கொள்வது பிளாக் ஹியூமர் ஆகவும் எடுத்துக்கொள்ளலாமோ?
இணையத்தில் சும்மா தேடிய கண்ணூர் மாவட்டத்தில் மிருதங்க சைலேஸ்வரி கோயில் என்று சுவாரசியமான பெயரும் கதையும் கொண்ட இடம் தென்பட்டது. கூடவே இதைப் பற்றி விக்கிபீடியாவில் அலெக்சாண்டர் ஜேக்கப் என்ற காவல்துறை உயரதிகாரி பேசிய தலவரலாறும் உள்ளது! இவரது ஆளுமையை பார்த்தால் ரோசாரியோ போல இருப்பார் என நினைக்கிறேன்.
மதுசூதனன் சம்பத்
***
அன்புள்ள ஜெ
நூறுகதைகள் வழியாக நீங்கள் உங்களை நூறாக உடைத்து வேறுவேறு நிலங்களில் வீசி வேறுவேறு வாழ்க்கைகளை வாழ்ந்து மீண்டிருக்கிறீர்கள். பலகதைகள் இனிமையான மயிலிறகு போன்ற தோற்றம் கொண்டவை. உதாரணமாக கீர்ட்டிங்ஸ், பிரசண்டு. மனிதமனம் நல்லனவற்றை நாடும் கணத்தில் ஒரு தெய்வீகத்தன்மையை உணர்கிறது. அதை எழுதிக்காட்டிய எழுத்தாளர்கள் சிலர்தான். செக்கோவ் போல. அந்த உலகைச்சேர்ந்த கதைகள் அவை. வாழ்த்துக்கள்
எஸ்.டி.மணிமாறன்
அன்பு ஜெ
குளிகன் குருமன், சிண்டன், கரியாத்தன் என பெயர்கள் கூட இந்தக் கதையில் வரலாற்றுச் சுவடாய்த் தெரிந்தது. கழுவேற்றம் பற்றிய முழுமையான, நுணுக்கமான சித்தரிப்பை முதன் முறையாக இங்கு தான் கண்டேன். படிக்கும் போதே நெஞ்சு படபத்திருந்தது. ஒரு வெறிபோல காரியாத்தனைக் காக்க குளிகன் போல என் மனமும் துடித்திருந்தது.
கழுவில் ஏறத் தயாரான கார்யாத்தனின் மனம் கண்டும், அவனின் எண்ணத்தையும் கண்டு துடுக்குற்றேன். இந்த கதையைப் படிப்பதற்கு சற்று முன்னர் தான் நாட்டார் வழக்காற்றியலையும், நாட்டார் வழிபாட்டு முறைகளையும், அவர்களின் நம்பிக்கைகளையும் சடங்குகளையும் படித்துக் கொண்டிருந்தேன். தொடர்ந்து படித்த இந்தக் கதையில் அதைப் பொருத்தி காரியாத்தனின் நம்பிக்கையை பார்த்து நின்றேன். தொடர்ந்து கர்மத்தின் வினைகளை பல கதைகளில் சொல்லி வந்திருக்கிறீர்கள். தன் பாவம், முன்னோர் பாவம், சார்ந்தோர் பாவம் என ஒரு வகையில் அனைத்து வினையும் ஒரு நிகழ்த்தகவில் நம்மை தாக்கும் என்பதான நம்பிக்கை இது.
இந்தக் கதையில் நீங்கள் சொல்லிய பெண்களைப் பார்க்கிறேன். காமத்தினாற்பட்டு தனக்கிருக்கும் அதிகார நிலையைப் பயன்படுத்தி தன்மேல் விருப்பமற்ற ஒருவனை வற்புருத்தி புணரத்துடிக்கும் பெண்ணின் மன நிலை. காரியாத்தான் அடி வங்குகையில் நின்று பார்த்து சிரித்துக் கொண்டிருக்கும் இரக்கமற்ற மனநிலை. இங்கு காதல் இல்லை. வன்புணர்வும், அதிகார துஷ்பிரயோகமும் தான் உள்ளது. ஒரு வகையில் எப்பொழுதுமே நான் ஒடுக்கப்பட்ட சாதியினரையும், பெண்களின் நிலையயும் ஒன்றாகவே முற்கால சமூகத்தில் பொருத்திப் பார்த்ததுண்டு. பெண்கள் எக்குலத்தில் பிறந்தாலும் ஒடுக்கப்பட்டவர்களாகவே இருந்துள்ளனர். ஒரு வகையான சமூகப் பயம் அவர்களை அறுபது வயது முதியவரை திருமணம் செய்து கொள்ளச் சொல்லும் போது எதிர்த்துப் பேசாத மெளனத்தை அளித்திருக்கிறது. அவர்களுக்காக ஒரு பரிதாபமும் இருந்ததது. ஆனால் வன்புணர்ச்சி மனநிலை எந்நிலையிலும் கண்டிக்கப்படத் தக்கதே. பெண்களிலும் வன்புணர்ச்சி மனநிலையும் அதன் குரூரமும் சமூகத்தில் இருந்து தான் வருகிறது. அதைப் பேசிய மிகச் சில கதைகளில் இதுவும் ஒன்றாகப் பார்க்கிறேன். ”கடைசிவரை சம்மதிக்க மாட்டாளுக” என்பது போன்ற பெண்களின் ஆழ்மன அப்பட்டங்களை நீங்கள் பேசும் போது எப்பொழுதுமே “அட ஆமாம்ல!” என்று நான் ஆச்சரியப்படுவதுண்டு.
இதை படித்து முடித்து, சிந்தித்துக் கொண்டிருக்கையில் ஒரு குறள் நினைவில் வந்தது. “பெருமைக்கும் ஏனை சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல்” அத்துடன் குறளினிது என்ற உங்களின் பேச்சில் அதற்கான விளக்கமும் சேர்ந்தே நினைவிற்கு வந்தது. ’கருமம்’; ’கல்’ என்ற இரு வார்த்தைகளும் ஒரு சேர வந்ததால் இருக்கலாம். ஆனால் இங்கு காரியாத்தான் சொல்லும் தேவகிப்பிள்ளையின் கர்ம வினையையும் அது தரப்போகும் எதிர் கால சிறுமையயும் நினைத்துக் கொண்டேன். மனம் நெருடும் கதை. நன்றி.
அன்புடன்
இரம்யா.
***
அன்புள்ள ஜெ
கழுமாடன், பீடம் இரு கதைகளுமே வரலாற்றின் வண்டல்பரப்பைப் பற்றியவை. எழுதப்படாத கதைகளின் வரலாறு. இலக்கியம் அதைத்தான் கவனிக்கும். அவற்றில் வெற்றியின் களிப்பும் பெருமையும் இல்லை. ஆனால் ஒடுக்கப்பட்ட ஆவேசமும் ஒருபோதும் அடங்காத அறச்சீற்றமும் உள்ளது. எந்த எழுத்தாளனும் எழுதவேண்டியது அதைத்தான்
சங்கரநாராயணன்
***
100. வரம் [சிறுகதை]
99. முதலாமன் [சிறுகதை]
98. அருகே கடல் [சிறுகதை]
97. புழுக்கச்சோறு [சிறுகதை]
96. நெடுந்தூரம் [சிறுகதை]
95. எரிமருள் [சிறுகதை]
94. மலைவிளிம்பில் [சிறுகதை]
93. அமுதம் [சிறுகதை]
92. தீவண்டி [சிறுகதை]
91. பீடம் [சிறுகதை]
90. சிந்தே [சிறுகதை]
89. சாவி [சிறுகதை]
88. கழுமாடன் [சிறுகதை]
87. கீர்ட்டிங்ஸ் [சிறுகதை]
86. தூவக்காளி [சிறுகதை]
85. சிறகு [சிறுகதை]
84. வண்ணம் [சிறுகதை]
83. ஆபகந்தி [சிறுகதை]
82. ஆமை [சிறுகதை]
81. கணக்கு [சிறுகதை]
80. சுக்ரர் [சிறுகதை]
79. அருள் [சிறுகதை]
78. ஏழாவது [சிறுகதை]
77. மணிபல்லவம் [சிறுகதை]
76. மூத்தோள் [சிறுகதை]
75. அன்னம் [சிறுகதை]
74. மலையரசி [சிறுகதை]
73. குமிழி [சிறுகதை]
72. லட்சுமியும் பார்வதியும் [சிறுகதை]
71. செய்தி [சிறுகதை]
70. ‘தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 2
70. ‘தங்கப்புத்தகம்’ [குறுநாவல் -1
69. ஆகாயம் [சிறுகதை]
68. ராஜன் [சிறுகதை]
67. தேனீ [சிறுகதை]
66. முதுநாவல்[சிறுகதை]
65. இணைவு [சிறுகதை]
64. கரு [குறுநாவல்]- பகுதி 1
64. கரு [குறுநாவல்]- பகுதி 2
63. ‘பிறசண்டு’ [சிறுகதை]
62. நிழல்காகம் [சிறுகதை]
61. லாசர் [சிறுகதை]
60. தேவி [சிறுகதை]
59. சிவம் [சிறுகதை]
58. முத்தங்கள் [சிறுகதை]
57. கூடு [சிறுகதை]
56. சீட்டு [சிறுகதை]
55. போழ்வு [சிறுகதை]
54. நஞ்சு [சிறுகதை]
53. பலிக்கல் [சிறுகதை]
52. காக்காய்ப்பொன் [சிறுகதை]
51. லீலை [சிறுகதை]
50. ஐந்து நெருப்பு[ சிறுகதை]
49. கரவு [சிறுகதை]
48. நற்றுணை [சிறுகதை]
47. இறைவன் [சிறுகதை]
46. மலைகளின் உரையாடல் [சிறுகதை]
45. முதல் ஆறு [சிறுகதை]
44. பிடி [சிறுகதை]
43.. கைமுக்கு [சிறுகதை]
42. உலகெலாம் [சிறுகதை]
41. மாயப்பொன் [சிறுகதை]
40. ஆழி [சிறுகதை]
39. வனவாசம் [சிறுகதை]
38. மதுரம் [சிறுகதை]
37. ஓநாயின் மூக்கு [சிறுகதை]
36. வான்நெசவு [சிறுகதை]
35. பாப்பாவின் சொந்த யானை [சிறுகதை]
34. பத்துலட்சம் காலடிகள் [சிறுகதை]
33. வான்கீழ் [சிறுகதை]
32. எழுகதிர் [சிறுகதை]
31. நகைமுகன் [சிறுகதை]
30. ஏகம் [சிறுகதை]
29. ஆட்டக்கதை [சிறுகதை]
28. குருவி [சிறுகதை]
27. சூழ்திரு [சிறுகதை]
26. லூப் [சிறுகதை]
25. அனலுக்குமேல் [சிறுகதை]
24. பெயர்நூறான் [சிறுகதை]
23. இடம் [சிறுகதை]
22. சுற்றுகள் [சிறுகதை]
21. பொலிவதும் கலைவதும் [சிறுகதை]
20. வேரில் திகழ்வது [சிறுகதை]
19. ஆயிரம் ஊற்றுக்கள் [சிறுகதை]
18. தங்கத்தின் மணம் [சிறுகதை]
17. வானில் அலைகின்றன குரல்கள் [சிறுகதை]
16. ஏதேன் [சிறுகதை]
15. மொழி [சிறுகதை]
14. ஆடகம் [சிறுகதை]
13. கோட்டை [சிறுகதை]
12. விலங்கு [சிறுகதை]
11. துளி [சிறுகதை]
10. வேட்டு [சிறுகதை]
9. அங்கி [சிறுகதை]
8. தவளையும் இளவரசனும் [சிறுகதை]
7. பூனை [சிறுகதை]
6. வருக்கை [சிறுகதை]
5. “ஆனையில்லா!” [சிறுகதை]
4. யா தேவி! [சிறுகதை]
3. சர்வ ஃபூதேஷு [சிறுகதை]
2. சக்தி ரூபேண! [சிறுகதை]
1. எண்ண எண்ணக் குறைவது [சிறுகதை]