அஞ்சலி : கர்ணன்

மூத்த எழுத்தாளர் கர்ணன் மறைந்தார்.20-07-2020 அன்று மதுரை செல்லூரில் அவருடைய இல்லத்தில் காலமானார்.

தையற்கலைஞராக தொழில்புரிந்தவர். நா.பார்த்தசாரதி, ஜெயகாந்தன் ஆகியோரின் காலகட்டத்தைச் சேர்ந்தவர்.

அவருடைய சிறுகதைகளையும் உள்ளங்கள், ஊமை இரவு ஆகிய நாவல்களையும் வாசித்திருக்கிறேன். கர்ணனின் எழுத்து  அக்காலகட்டத்தில் பெருவாரியாக வந்த பிரபல எழுத்தின் மொழியிலும் அமைப்பிலும் முற்போக்குக் கருத்துக்களைச் சொல்வது. இலக்கியத்திற்கும் வணிக எழுத்துக்கும் நடுவே அமைவது. பூவை.எஸ்.ஆறுமுகம், எச்.ஆர்.சென்னகிருஷ்ணன் என ஒருவரிசை எழுத்தாளர்கள் அன்றிருந்தனர். அவர்களில் ஒருவர். இலக்கியத்தை ஒரு நேர்மையான சமூக – அறிவியக்கமாக முன்னெடுத்தவர்கள் அவர்கள்.

கர்ணனின் நூல்களாக எழுத்தாளர் உஷாதீபன் குறிப்பிடுபவை.

நாவல்கள்

1) உள்ளங்கள்   1980

2) காந்தத் தூண்டிலில் சிக்கிய கனவுகள் 1978

3) மயங்காத மனசுகள் 2003

4) ஊமை இரவு 2009

5) பாலைவனத்தைக் கடக்கும் பசுக்கள் 2008

6) மறுபடியும் விடியும் 2008

7) திவ்யதாரிணி 2011.

சிறுகதைகள்

1) கனவுப்பறவை 1964

2) கல்மனம் 1965

3) மோகமுக்தி 1967

4) மறுபடியும் விடியும் 1968

5) புலரும் முன்… 1974

6) வசந்தகால வைகறை 1977

7) பட்டமரத்தில் வடிந்த பால் 1994 (

) இந்த மண்ணின் உருவம் 1999

9) மாறும் காலங்களில் இதுஒரு மதன காலம் 2002

10) இசைக்க மறந்த பாடல் 2004

11) முகமற்ற மனிதர்கள் 2004

12) நெருப்பில் விளைந்த நிலவுப்பூ 2009

13) பொழுது புலர்ந்தது 2013

14) வாழ்ந்ததின் மிச்சம் 2015

கட்டுரைகள்

1) கி.வா.ஜ. முதல் கண்ணதாசன்வரை 2011

2) அகம் பொதிந்தவர்கள் 2012

3) வாழ்விக்கும் மனிதர்கள் 2014

4) வெளிச்சத்தின் பிம்பங்கள் 2015

வரலாறு

1) அவர்கள் எங்கே போனார்கள் 2005

2) சரித்திரம் உருவாக்கிய சந்திப்பு 2011

3) இன்று இவர்கள் 2013

4) இந்தியாவின் எரிமலை 1979

5) விடிவை நோக்கி 1980

6) ரத்தம் தோய்ந்த அந்த நாட்கள் 1981

7) சிட்டகாங் புரட்சி வீரர்கள் 1981

ஆன்மீகம்

ஆத்ம நிவேதனம் 2008

கவிதை

நினைவின் திரைக்குள்ளே 2014

கர்ணன்

முந்தைய கட்டுரைசெயல்வழி சென்றடைவோம் அவரவர் அகயிலக்கை-விலையில்லாமல் 200 தன்மீட்சி
அடுத்த கட்டுரைஅ முத்துலிங்கம் – கலந்துரையாடல் நிகழ்வு