ஆண்டு இயம்பிய உளவே! – சங்கப்பாடல்கள் இசையுடன்
அன்பு ஜெமோ,
ஒரு மகிழ்ச்சியான விஷயம்.
அமேஸானின் சர்வதேச இசை டாப்#10 பட்டியலில் சந்தம் இசைத்தொகுப் பு இடம் பிடித்துள்ளது. பாப் மார்லி போன்ற மாபெரும் இசை க்கலைஞர்கள், கொரியாவின் பிரம்மாண்டமான பிடிஎஸ் போன்ற இசைக்குழுக்கள் இருக்கும் பட்டியல். இது எப்படி நிகழ்ந்தது என்று இன்னும் புரியவில்லை. நண்பர் ஒருவர் அழைத்து சொன்னபோதுதான் எனக்கே தெரியும். தரவிறக்க கணக்குகளின் படி மாறிக்கொண்டிருக்கும் இப்பட்டியலில் நேற்று (15 ஜூலை) சந்தம் #7 இடத்தில் இருந்தது.
உங்களின் ஒரு கட்டுரையில் வந்த ‘எந்தத்துறையில் உன் உள்ளுணர்வு திறக்கிறதோ அதற்காகவே நீ பிறந்தாய்’ என்ற ஒரு வாக்கியத்தால் உந்தப்பட்டு நான் இசையமைப்பதை முக்கியமான செயலாக எடுத்துக்கொண்டேன். யாரும் செய்யாத பெரிய செயல்களை விளையாட்டாக முயன்றுபா ர்க்கத் தொடங்கினேன்.
நன்றி!
அன்புடன்,
ராஜன் சோமசுந்தரம்
***