உலகம் யாவையும்-கடிதங்கள்

அன்பு ஜெயமோஹன், வணக்கம். நடராஜகுருவும் காரி டேவிஸும் காணும் கனவு உலகம் அற்புதமானது. சிறுகதை உலகம் யாவையும் அறிவுஜீவிகள் தமது சிந்தனைத் தடத்தை மறுபரிசீலனை செய்ய வைக்கும். இசைக் கலைஞர்கள், ஓவியர்கள் மற்றும் சில எழுத்தாளர்கள் பூலோக எல்லைகளுக்கு அப்பாற்பட்டு இயங்குவது அந்தக் கனவு உலகின் சாத்தியத்திற்கு அச்சாரமாகும். நன்றி.

சத்யானந்தன்.

அன்புள்ள சத்யானந்தன்

ஓருலகம் என்ற கனவு உண்மையில் நவீன ஐரோப்பாவை உருவாக்கிய மாமனிதனின், மகாகவி கதேயின் சிருஷ்டி

நன்றி
ஜெ

அன்புள்ள ஜெயமோகன் சார்,

நலமா. ‘உலகம் யாவையும்’ ஒரு உன்னதச் சிறுகதை. ‘உலகம் எல்லாம் ஒன்றே!’. தேசங்கள் என்பது மனிதர்கள் வகுத்ததுதான். உண்மையில் தேசங்கள் எல்லாம் இறைவன் படைப்பில் இல்லை. தேசங்களின் வரைபடங்கள் போர்களால் உலகச்சிறுகதைகள்வகுக்கபடுகின்றன. போர்கள் மனிதர்களின்
பேராசைகளால் நிகழ்த்தப்படுகின்றன. போர்களை மனிதர்கள் கற்பிதங்களால் நியாயப்படுத்துகிறார்கள்._
கற்பிதங்கள் பலவகை. இனம், மொழி என்பனவாக. இனங்களின், மொழிகளின் வரலாறு சில ஆயிரம் வருடங்களே. பல விதமான கலவைகளில் தேசிய இனங்களை உருவாக்குகிறார்கள். சுயநலவாதிகள், அறிவு ஜீவிகள் அவற்றை கற்பிகிறார்கள். தேசங்களின் எல்லைகளாக கற்பனை கோடுகள் பூமியின் உடல் எங்கும்.

தான் கொண்ட கொள்கைக்காகச் சிறை செல்லத் தயாராக இருக்கும் ‘கெர்ரி’ போன்ற லட்சியவாதிகள் கனவு என்றாவது ஒரு நாள் நனவாகும் என்ற நம்பிக்கை இருக்கிறது. தேசங்களின் எல்லை கோடுகளை அழிக்க வேண்டியதில்லை. மனிதர்களின் மன வேறுபாடுகளைக் களைந்தால் போதும்.

இந்தச் சிறுகதை மூலம் ஒரு விதை உங்களது வாசகர்கள் மனதில் விதைக்கபட்டிருகிறது.

அன்புடன்
குரு

அன்புள்ள குருமூர்த்தி பழனிவேல்

நன்றி.

எப்போதும் சிந்தனை ஒரு விதைதான். இன்று சாதாரணமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள சிந்தனைகளின் ஆரம்ப வடிவங்களைப் பார்க்கையில் உயிருள்ள எதுவும் முளைவிடும் என்ற எண்ணமே உருவாகிறது

ஜெ

முந்தைய கட்டுரைஉலகச்சிறுகதைகள்
அடுத்த கட்டுரைகதைகள், கடிதங்கள்