மூங்கில்[சிறுகதை] சுஷீல்குமார்

அப்பா தனது ஓவியப் பரம்பரையைப் பற்றி அடிக்கடி என்னிடம் சொல்லுவார். அவ்வளவு கம்பீரமாக, பெருமையாக. பத்மநாபபுரம் அரண்மனையில் இருக்கும் ஒரு பிரசித்தி பெற்ற ஓவியம் எங்கள் கொள்ளுத் தாத்தா வரைந்தது தான். பெரிய மகாராஜா இளையவருக்கு யானையேறப் பயிற்சி கொடுக்கும் ஒரு ஓவியம். அந்த யானை யார் சொல்லியும் பணியவில்லை. தாத்தா சென்று ஏதோ மந்திரங்களைச் சொல்லி தனது ஓவியத் தூரிகையால் அதன் துதிக்கையில் தட்டிக்கொடுக்க, அது அவர் சொன்னபடியெல்லாம் நின்றிருக்கிறது. அந்த ஓவியத்திற்காக தாத்தாவிற்குப் பத்து மரக்கா விதைப்பாடு நிலம் பரிசாகக் கிடைத்தது.

மூங்கில்- சுஷீல்குமார்

முந்தைய கட்டுரைவெண்முரசு ரீடர்
அடுத்த கட்டுரைகழுமாடன், மூத்தோள் -கடிதங்கள்