எழுத்தாளர்கள் பாராட்டப்படுவதில்லை என்று சொல்லிவந்த நாஞ்சில்நாடன் பாராட்டு வேண்டாமையா வேண்டாமையா என்று தூக்கத்தில் எழுந்து அமர்ந்து கதறுவதாகவும் ஆச்சி அவரது இடுப்பிலே ஒரு மந்திரத்தாயத்தை கட்டியபின் கொஞ்சம் சமனம் இருப்பதாகவும் தகவல்.
நாஞ்சிலை வேளாளர் மகாசபை அவர் ஒரு நல்ல வேளாளர் என கண்டுபிடித்து போஸ்டர் ஒட்டியிருந்தார்கள். சாகித்யமாமணி, கலைஅக்காதமி போன்ற பல விருதுகளை அவர் பெற்றிருப்பதாக அவர்களுக்கு பராபரியாக செய்தி போய் சேர்ந்தது ஆச்சரியம்தான்
கோவை பாராட்டுக்கூட்டம் பற்றி செல்வேந்திரன் குறிப்பு. நல்ல நாஞ்சில்தமிழில் சொன்னால் ‘வெளங்கிரும்’