ராஜன் குறை என்பவர் யார்?
‘திராவிட மனு’
திராவிட மனு- இரு எதிர்வினைகள்
திராவிட மனு- இரட்டை நாக்குகள்
‘திராவிட மனு’- மேலும் எதிர்வினைகள்
திராவிட மனு- கடைசியாக
திரிப்பு அரசியலின் முகங்கள்
கருத்தியலும் கழைக்கூத்தும்- கடிதங்கள்
அன்னியநிதியும் போலிச்சிந்தனைச்சூழலும்
ஏ.பி.ராஜசேகரன் தன் முகநூல் குறிப்பில் பேராசிரியர் ரகுபதி 2004லேயே இந்தக்கட்டுரையை ராஜன் குறை- ஜெயரஞ்சன் கூட்டணி உருவாக்கிய நாஸி ஆவணத்திற்கான கடுமையான மறுப்பாக எழுதியிருக்கிறார்கள் என்பதை சுட்டிக்காட்டியிருக்கிறார். தமிழில் வெளியாகியிருக்கிறது. இருந்தும் மூலக்கட்டுரையே இப்போது நான் சுட்டியபின்புதான் பலர் கவனத்திற்கு வருகிறது. வந்தபின்னரும் தந்திரமான மௌனம் வழியாக, அல்லது சிலவகை மாயமான சமாளிப்புகள் வழியாக கடந்துபோகவே பெரும்பாலும் நம்முடைய அறிவுச்சமூகம் முயல்கிறது.
இந்த விவகாரம் வெளிவந்ததுமே பா.செயப்பிரகாசம் போன்றவர்கள் பாய்ந்துசென்று ராஜன் குறைக்கு ‘நீ என்னவேணுமானாலும் எழுது ராசா’ என ஆதரவளிப்பதை புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் நாள்தோறும் முகநூலில் பொங்கும் கூட்டம் எங்கே என்று பார்க்கிறேன். சரி, இப்போது விடுவோம். 2004ல் ரகுபதியின் கட்டுரை வந்தபோது இவர்கள் ஆற்றிய எதிர்வினைதான் என்ன?
நான் இதுவரை இந்தக் கட்டுரையைக் குறிப்பிட்டு கண்டித்தவர்களில் தலித் அல்லாதவர்கள் எத்தனைபேர் என எண்ணித் தரும்படி கேட்டேன். ஐந்தாறுபேர் கூட இல்லை. தனக்கு அரசியலார்வமே இல்லை என்பதுபோன்ற அப்பாவிப் பாவனைகளும் [இளங்கோ கிருஷ்ணன்போல], எளிமையான கிண்டல்கள் வழியாக கடந்துசெல்லும் இடைநிலைச் சாதி நடிப்புகளும்தான் மிகுதி [உதாரணம் உலகத்திலுள்ள அனைத்துக்கும் அரசியல் கருத்து சொல்லும் கார்ல் மார்க்ஸ் கணபதி. அவருக்கு இதில் கருத்தே இல்லை. மெல்லிய நையாண்டி மட்டுமே. அந்த நையாண்டி உண்மையில் தலித்துக்கள் மீதானது என்பது எவருக்கும் புரியும்]
மார்க்ஸியர்கள் ,திராவிடர்களின் தரப்பின் செவிகுத்தும் மௌனம் திகைப்படையவைப்பது.சிலருக்கு இந்த மொத்த விவாதமே ஜெயமோகனால் உருவாக்கப்பட்டது, ஆகவே நாங்கள் சும்மா இருக்கிறோம் என்பதுபோன்ற தந்திர நிலைபாடு. சிலருக்கு இது எனக்கும் ராஜன்குறைக்குமான சண்டை என்ற நிலைபாடு. [உதாரணம் அ.மார்க்ஸ். அவர் இன்னும் இக்கட்டுரையை கண்டிக்கவில்லை]. நான் சொன்ன அனைத்தும் இந்த ஆய்வாளர்களால் மும்மடங்கு ஆவேசமாக சொல்லப்பட்டுள்ளது.
இப்படித்தான் நாம் இயங்கிக்கொண்டிருக்கிறோம். ஓராண்டு கழித்து இக்கட்டுரைகளை மீண்டும் வெளியிடுகிறேன். இந்த நாடகக்காதல் என்னும் விஷயம் அன்று மேலும் பலமடங்காக பெருகியிருக்கும். மேலும் உயிர்களை வாங்கியிருக்கவும் வாய்ப்பு. அன்று இப்படி இக்கட்டுரைகள் இந்த தளத்தில் வந்ததே தெரியாது என துணுக்குற்று பிறகு தந்திரமான அமைதியை அடைவார்கள்
ஏ.பி.ராஜசேகரன் குறிப்பு
பேராசிரியர்கள் ஆனந்தி/ராஜன்குறை/ஜெயரஞ்சன் எழுதிய கட்டுரைக்கு பேராசிரியர் லட்சுமனன் Chinnaiyan Lakshmanan EPWல் மறுப்பு எழுதியிருந்தார் அதுபோலவே பேராசிரியர் முனைவர் கோ.ரகுபதியும் Ragupathi Koilpillai அதே காலக்கட்டத்தில் மறுப்பு எழுதியிருக்கிறார். இன்று போலவே அன்றும் “முற்போக்கு” சமூகம் எந்த விவாதமும் செய்யாமல் கடந்து போனது. ‘தலித்துகளின் மீது அறிவு வன்முறை‘ என தலைப்பிட்ட பேராசிரியர் முனைவர் கோ.ரகுபதியின் கட்டுரை புதியகோடாங்கி 2004 ஜூலை (பக். 15 – 18) இதழில் வெளியானது. அந்த கட்டுரையை பகிர்கிறேன்
ஏ.பி.ராஜசேகரன் முகநூலில்https://www.facebook.com/rajasekaranab
a