ஈரோட்டில் என் நண்பர்கள் பசுமைபாரதம், இளைய ஆணிகள் என்ற இரு அமைப்புகளை நடத்துகிறார்கள். சுற்றுச்சூழல் சார்ந்த கருத்துக்களை பரப்புவது மரம் நடுவது பொது சிவில் உணர்வை பிரச்சாரம்செய்வது போன்ற நேர்நிலையான செயல்பாடுகள் மட்டும் கொன்டவை இந்த அமைப்புகள்
தேசிய விடுமுறைநாட்கள் தேசிய சிந்தனையை ஒருகணமேனும் உருவாக்குவதற்குரியவை வெறும் விடுமுறைகள் அல்ல என்பதை அவர்கள் பிரச்சாரம்செய்து வருகிறார்கள். குறிப்பாக அன்றைய தினம் தொலைக்காட்சிஊடகம் வெறும் சினிமா நிகழ்ச்சிகளாகவே அளிப்பதை கண்டித்து வருகிறார்கள்
தேசிய விடுமுறை நாட்களில் தொலைக்காட்சியை புறக்கணிக்க வேன்டும் என்ற கோரிக்கையை பல்லாயிரம் கார்டுகள் வழியாகவும் நாளிதழ்கள் வழியாகவும் மின்னணு ஊடகம் மூலமாகவும் சொல்லி வருகிறார்கள்.
வரும் ஜனவரி 26 அன்றும் தொலைக்காட்சிகளை முற்றாக மூடிவிடும்படி கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்
தொடர்புக்கு
பாபு
பசுமை பாரதம்
எண் 09842771700