தீவண்டி,சாவி- கடிதங்கள்

கதைத் திருவிழா-23, தீவண்டி [சிறுகதை]

அன்புள்ள ஜெ

ஜான் ஆபிரகாமின் கலை முழுமையடையாதது, அவர் நன்றாக கன்ஸீவ் செய்தார் அதை திரையில் கொண்டுவர முடியவில்லை அவரால் என்று நீங்கள் எழுதியிருந்தீர்கள். ஆனால் அவர்மேல் உங்களுக்கு ஈர்ப்பும் அவருடன் பழக்கமும் இருந்திருக்கிறது என்று சொல்லியிருந்தீர்கள். அந்தப்பின்னணியில் இந்தக்கதை அசாதாரணமான ஒன்று.

செயற்கையான புரட்சிகரம், கலகத்தன்மை ஆகிய எதையும் அவர்மேல் ஏற்றவில்லை. அவருடைய இயல்பான நகைச்சுவையும் ஒருவகையான கள்ளமில்லாத தன்மையும் இக்கதைகளில் வந்துகொண்டிருக்கின்றன. அவர் தன்னியல்பாலேயே கட்டற்றவராகவும் விளையாட்டுத்தனம் மிக்கவராகவும் இருக்கிறார்

அவருக்கும் இக்காவுக்குமான உறவு மிக அழகானது. விளையாட்டுத்தனமாக இக்கா ஜானை வரையறைசெய்துகொண்டே செல்கிறார். சாட்சிகளே இல்லாத புனிதன், புனிதர்களைச் சுற்றி குப்பைசேர்கிறது எல்லாம் அழகான வரிகள். அவன் மனதில் உள்ள சினிமாவை எடுத்தான், மனமே கந்தரகோலமாகத்தான் இருக்கும்- இது இக்கா சொல்லும் அற்புதமான வரி. ஜானே அவரைப்பற்றி அதைத்தான் சொல்லியிருப்பார்

மகேந்திரன்

***

തീവണ്ടി വായിച്ചു.മലയാളത്തിൽ ജോണിനെപ്പറ്റി കവിതകളുണ്ടെങ്കിലും ശ്രദ്ധേയമായ ഒരു ചെറുകഥ ഞാനിതുവരെ വായിച്ചിട്ടില്ല. മനോഹരമായ കഥക്കു നന്ദി.

ബുദ്ധിജീവിയും അരാജകവാദിയുമായിരുന്ന ജോണിനെപ്പോലൊരാളെ മനസ്സിലാക്കാനും അദ്ദേഹത്തിൻ്റെ മരണശേഷവും ആ മനുഷ്യനോടുള്ള കരുതൽ കാത്തു സൂക്ഷിക്കാനും കഴിയുന്നു സാധാരണക്കാരനായ ഇക്കക്ക്. വലിയൊരു പ്രതിഭയെ ഒരു സാധാരണ മനുഷ്യൻ തൊട്ടറിയുന്നതിൻ്റെ മനോഹരമായ ആവിഷ്കാരം.

ജയമോഹൻ ഈ കഥയെഴുതിയ കാര്യം രാവിലെത്തന്നെ വൽസൻ മാഷെ അറിയിച്ചു.

[தீவண்டி வாசித்தேன். மலையாளத்தில் ஜான் பற்றி கவிதைகள் உண்டு என்றாலும் முக்கியமான கதை ஏதும் எழுதப்படவில்லை. அழகான கதைக்கு நன்றி

அறிவுஜீவியுல் அராஜகவாதியுமாக இருந்த ஜானைப் போன்ற ஒருவரை புரிந்துகொள்ளவும் அவருடைய சாவுக்குப்பின்னரும் அவருடனான இணக்கத்தை பேணிக்கொள்ளவும் சாதாரணமனிதரான இக்காவால் முடிகிறது. பெரிய ஒரு மேதையை எளிய மனிதன் தொட்டறிவதன் மிக அழகான சித்தரிப்பு இக்கதை

காலையிலேயே வத்ஸன் மாஸ்டரை கூப்பிட்டு ஜெயமோகன் இந்தக்கதையை எழுதிய செய்தியை தெரிவித்தேன்

பி.ராமன் – கவிஞர்]

கதைத் திருவிழா-20, சாவி [சிறுகதை]

அன்புள்ள ஜெ

சாவி ரசித்துச் சிரித்து வாசித்த சிறுகதை. அதன் அடுக்குகள் எல்லாவற்றையும் நான் வாசித்தேன் என்றே சொல்லமுடியாது. குரங்கு கருவிகளை கையாளத் தொடங்குவதை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் அது குரங்கின் வீழ்ச்சியா, அது நிரந்தரமாக எதிலாவது சிக்கிக்கொள்கிறதா என்று யோசித்ததே இல்லை

அந்தக்கதையை வாசித்தபோது ஒன்று தோன்றியது. நாமே முயன்று ஒரு சாவியை திறந்துவிட்டால் அதில் சிக்கிவிடுவோம். ஏனென்றால் அது நாமே திறந்தது. அதன்பின் எஞ்சிய வாழ்க்கை முழுக்க அதிலேயே சிக்கிக்கொண்டிருப்போம். விடுவது ரொம்ப கடினம். அதுவே விட்டால்தான் உண்டு. இது என் அனுபவ உண்மை

ரவீந்திரநாத்ன் ஜி

***

அன்புள்ள ஜெ

சாவி கதையை திரும்பத்திரும்ப படித்துச் சிரித்துக்கொண்டிருந்தேன். அனுமார் பாலம் கட்டினார் என்றால் நம்புவீர்கள், வேலைசெய்தால் நம்பமாட்டீர்களா என்ற அரிகிருஷ்ணனின் நக்கல். கணக்கு வைத்து குரங்கிடம் வாழைப்பழம் வாங்கச் சொன்னால் மொத்த குரங்குக்கூட்டமே வந்துவிடும் என்ற ஊகம் எல்லாமே சிரிப்பு

இந்தக்கதை பற்றிப் பேசிக்கொண்டிருந்தேன். என் அலுவலகத்தில் கதையைச் சொன்னபோது ஒரு தோழி சொன்னாள். நல்லவேளை, இதேபோல பொட்டிதட்ட குரங்கு பழகிவிட்டால் நமக்கெல்லாம் ஆப்புதான் என்று.

ஜெயசீலன்

கதைத் திருவிழா-23, தீவண்டி [சிறுகதை]

கதைத் திருவிழா-22, பீடம் [சிறுகதை]

கதைத் திருவிழா-21, சிந்தே [சிறுகதை]

கதைத் திருவிழா-20, சாவி [சிறுகதை]

கதைத் திருவிழா-19, கழுமாடன் [சிறுகதை]

கதைத் திருவிழா-18, கீர்ட்டிங்ஸ் [சிறுகதை]

கதைத் திருவிழா-17, தூவக்காளி [சிறுகதை]

கதைத் திருவிழா-16, சிறகு [சிறுகதை]

கதைத் திருவிழா-15, வண்ணம் [சிறுகதை]

கதைத் திருவிழா-14, ஆபகந்தி [சிறுகதை]

கதைத் திருவிழா-13, ஆமை [சிறுகதை]

கதைத் திருவிழா-12, கணக்கு [சிறுகதை]

கதைத் திருவிழா-11, சுக்ரர் [சிறுகதை]

கதைத் திருவிழா-10, அருள் [சிறுகதை]

கதைத் திருவிழா-9, ஏழாவது [சிறுகதை]

கதைத் திருவிழா-8, மணிபல்லவம் [சிறுகதை]

கதைத் திருவிழா-7,மூத்தோள் [சிறுகதை]

கதைத் திருவிழா-6,அன்னம் [சிறுகதை]

கதைத் திருவிழா-5, மலையரசி [சிறுகதை]

கதைத் திருவிழா-4, குமிழி [ சிறுகதை]

கதைத் திருவிழா-3,லட்சுமியும் பார்வதியும் [சிறுகதை]

கதைத் திருவிழா-2, செய்தி [சிறுகதை]

கதைத் திருவிழா-1 ‘தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 2

கதைத் திருவிழா-1’தங்கப்புத்தகம்’ [குறுநாவல்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-4
அடுத்த கட்டுரைகுருபூர்ணிமா கடிதம்