ஏழாவது,சாவி- கடிதங்கள்

கதைத் திருவிழா-20, சாவி [சிறுகதை]

இனிய ஜெயம்

நண்பர் இந்த சுட்டியை அனுப்பி இருந்தார்.  வானுக்கு காற்றுக்கு சொந்தமான புத்திரன். மண்ணில் அது பெற வந்ததுதான் என்ன? விண்னுலகில் அதற்கு ஒருபோதும் கிடைக்காத மகிழ்ச்சியா மனிதன் அளிக்கும் பிரியம்?  சிரித்து முத்தமிட்டு உச்சிமுகர்ந்து கட்டியணைத்து விடை பெற்று செல்ல மானுட உறவு அது நல்கும் பிரியம் அவ்வளவு உயர்ந்த ஒன்றா?

சாவி கதையில் வருவது போல இங்கே எல்லா துக்கமும் உண்டு. வானத்தில் இந்த துக்கம் ஏதும் இல்லை. இந்த மகிழ்ச்சியும் வானத்தில் இல்லை. என்று அது அறிந்திருக்குமோ?

இவள் பெயர் மாமா. ஐம்பத்தி ஒன்பது வயதில் இறக்கும் முன்பாக தனது நண்பன் யான் வான் மூஃப் 1972 முதல் அதனை அறிந்த நண்பரை சந்தித்து விடை பெற்று மரித்திருக்கிறது. யான் ஒரு உயிரியலாளர். இரு ஆண்டுகள் முன்பான இந்த  ஆவணம் ஜீன் குடால் ஆவணங்கள் அளவே முக்கியத்துவமும் பிரபலமும் கொண்டது என்று சொல்கிறது இணையம்.

கடலூர் சீனு

***

அன்புள்ள ஜெ

சாவி வாசித்தபோது நினைத்துக்கொண்டேன், உலகில் எல்லா மதங்களின் தொன்மங்களிலும் ஞானம் அழிவா ஆக்கமா என்ற கேள்வி உள்ளது. அறிவு விவேகம் இரண்டையும் வேறுவேறாகப்பிரித்து யோசித்திருக்கிறார்கள், அறிவதை அறிந்து வெளியேறுவதே விவேகம் என்று நம்முடைய மரபு சொல்கிறது. களவும் கற்று மற என்ற பழமொழியின் உத்தேசம் அதுதான். ஆனால் வெளியேற முடியாது என்பதும் கற்றவை நாம் சாப்பிட்டவை போல அவை நம் உடலில் இருக்கும் என்பதும்தான் உண்மை.

ஜே. குமார் மூர்த்தி

***

கதைத் திருவிழா-9, ஏழாவது [சிறுகதை]

அன்புள்ள ஜெ

நலம்தானே?

அதிகமாகப் பேசப்படாமல் போன கதை ஏழாவது. ஒருமாதிரி உலுக்கிச் சமன்குலைக்கும் கதை அது. ஒரு underdogன் வாழ்க்கை வழியாக செல்கிறது. அந்தவகையான கிரிமினல் மக்களின் உலகத்திற்குள் செல்ல நீங்கள் கற்பனையை பயன்படுத்துவதில்லை. தன்னை அப்படி நினைத்துக்கொண்டு ரியலிஸ்டிக்காக அங்கே சென்று எழுதுவதில்லை.

எனென்றால் அப்படி நாம் எழுதுவதெல்லாமே நம்முடைய கற்பனையைத்தான். அவர்களை அல்ல. இங்கே முற்போக்குப் பார்வையில் கலகப்பார்வையில் கருணையுடன் அவர்களைப் பற்றி எழுதப்பட்டவை எல்லாமே மிடில்கிளாஸின் மனச்சிக்கல்களையும் ஃபேண்டஸிகளையும் அதன்மேல் ஏற்றியதுதான்

நீங்கள் எப்போதுமே அவர்களை பார்க்கக்கூடிய தூரத்தில் நின்றுகொண்டு அவர்களுக்குள் செல்வதற்கான ஊடுவழியாக ஏதாவது கிடைக்கிறதா என்று பார்க்கிறீர்கள். அப்படிக் கிடைத்ததுதான் ஏழாவது என்ற மெட்டஃபர். அவன் அதை எப்படி பயன்படுத்துகிறான் என்பது அல்ல. அவனுக்குள் அது எப்படி பதிவாகி எப்படி உருமாறிக்கொண்டிருக்கிறது என்பதைத்தான் அந்தக் கதை காட்டுகிறது. அந்தக் குறியீடுவழியாக நாம் அறியவே முடியாத underdog ஒருவனின் ஆத்மாவின் வலியையும் மீட்பையும் கதை அருமையாக காட்டிவிடுகிறது.

ராஜ்குமார்

***

அன்புள்ள ஜெ

பொதுவாக நான் ஒன்றைக் கண்டிருக்கிறேன். நான் 9 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சேவைநிறுவனத்திலே வேலைசெய்தேன். அப்போது மிகமிக அடித்தளத்தில் இருந்து வந்தவர்களுடன் பழகும் வாய்ப்பு அமைந்தது. அதில் ஆச்சரியமான பல கண்டடைதல்கள். ஒன்று என்னவென்றால் இவர்கள் அனைவருக்குமே நியாயத்தீர்ப்புநாள் மேல் ஒரு விசித்திரமான கவர்ச்சி உள்ளது.  ‘எல்லாம் உயிர்த்தெழுதல்நாளிலே தெரிஞ்சிரும்லே சார்” என்று நிறையபேர் சொல்லியிருக்கிறார்கள். பெரிய குற்றவாளிகள் கூட சொல்வார்கள். குற்றவுணர்வுகொண்டவர்களும் மீட்பை விரும்புகிறவர்களும் அதைச் சொல்வார்கள்.

அவர்கள் அதை நம்ப விரும்பி அதை பிடித்துக்கொண்டிருக்கிரார்கள். இதற்கெல்லாம் ஒரு முடிவு உண்டு என்று நினைக்க அது உதவிசெய்கிறது. அதுதான் ஏழாவது கதையில் வருகிறது. ஏழாவது முத்திரை உடைக்கப்பட்டால் மீட்பு என்று அவன் நினைக்கிறான். ஏழாவது முத்திரை உடைக்கப்படுவதே அந்த ஆத்மாவின் ஆழத்திலேதான். அவன் அங்கேதான் தன்னை கண்டுபிடிக்கிறான்

ஜேக்கப் நாதன்

***

100. வரம் [சிறுகதை]

99. முதலாமன் [சிறுகதை]

98. அருகே கடல் [சிறுகதை]

97. புழுக்கச்சோறு [சிறுகதை]

96. நெடுந்தூரம் [சிறுகதை]

95. எரிமருள் [சிறுகதை]

94. மலைவிளிம்பில் [சிறுகதை]

93. அமுதம் [சிறுகதை]

92. தீவண்டி [சிறுகதை]

91. பீடம் [சிறுகதை]

90. சிந்தே [சிறுகதை]

89. சாவி [சிறுகதை]

88. கழுமாடன் [சிறுகதை]

87. கீர்ட்டிங்ஸ் [சிறுகதை]

86. தூவக்காளி [சிறுகதை]

85. சிறகு [சிறுகதை]

84. வண்ணம் [சிறுகதை]

83. ஆபகந்தி [சிறுகதை]

82. ஆமை [சிறுகதை]

81. கணக்கு [சிறுகதை]

80. சுக்ரர் [சிறுகதை]

79. அருள் [சிறுகதை]

78. ஏழாவது [சிறுகதை]

77. மணிபல்லவம் [சிறுகதை]

76. மூத்தோள் [சிறுகதை]

75. அன்னம் [சிறுகதை]

74. மலையரசி [சிறுகதை]

73. குமிழி [சிறுகதை]

72. லட்சுமியும் பார்வதியும் [சிறுகதை]

71. செய்தி [சிறுகதை]

70. ‘தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 2

70. ‘தங்கப்புத்தகம்’ [குறுநாவல் -1

69. ஆகாயம் [சிறுகதை]

68. ராஜன் [சிறுகதை]

67. தேனீ [சிறுகதை]

66. முதுநாவல்[சிறுகதை]

65. இணைவு [சிறுகதை]

64. கரு [குறுநாவல்]- பகுதி 1

64. கரு [குறுநாவல்]- பகுதி 2

63. ‘பிறசண்டு’ [சிறுகதை]

62. நிழல்காகம் [சிறுகதை]

61. லாசர் [சிறுகதை]

60. தேவி [சிறுகதை]

59. சிவம் [சிறுகதை]

58. முத்தங்கள் [சிறுகதை]

57. கூடு [சிறுகதை]

56. சீட்டு [சிறுகதை]

55. போழ்வு [சிறுகதை]

54. நஞ்சு [சிறுகதை]

53. பலிக்கல் [சிறுகதை]

52. காக்காய்ப்பொன் [சிறுகதை]

51. லீலை [சிறுகதை]

50. ஐந்து நெருப்பு[ சிறுகதை]

49. கரவு [சிறுகதை]

48. நற்றுணை [சிறுகதை]

47. இறைவன் [சிறுகதை]

46. மலைகளின் உரையாடல் [சிறுகதை]

45. முதல் ஆறு [சிறுகதை]

44. பிடி [சிறுகதை]

43.. கைமுக்கு [சிறுகதை]

42. உலகெலாம் [சிறுகதை]

41. மாயப்பொன் [சிறுகதை]

40. ஆழி [சிறுகதை]

39. வனவாசம் [சிறுகதை]

38. மதுரம் [சிறுகதை]

37. ஓநாயின் மூக்கு [சிறுகதை]

36. வான்நெசவு [சிறுகதை]

35. பாப்பாவின் சொந்த யானை [சிறுகதை]

34. பத்துலட்சம் காலடிகள் [சிறுகதை]

33. வான்கீழ் [சிறுகதை]

32. எழுகதிர் [சிறுகதை]

31. நகைமுகன் [சிறுகதை]

30. ஏகம் [சிறுகதை]

29. ஆட்டக்கதை [சிறுகதை]

28. குருவி [சிறுகதை]

27. சூழ்திரு [சிறுகதை]

26. லூப் [சிறுகதை]

25. அனலுக்குமேல் [சிறுகதை]

24. பெயர்நூறான் [சிறுகதை]

23. இடம் [சிறுகதை]

22. சுற்றுகள் [சிறுகதை]

21. பொலிவதும் கலைவதும் [சிறுகதை]

20. வேரில் திகழ்வது [சிறுகதை]

19. ஆயிரம் ஊற்றுக்கள் [சிறுகதை]

18. தங்கத்தின் மணம் [சிறுகதை]

17. வானில் அலைகின்றன குரல்கள் [சிறுகதை]

16. ஏதேன் [சிறுகதை]

15. மொழி [சிறுகதை]

14. ஆடகம் [சிறுகதை]

13. கோட்டை [சிறுகதை]

12. விலங்கு [சிறுகதை]

11. துளி [சிறுகதை]

10. வேட்டு [சிறுகதை]

9. அங்கி [சிறுகதை]

8. தவளையும் இளவரசனும் [சிறுகதை]

7. பூனை [சிறுகதை]

6. வருக்கை [சிறுகதை]

5. “ஆனையில்லா!” [சிறுகதை]

4. யா தேவி! [சிறுகதை]

3. சர்வ ஃபூதேஷு [சிறுகதை]

2. சக்தி ரூபேண! [சிறுகதை]

1. எண்ண எண்ணக் குறைவது [சிறுகதை]

முந்தைய கட்டுரைமூங்கில்- கடிதங்கள்
அடுத்த கட்டுரைஅமேசான், ராஜன் சோமசுந்தரம்