சாவி, பீடம்- கடிதங்கள்

கதைத் திருவிழா-20, சாவி [சிறுகதை]

அன்புள்ள ஜெ

சுந்தர ராமசாமி ‘தேடலின் புனித துக்கம்’ என்ற ஒருவரியைச் சொல்வார். அதை ஞானத்தின் புனித துக்கம் என்று சொல்லலாம். அரிஸ்டாட்டில் மனிதன் அடையும் சந்தோஷங்களிலேயே உயர்ந்தது அறிதலின் சந்தோஷம்தான் என்று சொல்வார். மனிதன் துறந்துசெல்வதற்கு மிகவும் கடினமானது இதுதான். முற்றும் துறந்த துறவிகளில் பலர் கூட இதை துறந்ததில்லை. அவர்கள் எழுதிக்கொண்டும் பேசிக்கொண்டும் இருந்தார்கள். துறந்து முடிந்தவர்கள் அறிதலையும் துறந்தவர்கள். அவர்கள் பரமஹம்சர்களாக ஆகிவிடுகிறார்கள்.

மனிதன் அறிதலை துறந்தால் காட்டுக்குப் போகலாம். குரங்கு அறிய ஆரம்பித்தால் காட்டிலிருந்து ஊருக்கு வந்துவிடுகிறது

எஸ். அருண்

***

அன்புள்ள ஜெயமோகன்,

சாவி சிறுகதை அற்புதம். துக்கமோ, துயரமோ எது வந்தாலும் சரி, கடவுள் ஈடன் தோட்டத்திலிருந்து வெளியே தள்ளிவிட்டாலும் சரி, ஆப்பிளைத் தின்றுதான் தீர வேண்டும். ஆதாமுக்கு ஏவாளுக்கும் வேறு என்ன வழி இருக்கிறது? என் பெண்ணுக்காகவாவது மொழிபெயர்க்க வேண்டும்…

புதுமைப்பித்தனின் ஒரு கதையைப் படிக்கும்போதும் இப்படித்தான் உணர்ந்தேன். பெயர் நினைவு வரவில்லை, நான் எனக்குத் தெரிந்ததை செய்கிறேன், நீர் போம் என்று மனிதன் கடவுளை நிராகரித்து துருத்தியை ஊதுவான். மனக்குகை  ஓவியங்களா?

ஆர்.வி

கதைத் திருவிழா-19, கழுமாடன் [சிறுகதை]
கதைத் திருவிழா-22, பீடம் [சிறுகதை]
திரு.  ஜெயமோகன்  அவர்களுக்கு,

 வணக்கம்,

கதைத் திருவிழா வில் வரும் பெரும்பாலான கதைகளை படித்து விட்டேன்.  பீடம், கழுமாடன் இரண்டையும் படித்து விட்டு (முந்தான்நாள் கழுமாடனைப் படித்தேன் இன்று பீடம்) எழும்பும் போது மனம்  சாத்தான்குளம் சம்பவத்தை ஒப்பிட்டு பார்கிறது. கழுவேற்றுதல், ஆசனவாயில் கம்பை விடுதல் இனி அந்த போலீஸ் காரர்கள்  எதிர் கொள்ளவேண்டிய பிரச்சினை கள்.  கதைகளைப் படித்து விட்டு இப்படி ஒப்பீடு செய்வது சரியா என விளங்கவில்லை. உங்கள் கருத்தறிய  ஆசை.

அன்புடன்
சி.ஜவஹர்

அன்புள்ள ஜவகர்,

அந்த நிகழ்ச்சியை கேள்விப்பட்டபோது அக்கதை பற்றி நான் நினைத்துக்கொண்டேன். உண்மையில் நெருக்கடிநிலை காலகட்டத்தில் சர்வசாதாரணமாக நிகழ்ந்த சித்திரவதை இது. தசாவதாரம் படத்தில்கூட சொல்லப்படும். ஈர்க்குச்சிப் பிரயோகம், லாத்தி பிரயோகம் என்று சொல்லப்பட்டது

இந்தவகையான வதைகளின் மூலவடிவங்கள் நம்மவர் மனதில் ஆழமானப் பதிந்திருக்கின்றன

ஜெ  

***

அன்புள்ள ஜெ

கழுமாடன், பீடம் இரு கதைகளும் உலுக்கிவிட்டன. நம் மண்ணில் ஒரு மாபெரும் விடுதலைப்போர் நடந்திருக்கிறது. தலித்துக்களின் விடுதலைப்போர். அந்த வரலாறு நம்மைச்சூழ்ந்து தெய்வங்களாகவும் கதைகளகாவும் உள்ளது. நாம் அதை அறிவதே இல்லை. அந்த கதைகளிலிருந்து அந்த வரலாற்றின் உள்ளடக்கத்தை மீட்டுக்கொண்டு வரும் கதைகள் இவை

செல்வக்குமார்

***

கதைத் திருவிழா-23, தீவண்டி [சிறுகதை]
கதைத் திருவிழா-22, பீடம் [சிறுகதை]
கதைத் திருவிழா-21, சிந்தே [சிறுகதை]
கதைத் திருவிழா-20, சாவி [சிறுகதை]
கதைத் திருவிழா-19, கழுமாடன் [சிறுகதை]
கதைத் திருவிழா-18, கீர்ட்டிங்ஸ் [சிறுகதை]
கதைத் திருவிழா-17, தூவக்காளி [சிறுகதை]
கதைத் திருவிழா-16, சிறகு [சிறுகதை]
கதைத் திருவிழா-15, வண்ணம் [சிறுகதை]
கதைத் திருவிழா-14, ஆபகந்தி [சிறுகதை]
கதைத் திருவிழா-13, ஆமை [சிறுகதை]
கதைத் திருவிழா-12, கணக்கு [சிறுகதை]
கதைத் திருவிழா-11, சுக்ரர் [சிறுகதை]
கதைத் திருவிழா-10, அருள் [சிறுகதை]
கதைத் திருவிழா-9, ஏழாவது [சிறுகதை]
கதைத் திருவிழா-8, மணிபல்லவம் [சிறுகதை]
கதைத் திருவிழா-7,மூத்தோள் [சிறுகதை]
கதைத் திருவிழா-6,அன்னம் [சிறுகதை]
கதைத் திருவிழா-5, மலையரசி [சிறுகதை]
கதைத் திருவிழா-4, குமிழி [ சிறுகதை]
கதைத் திருவிழா-3,லட்சுமியும் பார்வதியும் [சிறுகதை]
கதைத் திருவிழா-2, செய்தி [சிறுகதை]
கதைத் திருவிழா-1 ‘தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 2
கதைத் திருவிழா-1’தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 1
முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-9
அடுத்த கட்டுரைதிராவிட மனு- கடைசியாக