கழுமாடன், மூத்தோள் -கடிதங்கள்

கதைத் திருவிழா-19, கழுமாடன் [சிறுகதை]

கதைத் திருவிழா-22, பீடம் [சிறுகதை]

அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய உங்களுக்கு,

வணக்கம்.

பீடம் கதை மிக மிகச் சிறப்பாக வந்திருக்கிறது. கழுமாடனின் தொடர்ச்சியாக  இந்த கதையும்.

தற்போதையை வரிசைக் கதைகளில்  பல கதைகள் முற்போக்கானவை. அசலான தலித்கதைகள். ஆமையை பெண்ணியம் சார்ந்த கதையாகவும் படிக்க முடியும்.

பீடம் கதையில் ஒரு கழுமாடனிடம் இருந்து அடுத்த கழுமாடனுக்கு ஆதார உணர்ச்சி எவ்வாறு கடத்தப்படுகிறது என்பதைக் கண்டடைந்தேன். எடுத்த எடுப்பிலேயே உங்களால் மனித அக மதிப்புகளின் ஆழங்களுக்குள் சஞ்சரித்து சென்றடைய முடிகிறது. தமிழ் எழுத்தாளர்களில் இந்த பண்பு சிறப்பு ஆசி போல உங்களிடம் அமைந்திருக்கக் கூடியது.

மனித மன ஆழங்களுக்குள் எல்லோருமே சென்று விடுவார்கள்.அது சாதாரணமானதே.மதிப்புகளின் சாரங்களுக்குள் செல்லுதல் கடினம், அசாதாரணம். வெண்முரசு எழுதியதால் சகல விஷயங்களின் பேரிலும் உங்கள் ஆழம் அதிகரித்திருக்கிறது என்று நினைக்கிறேன்.

கழுமாடன் கதையிலேயே கழுபீடத்தில் உடல் தடம் உருவாக்குவதற்காக அமரவைக்கும் போது , நுண்ணிய அதிர்வு ஏற்பட்டது. பீடத்தில் மீண்டும் அது வலுவடைகிறது.

“அமர மேடு” என்கிற சொல் மிகவும் புதுமை. இப்படியான, உங்கள் படைப்புகளில் உருவாகிற புதிய பல தமிழ் சொற்களைக் கொண்டே புதிய அகராதி ஒன்றினை எவரேனும் முயற்சிக்க வேண்டும்.

எவரும் சாமானியத்தில் எறிச் சென்று அமர முடியாத உயரத்தில் இருந்து சகலத்தையும் பார்க்கும் ஒட்டுமொத்தப் பார்வை ஒன்று, உங்களிடம் கச்சிதத்தன்மை பெற்றிருக்கிறது. உங்களுடைய கடுந்தவத்தாலும், தேடலாலும் வடிவமைத்து எங்களுக்கு அசாதாரணமான அனுபவத்தை ஏற்படுத்துகிறது.

தமிழில் புதிய எழுத்துகாரனுக்கு மிகவும் சவாலான எழுத்தாளர் ஒருவர் உண்டெனில் அது நீங்களே. எழுத்தை அதன் உண்மையான உயரத்திற்கு நீங்கள் எடுத்துச் சென்றிருக்கிறீர்கள். தொடர்ச்சியான பின்தொடர்தலுக்குப் பிறகுநான் அறிந்து கொண்டிருப்பது இதுவே.

அன்புடன்,
லக்ஷ்மி மணிவண்ணன்

***

அன்புள்ள ஜெ,

கழுமாடன் பீடம் இரண்டு கதைகளும் ஒன்றிலிருந்து ஒன்று கிளைத்த இரு கதைகள்.கழுமாடன் எதிர்ப்பின் அரசியலைச் சொல்கிறது. எதுவுமே செய்யமுடியாத நிலையில் எதிர்ப்பு இல்லாமலாகிவிடுவதில்லை. அதன் அளவு குறைந்து அழுத்தம் கூடிவிடுகிறது. அது எங்கோ பீரிட்டு வெளியேறத் தொடங்கிவிடுகிறது.

கழுமாடனின் பழிவாங்குதல் நுண்ணிய வடிவமானது. உண்மையில் அந்தவகையான பழிவாங்குதல் சமகாலகத்திலுள்ள எல்லா வழிகளும் அடைபட்டுவிட்டால்தான் தெரிய ஆரம்பிக்கும். நாம் பழிவாங்கும்போது உடனடியாக பழிவாங்க நினைப்போம். நம்மைச்சூழ்ந்தோர் நடுவே அந்தப் பழிவாங்குதல் நடக்கவேண்டும் என்று எண்ணுவோம். ஆனால் அதற்கு வழியே இல்லாமலாகும்போது வேறு பாதைகள் தென்பட ஆரம்பிக்கின்றன

கழுமாடனாக கரியாத்தன் ஏற்கனவே ஆகிவிட்டான். ஆகவே காலத்தை கடந்து நின்று பார்க்கிறான். அவர்கள் தரையில் நின்று பார்க்கையில் அவன் நூறடி மேலேநின்று பார்க்கிறான். நெடுந்தொலைவு பார்த்துவிடுகிறான். ஆகவே காலாகாலமாக நின்று பலிகொள்ள முடிவெடுக்கிறான். அங்கே அவன் எதிரிகள் மனிதர்கள், அவன் தெய்வம். தெய்வத்தின் பழியை மனிதர் தாங்கமுடியாது. சரணடைந்தே ஆகவேண்டும்

மகாதேவன்

***

கதைத் திருவிழா-7,மூத்தோள் [சிறுகதை]

அன்புள்ள ஜெ

மூத்தோள் சிறுகதை படித்தேன். மனதில் தோன்றிய சில எண்ணோட்டங்களை உங்களிடம் பகிர விழைகிறேன். கடந்த 50 ஆண்டுகளாக தமிழ் பற்றி எத்தனை பரவசங்கள், குறிப்பாக சமஸ்கிருதத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு மொழி என உறுதிபடுத்த எத்தனை கூச்சல்கள்? நானும் அப்படி கல்லூரி காலங்களில் அப்படி பரவசப்பட்ட ஓர் எளியோனே. காலம் தரும் பாடங்கள் , கல்லூரி முடிந்து பல ஊர் சுற்றி, ஆந்திரா, மகாராஷ்டிரா, கர்நாடகா என பல மாநிலம் பார்த்து, பல விவாதங்களில் கலந்து, பல மொழிகளை கற்று நான் உணர்வது என்னவென்றால், தமிழும் சம்ஸ்கிருதமும் சகோதரிகளென… எனது பூர்வீகம் திருநெல்வேலி மாவட்டம். எனது தாயார் துளசி இலையை தலையில் பூவிற்குப் பதிலாக சூட்டிக்கொள்வதை பார்த்திருக்கிறேன். நிறைய மனம் கொண்டது. பல வருடங்கள் கழித்து நான் கவனித்தது, துளசி என கோவிலில் கொடுப்பது, முற்றிலும் வேறு ஒரு செடியை.  நண்பர்களுடன் எனது தாயார் பயன்படுத்திய துளசிச் செடியே உண்மையான துளசி என வாதிடவும் செய்வேன். அதை நாய் துளசி என்பார்கள், காட்டு துளசி என்பார்கள். ஒருவர் கூட அதை துளசி என ஒப்புக்கொள்வதில்லை.  தமிழும் வடமொழியும் அதனுடன் ஒப்பிட்டுக்கொள்வேன். சில முறை ‘சிவபெருமான் உடுக்கையின் இருபக்கம் தோன்றிய மொழிகள்’ எனும் சொல்லுக்கும் எதோ உள்ளார்ந்த பொருள் இருப்பதாகவே எண்ணுகிறேன்.

இடையில் பிரம்மம் பற்றிய தங்கள் கருத்தினை கீதை உரையில் கேட்க நேர்ந்தது. ‘ஒரு மரத்தின் இரு பறவைகள்’ உவமை பற்றி அதை கேட்ட நிமிடத்தில் இருந்து ஒரு பரவசம் என்னுள் ஆழ்ந்ததது. ஜீவாத்மா, பரமாத்மா பற்றி  ஒரு திறப்பை எனக்குள் ஏற்படுத்தியது. முண்டக உபநிஷத்தை பற்றி தேடி படிக்கலானேன். மூலத்தை படிப்பதும் ஒரு பரவசமே… எனக்கு தெரிந்த தெலுங்கு, கன்னடத்தின் காணப்படும் வடமொழியை பொருள்படுத்திக்கொவேன். தோல்வியுற்ற சொற்களை ஆங்கிலத்தில் மட்டுமே வாசிக்க கிடைக்கிறது. எனது ஆங்கில புலமை அதை முற்றிலும் அறிவதை மட்டுப்படுத்துகிறது. நீங்கள் குறள் உரையில் சூத்திரத்தை எப்படி படிப்பது என கற்று கொடுத்திருந்தீர்கள். அது உதவுமா என முயற்சியும் செய்து பார்த்தேன். ஓரளவு பயன் கிடைத்தது. சத்யமேவ ஜயதே போன்ற புகழ் மொழிகள் இதில் வருவது கூடுதல் ஆனந்தம். தட்டித் தடவி இரண்டு அத்தியாயங்கள் தமிழில் மொழி பெயர்த்தேன். ஓவ்வொன்றயும், ஓவ்வொரு வார்த்தையும் படித்து பொருள் கொள்ள மேலதிக வாசிப்புகள் தேவைப்படுகின்றன. பிரம்மம் பற்றிய வரைவுகளை சற்றே தெளிவாக குடுக்க முயற்சிக்கிறது நூல். நூலின்  பெயருக்கு வெள்ளைக்காரர்கள் கொடுத்த அர்த்தம், இது சந்நியாசம் போவோர்கள் படிக்க வேண்டியது என (முண்ட – மொட்டை அடித்தல்). ஆனால் ஒரு  வைதீக மதத்தில் இப்படி வருவானேன் என்ற கேள்வி எழுந்தது. உங்களின் சங்க இலக்கிய உரை ஒன்றில் முண்டகம் என்றால் நீர் முள்ளி மலர் என்று குறிப்பிட்டு இருந்தீர்கள். இது மலரை குறிக்கும் வார்த்தையோ என எண்ணினேன். அறுதி இட்டு கூற முடிய வில்லை.

நான் வசிக்கும் பெங்களூரில், வடவனமும் (துளசியும்), எனது தாயார் அறிமுகப்படுத்திய (காட்டு) துளசி செடியும் வளர்க்க  ஆரம்பித்தேன். அதன் இலை வடிவம், மணம் என இரண்டும் முற்றுலும் மாறுபட்ட செடியாகவே  முதலில் தோன்றியது அது பூக்கும் வரை. இரண்டு செடியின் பூக்களும் ஒரே வடிவை கொண்டவை. ஒரு வித்தியாசமும் இல்லை. திடீரென நெஞ்சில் ஒரு மின்னல். தமிழ்தாய் வாழ்த்துப் பாடலில் வரும் ஒரு வரி. “… அனைத்துலகும் இன்பமுற…”…. ‘அனைத்துலகம்…”… மீண்டும் மீண்டும் எனது நெஞ்சில் எதிரொலித்தது அந்த வார்த்தை. பிரம்மம் என்ற சொல்லுக்கு தமிழ்ச்சொல். எத்தனை விலகி விலகி சென்றிடுனும் சகோதரிகள் பிரிவதில்லை. தென் மொழியா, வாடா மொழியா, இந்து மதமா… எதுவாகினும் நீங்கள் சொல்வது போல் ஒரு நதியின் இரு படித்துறைகள் அவ்வளவே…

மூத்தோள் கதை படிக்கும்போது, ஜேஷ்டை தேவி மீது அப்படி என்ன ஆக்ரோஷம். எவ்வளவு வீம்பு கொண்டு அதை தூர எறிந்தாலும், நமது வழிபாடு அனைத்தும் அவளும் பெறுகிறாள். தமிழும் சம்ஸ்கிருதமும் அப்படியே… நீங்கள் தமிழ் மீது காதல் கொண்டால் நாம் சமஸ்கிருதத்திடமும் வயப்படுகிறோம் என்பதே. தமிழில் இருந்து, சமஸ்கிருதமா, அல்லது சமஸ்கிருதத்தில் இருந்து தமிழா என்ற வாதம் ஒரு பக்கம், எப்படி இருப்பினும்   ஒன்று அவள் தாய் அல்லது மகள்… ஏதுவாகிலும் நாம் பாதுகாக்க வேண்டிய கடமை நம்மிடம் உண்டு.  சிவபெருமான் உடுக்கையின் இருபக்கம் என்பதன் பொருளாகவே தோன்றுகிறது.

இன்னும் பலவாறாக விரிகிறது இந்த கதை எனக்குள். நன்றி ஒரு நல்ல சிறுகதை தந்தமைக்கு. நாகர்கோயில் வந்தால் உங்கள் இல்லம் வர விழைகிறேன். உங்களிடம் ஒரு வார்த்தை… அது போதும் என தோன்றுகிறது இந்த ஜென்மத்தில்.

நன்றி

ஜெயராஜ்

பட்டந்தூர் (சோழர்கள் வெட்டிய ஒரு ஏரியும், ஒரு அக்ரஹாரமும் கட்டப்பட்டதாக கூறும் கல்வெட்டுடைய ஊர்)

பெங்களூர்

***

அன்புள்ள ஜெ

மூத்தோள் சிறுகதையை வாசித்துக்கொண்டிருந்தபோது என் அப்பாவின் நினைவு வந்தது. 1983ல் அவர் ஒரு தொழிலை தொடங்கினார். மிகப்பெரிய நஷ்டம். மூடவேண்டியிருந்தது. அதைத்தொடர்ந்து வறுமை. அவமானம். ஊரைவிட்டு வெளியே வந்தார். அவர் வசதியான குடும்பத்தில் பிறந்தவர். ஊரைவிட்டு வந்து இன்னொரு கடையில் வேலைபார்த்து கஷ்டப்பட்டார். பிறகு பதினைந்தாண்டுகளில் மீண்டுவிட்டார்.

அப்பா என்னிடம் சொல்வார். ‘லட்சுமி கத்துத்தராததை மூதேவி கத்துக்குடுத்தாடா. அவகிட்ட படிச்சபாடம்தான் வாழ்க்கையை உண்டுபண்ணிக் குடுத்தது’

கருணாகரன் ஜே.

***

100. வரம் [சிறுகதை]

99. முதலாமன் [சிறுகதை]

98. அருகே கடல் [சிறுகதை]

97. புழுக்கச்சோறு [சிறுகதை]

96. நெடுந்தூரம் [சிறுகதை]

95. எரிமருள் [சிறுகதை]

94. மலைவிளிம்பில் [சிறுகதை]

93. அமுதம் [சிறுகதை]

92. தீவண்டி [சிறுகதை]

91. பீடம் [சிறுகதை]

90. சிந்தே [சிறுகதை]

89. சாவி [சிறுகதை]

88. கழுமாடன் [சிறுகதை]

87. கீர்ட்டிங்ஸ் [சிறுகதை]

86. தூவக்காளி [சிறுகதை]

85. சிறகு [சிறுகதை]

84. வண்ணம் [சிறுகதை]

83. ஆபகந்தி [சிறுகதை]

82. ஆமை [சிறுகதை]

81. கணக்கு [சிறுகதை]

80. சுக்ரர் [சிறுகதை]

79. அருள் [சிறுகதை]

78. ஏழாவது [சிறுகதை]

77. மணிபல்லவம் [சிறுகதை]

76. மூத்தோள் [சிறுகதை]

75. அன்னம் [சிறுகதை]

74. மலையரசி [சிறுகதை]

73. குமிழி [சிறுகதை]

72. லட்சுமியும் பார்வதியும் [சிறுகதை]

71. செய்தி [சிறுகதை]

70. ‘தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 2

70. ‘தங்கப்புத்தகம்’ [குறுநாவல் -1

69. ஆகாயம் [சிறுகதை]

68. ராஜன் [சிறுகதை]

67. தேனீ [சிறுகதை]

66. முதுநாவல்[சிறுகதை]

65. இணைவு [சிறுகதை]

64. கரு [குறுநாவல்]- பகுதி 1

64. கரு [குறுநாவல்]- பகுதி 2

63. ‘பிறசண்டு’ [சிறுகதை]

62. நிழல்காகம் [சிறுகதை]

61. லாசர் [சிறுகதை]

60. தேவி [சிறுகதை]

59. சிவம் [சிறுகதை]

58. முத்தங்கள் [சிறுகதை]

57. கூடு [சிறுகதை]

56. சீட்டு [சிறுகதை]

55. போழ்வு [சிறுகதை]

54. நஞ்சு [சிறுகதை]

53. பலிக்கல் [சிறுகதை]

52. காக்காய்ப்பொன் [சிறுகதை]

51. லீலை [சிறுகதை]

50. ஐந்து நெருப்பு[ சிறுகதை]

49. கரவு [சிறுகதை]

48. நற்றுணை [சிறுகதை]

47. இறைவன் [சிறுகதை]

46. மலைகளின் உரையாடல் [சிறுகதை]

45. முதல் ஆறு [சிறுகதை]

44. பிடி [சிறுகதை]

43.. கைமுக்கு [சிறுகதை]

42. உலகெலாம் [சிறுகதை]

41. மாயப்பொன் [சிறுகதை]

40. ஆழி [சிறுகதை]

39. வனவாசம் [சிறுகதை]

38. மதுரம் [சிறுகதை]

37. ஓநாயின் மூக்கு [சிறுகதை]

36. வான்நெசவு [சிறுகதை]

35. பாப்பாவின் சொந்த யானை [சிறுகதை]

34. பத்துலட்சம் காலடிகள் [சிறுகதை]

33. வான்கீழ் [சிறுகதை]

32. எழுகதிர் [சிறுகதை]

31. நகைமுகன் [சிறுகதை]

30. ஏகம் [சிறுகதை]

29. ஆட்டக்கதை [சிறுகதை]

28. குருவி [சிறுகதை]

27. சூழ்திரு [சிறுகதை]

26. லூப் [சிறுகதை]

25. அனலுக்குமேல் [சிறுகதை]

24. பெயர்நூறான் [சிறுகதை]

23. இடம் [சிறுகதை]

22. சுற்றுகள் [சிறுகதை]

21. பொலிவதும் கலைவதும் [சிறுகதை]

20. வேரில் திகழ்வது [சிறுகதை]

19. ஆயிரம் ஊற்றுக்கள் [சிறுகதை]

18. தங்கத்தின் மணம் [சிறுகதை]

17. வானில் அலைகின்றன குரல்கள் [சிறுகதை]

16. ஏதேன் [சிறுகதை]

15. மொழி [சிறுகதை]

14. ஆடகம் [சிறுகதை]

13. கோட்டை [சிறுகதை]

12. விலங்கு [சிறுகதை]

11. துளி [சிறுகதை]

10. வேட்டு [சிறுகதை]

9. அங்கி [சிறுகதை]

8. தவளையும் இளவரசனும் [சிறுகதை]

7. பூனை [சிறுகதை]

6. வருக்கை [சிறுகதை]

5. “ஆனையில்லா!” [சிறுகதை]

4. யா தேவி! [சிறுகதை]

3. சர்வ ஃபூதேஷு [சிறுகதை]

2. சக்தி ரூபேண! [சிறுகதை]

1. எண்ண எண்ணக் குறைவது [சிறுகதை]

முந்தைய கட்டுரைமூங்கில்[சிறுகதை] சுஷீல்குமார்
அடுத்த கட்டுரைவெண்முரசை என்ன செய்வது? சுரேஷ் பிரதீப்