கீர்ட்டிங்ஸ், தூவக்காளி- கடிதங்கள்

கதைத் திருவிழா-18, கீர்ட்டிங்ஸ் [சிறுகதை]

அன்புள்ள  ஜெ..

உங்கள்  கதைகளில்  கதாபாத்திரங்கள்  பெயர்கள் எப்போதுமே சுவாரஸ்யமானவை

இப்போதைய கதை தொடர்களை கவனித்தால்   எல்லைகளற்றவன் என்பதை குறிப்பிடுவதைப்போல  அனந்தன் ,  ஆன்மிகத்தில் பயன்படுத்தப்படும் சாதனா என்ற சொல்லை நினைவுபடுத்தும்  சாதனா என்ற பெயர் , உலகை ஆளும் தேவி என்பதைப்போல ஶ்ரீதேவி என அந்தந்த  கதைகளுக்கு பொருத்தமான பெயர்களை பாரக்க முடிகிறது

இது தற்செயலாக அமைகிறதா  அல்லது  திட்டமிட்டு அமைக்கிறீர்களா

அல்லது  தற்செயலாக அமைந்துவிட்ட பெயர் கதையை நகர்த்திச் செல்கிறதா.. உதாரணமாக தேவி கதையின் நாயகியின் பெயர் கவுசல்யா, ஸ்மிதா, என அமைந்திருந்தால் கதைக்கு வேறு வகை வண்ணம் கிடைத்திருக்குமா ?

அல்லது பெயரில் என்ன இருக்கிறது என நினைக்கிறீர்களா

அன்புடன்

பிச்சைக்காரன்

***

அன்புள்ள பிச்சைக்காரன்

கதைமாந்தர் பெயர்களை ‘யோசித்து’ வைப்பதில்லை. பலசமயம் மூலத்தில் ஒரு மெய்யான நபர் இருந்தால் அந்தப்பெயருடன் ஒலியிணைவு கொண்ட பெயர்கள் வரும். மற்றபடி அப்போது தோன்றும் பெயர்தான். கதாபாத்திரத்தின் காலகட்டம், சமூகச்சூழல், சாதிப்படிநிலை ஆகியவை பெயர்களை தீர்மானிக்கின்றன. ஆனால் தற்செயலாக இயல்பாக வரும்போது எல்லாமே சரியாக அமைந்துவிடும்

பின்னர் கதைகளை நான் படிக்கும்போது குறியீட்டளவிலும் பெயர்கள் சரியாக அமைந்திருப்பதைக் காண்பேன்.எனக்கே அந்த ஆழ்மனச் செயல்பாடு ஆச்சரியம் அளிப்பதுதான். சமீபத்திய உதாரணம் வித்யா- கீர்ட்டிங்ஸ் கதையில்

ஜெ

***

அன்பிற்கினிய ஜெ,

குழந்தைகள் தெய்வங்கள், தனது இயல்பால் யாருடைய வேடங்களையும் எளிதாக  கலைத்து விடுகிறது. வித்யாவும் கண்ணாமூச்சி ஆடிக் கலைகிறாள். பொருளை தேடும் போது முத்தாலம்மன்  காணாமல் போய்விடுவதையும் இடையிடையே சரஸ்வதி வருவதும், வித்யா கதையில் அடிக்கடி தொலைந்து போவதை ஒரு குறியீடாக எடுத்துக் கொண்டேன். அதிகாரம் கர்வம் அனைத்தும் ஒர் நொடியில் வித்யாவிடம் கரைந்துவிட்டது.

கண்ணன் கே.கே

***

கதைத் திருவிழா-17, தூவக்காளி [சிறுகதை]

அன்புள்ள ஜெ

தூவக்காளி உலுக்கிய ஒரு கதை. என்ன ஆயிற்று என்று பார்த்தேன். ஒரு உணர்ச்சியில்லாத உரையாடல் வழியாக அந்த குறியீடுகளின் புராணப்பின்புலமும் வரலாற்றுப்பின்புலமும் சொல்லப்படுகிறது. இரண்டுமே கவித்துவமானவை. வானத்தில் அன்னையின் முலைப்பாலின் கடலில்தான் பெருமாளே பள்ளிகொள்கிறார். அந்தப்பாலில் ஒரு துளி நஞ்சு. அது பூமியில் தெய்வமாகிறது. புல்தூவல் சூடிக்கொள்கிறது. காணிக்காரர்களிடமிருந்து அந்த தெய்வத்தைப் பெற்றுக்கொண்ட வரலாற்ய்

அதன் பின் கதை விரிந்து விரிந்துசெல்கிறது. புல் என்ற அற்புதமான உருவகம். அதன் வெல்லமுடியாத தன்மையும் கருணையும். அங்கே தெய்வமாக வந்தது புல்தானே? புல்காளி புல்லையே பலிகொண்டு மேலே செல்கிறாள். இத்தனை அர்த்த அடுக்கும் செயற்கையான வடிவச்சோதனைகள் ஏதுமில்லாமல் இயல்பாகச் சொல்லப்படுகின்றன

அருண்

***

3,2,1 என சொல்லியபடி என்னை ஒரு வாள் வெட்டப்போகும் முன் ஏற்படும் உச்ச குவிதல் / இறுக்கம் அந்த தூவக்காளியின் முகம் அணிய ஆரம்பித்த போது வந்தது. சட்டென அவள் கால் தூக்கி எடுத்து வைத்து ஆடுகையில் ஒரு சந்நதம் போல …ஒரு விலகல் என …ஒரு  இலை நீர்த்துளி உதிர அதை காத்திருந்து நாவால் கவ்விப்பறந்த ஒரு குருவி என அந்த ஆட்கொளல் படலம். சடசடவென படர்ந்து எழுந்தது அனல்.

அக்கிழவி மற்றும் வக்கீல் சார் வர மாட்டார் என்று சொன்ன அந்த பெண்ணின் மேலும் ஒரு வெறுப்பு வந்தது சம்பந்தமின்றி. கலைகிறதா இல்லை அழிகிறதா எனும்படியான சந்தேக புத்தி. இருவரையும் காளி தன் இரு கையால் தூக்கி வீசியதை நான் என்னுள் செய்தேன்.

நிலவின் ஒளியில் முகம் இல்லாமல் இருந்த அந்த காரிருள் காளி உரு அழிந்து காடென கிடக்க, மனம் வெளிறி கிடந்தது. எல்லார்க்கும் ஒர் தெயவம் காத்து இருக்கின்றன – ஆட்கொன்று எடுத்து செல்ல…

கதையின் போக்கில் சென்று கொண்டிருக்கும் போது பொதுவாக வேறு எதிர் சிந்தனையோ புதிய காட்சியோ எழாது. சில சமயம் அப்படி வந்த கதைகளில் இது முதல்.

அன்புடன்,

லிங்கராஜ்

***

100. வரம் [சிறுகதை]

99. முதலாமன் [சிறுகதை]

98. அருகே கடல் [சிறுகதை]

97. புழுக்கச்சோறு [சிறுகதை]

96. நெடுந்தூரம் [சிறுகதை]

95. எரிமருள் [சிறுகதை]

94. மலைவிளிம்பில் [சிறுகதை]

93. அமுதம் [சிறுகதை]

92. தீவண்டி [சிறுகதை]

91. பீடம் [சிறுகதை]

90. சிந்தே [சிறுகதை]

89. சாவி [சிறுகதை]

88. கழுமாடன் [சிறுகதை]

87. கீர்ட்டிங்ஸ் [சிறுகதை]

86. தூவக்காளி [சிறுகதை]

85. சிறகு [சிறுகதை]

84. வண்ணம் [சிறுகதை]

83. ஆபகந்தி [சிறுகதை]

82. ஆமை [சிறுகதை]

81. கணக்கு [சிறுகதை]

80. சுக்ரர் [சிறுகதை]

79. அருள் [சிறுகதை]

78. ஏழாவது [சிறுகதை]

77. மணிபல்லவம் [சிறுகதை]

76. மூத்தோள் [சிறுகதை]

75. அன்னம் [சிறுகதை]

74. மலையரசி [சிறுகதை]

73. குமிழி [சிறுகதை]

72. லட்சுமியும் பார்வதியும் [சிறுகதை]

71. செய்தி [சிறுகதை]

70. ‘தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 2

70. ‘தங்கப்புத்தகம்’ [குறுநாவல் -1

69. ஆகாயம் [சிறுகதை]

68. ராஜன் [சிறுகதை]

67. தேனீ [சிறுகதை]

66. முதுநாவல்[சிறுகதை]

65. இணைவு [சிறுகதை]

64. கரு [குறுநாவல்]- பகுதி 1

64. கரு [குறுநாவல்]- பகுதி 2

63. ‘பிறசண்டு’ [சிறுகதை]

62. நிழல்காகம் [சிறுகதை]

61. லாசர் [சிறுகதை]

60. தேவி [சிறுகதை]

59. சிவம் [சிறுகதை]

58. முத்தங்கள் [சிறுகதை]

57. கூடு [சிறுகதை]

56. சீட்டு [சிறுகதை]

55. போழ்வு [சிறுகதை]

54. நஞ்சு [சிறுகதை]

53. பலிக்கல் [சிறுகதை]

52. காக்காய்ப்பொன் [சிறுகதை]

51. லீலை [சிறுகதை]

50. ஐந்து நெருப்பு[ சிறுகதை]

49. கரவு [சிறுகதை]

48. நற்றுணை [சிறுகதை]

47. இறைவன் [சிறுகதை]

46. மலைகளின் உரையாடல் [சிறுகதை]

45. முதல் ஆறு [சிறுகதை]

44. பிடி [சிறுகதை]

43.. கைமுக்கு [சிறுகதை]

42. உலகெலாம் [சிறுகதை]

41. மாயப்பொன் [சிறுகதை]

40. ஆழி [சிறுகதை]

39. வனவாசம் [சிறுகதை]

38. மதுரம் [சிறுகதை]

37. ஓநாயின் மூக்கு [சிறுகதை]

36. வான்நெசவு [சிறுகதை]

35. பாப்பாவின் சொந்த யானை [சிறுகதை]

34. பத்துலட்சம் காலடிகள் [சிறுகதை]

33. வான்கீழ் [சிறுகதை]

32. எழுகதிர் [சிறுகதை]

31. நகைமுகன் [சிறுகதை]

30. ஏகம் [சிறுகதை]

29. ஆட்டக்கதை [சிறுகதை]

28. குருவி [சிறுகதை]

27. சூழ்திரு [சிறுகதை]

26. லூப் [சிறுகதை]

25. அனலுக்குமேல் [சிறுகதை]

24. பெயர்நூறான் [சிறுகதை]

23. இடம் [சிறுகதை]

22. சுற்றுகள் [சிறுகதை]

21. பொலிவதும் கலைவதும் [சிறுகதை]

20. வேரில் திகழ்வது [சிறுகதை]

19. ஆயிரம் ஊற்றுக்கள் [சிறுகதை]

18. தங்கத்தின் மணம் [சிறுகதை]

17. வானில் அலைகின்றன குரல்கள் [சிறுகதை]

16. ஏதேன் [சிறுகதை]

15. மொழி [சிறுகதை]

14. ஆடகம் [சிறுகதை]

13. கோட்டை [சிறுகதை]

12. விலங்கு [சிறுகதை]

11. துளி [சிறுகதை]

10. வேட்டு [சிறுகதை]

9. அங்கி [சிறுகதை]

8. தவளையும் இளவரசனும் [சிறுகதை]

7. பூனை [சிறுகதை]

6. வருக்கை [சிறுகதை]

5. “ஆனையில்லா!” [சிறுகதை]

4. யா தேவி! [சிறுகதை]

3. சர்வ ஃபூதேஷு [சிறுகதை]

2. சக்தி ரூபேண! [சிறுகதை]

1. எண்ண எண்ணக் குறைவது [சிறுகதை]

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-16
அடுத்த கட்டுரைகருத்தாடல்களும் சமநிலையும்