கதைத் திருவிழா-18, கீர்ட்டிங்ஸ் [சிறுகதை]
அன்புள்ள ஜெ
கீர்ட்டிங்ஸ் கதையில் வரும் விடியாவை உங்கள் ஆபீஸுக்கு 2003 ல் வந்தபோது பார்த்திருக்கிறேன். அப்போதும் வெவ்வேறு ஃபைல்களின்மேல் குழந்தைகள் தூங்கவைக்கப்பட்டிருந்தன. உங்கள் மேஜைமேல் ஹெர்மன் ஹெஸ்ஸின் ஸ்டெப்பன் வுல்ஃப் நாவல் இருந்தது.
அந்த கதையில் எனக்கு பிடித்த வரி ‘வேணுமானா வீட்டுக்குப் போறேன்’ என்பது. அதாவது மேலதிகாரிகள் கட்டாயப்படுத்தினால்…
ரவிச்சந்திரன்
***
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு
வணக்கம்
குட்டி சைதன்யா உங்களின் அலுவலக மேசையடியில் பொம்மைக் குழந்தைகளை தூங்கப்பண்னி விளையாடுவதை முன்பு எழுதியிருக்கிறீர்கள். கிரீட்டிங்ஸீன் ’’நல்ல விடியா’ சைதன்யாதான்); மறைந்தும் ஒளிந்தும் காட்சியளித்தும் விளையாடும் வித்யாதான் முத்தாலம்மனும். அற்புதமான கதை. அத்தனை சிக்கல்களையும் இல்லாமலாக்கி அத்தனை பெரியவர்களையும் அவளளவுக்கே சின்னதாக்கி விடுகிறது குழந்தை. அந்த புத்தாண்டு வாழ்த்திலும் ’’கிழிக்காம வச்சுக்கனும்’’ என்னும் கட்டளையிலும் தானும் குழந்தையாகி அவளது சிறிய உலகுக்குள் நுழைந்துவிடும் மரைக்காயர் அப்போதைக்கு எல்லாவற்றிலிருந்தும் விடுபட்டுவிடுவது வாசிக்க அத்தனை மகிழ்ச்சியாக இருந்தது.
நெஞ்சில் ஓர் ஆலயம் திரைப்படத்தில் மருத்துவமனையில் குட்டி பத்மினியுடன் தேவிகா பாடும் ’முத்தான முத்தல்லவோ’ என்னும் எனக்கு பிடித்த ஒரு பாடல் இருக்கின்றது. அதில்
’’வாழாத மனிதரையும் வாழவைக்கும் சேயல்லவோ
பேசாத தெய்வத்தையும் பேச வைக்கும் தாயல்லவோ’’’என்ற வரிகள் பெண் குழந்தைகள் அனைவருக்குமானவை.
பெண்குழந்தைகள் வீட்டில் இருப்பதே வாழ்வு நமக்களிக்கும் ஆகச்சிறந்த வாழ்த்தல்லவா!
சைதன்யாவுக்கு அன்பு
அன்புடன்
லோகமாதேவி
கதைத் திருவிழா-15, வண்ணம் [சிறுகதை]
அன்புள்ள ஜெ
வண்ணம் கதையை நான் ஒரு ஃபேபிள் ஆக என் குழந்தைகளுக்குச் சொன்னேன். கோரையை நெல் என்று நினைக்கும் அதிகாரிகளை இன்றைக்கும் பார்க்கலாம். மேலே செல்லும் மனுக்கள் எல்லாம் அரசரின் காலடியில் சென்று விழுவதும் இன்றும் நடப்பதுதானே? அந்தக்கதையின் அழகு அதை அப்படி வரலாற்றுடன் இணைத்திருப்பதில் உள்ளது. காலாகாலமாக நிகழும் அடக்குமுறையை, எதிர்ப்பை இப்படித்தான் எழுதவேண்டும். அவை கதையாக மாறி நினைவில் நிலைகொள்ளவேண்டும். அந்த கதையின் சாராம்சமே எதிர்ப்பின் அழகுதான்
ஜெயக்குமார்
***
அன்புள்ள ஜெ
தமிழின் மிகப்பெரிய துரதிருஷ்டம் என்பது எந்த அறிதலும் இல்லாமல் இலக்கியத்தை வாசித்து மொண்ணையாகப் புரிந்துகொண்டு கருத்துசொல்லும் போலி முற்போக்குக் கும்பல்தான். அவர்களுக்கு இலக்கியம் தெரியாது. தெரிந்தது கும்பல்சேர்வதுமட்டுமே. அந்தக்கும்பலில் சேர்ந்து கொள்பவன் அவர்களுக்கு எழுத்தாளன். அவனுடைய அரைகுறை எழுத்து அவர்களுக்கு இலக்கியம்
இந்தக்கும்பல் திரும்பத்திரும்ப கத்திக்கொண்டிருக்கிறது, ‘மக்கள் வாழ்க்கையை எழுதுவதே இலக்கியம்’ ‘ஒடுக்குமுறையையும் அதற்கு எதிரான போராட்டத்தையும் எழுதுவதுதான் இலக்கியம்’ ஆனால் அப்படிப்பட்ட எழுத்தை வாசித்தால் அவர்களுக்கு ஒன்றும் பிடிகிடைப்பதுமில்லை. அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் அன்றாட அரசியல்கருத்தை ஒட்டி ஏதாவது சொன்னால்தான் அதை மக்கள் இலக்கியம் என்கிறார்கள்.
வண்ணம் மக்கள் இலக்கியம் அல்லாமல் என்ன? இந்தக் கதைகளில் எவ்வளவு ஒடுக்குமுறையின் சுரண்டலின் கதைகள். எவ்வளவு எதிர்ப்பின் மீட்சியின் கதைகள். தமிழில் முற்போக்கு எழுத்துக்களில் இதற்கிணையான எத்தனை கதைகள் உள்ளன? இலக்கியத்தின் அழகியல் என்று ஒன்று உண்டு. அந்த அழகியலுக்குள் மக்களின் வரலாற்றை,எதிர்ப்பைச் சொன்ன கதைகள் இவை. வண்ணம் அதில் உச்சம்
ஒரு தொன்மம் மாதிரி இருக்கிறது. ஆனால் எதிர்ப்பின் வரலாறு. கல்லாகிவிடுவது என்பது செயலற்றுவிடுவது அல்லது ஒத்துழைக்க மறுப்பது அல்ல. அது இறுகிக்கொள்வதுதான். அது அரசைப் பணியவைக்கிறது. அந்த கல்லை ஒரு துளி வண்ணம் உயிர்கொள்ளவும் வைக்கிறது. நினைக்க நினைக்க பெருகும் இந்தக்கதையே தமிழ் முற்போக்கு இலக்கியத்தில் இனி பெயர்சொல்லாமல் பிரதியெடுக்கப்படும் கதையாகவும் இருக்கும்
சிவக்குமார்
***
கதைத் திருவிழா-20, சாவி [சிறுகதை]
கதைத் திருவிழா-19, கழுமாடன் [சிறுகதை]
கதைத் திருவிழா-18, கீர்ட்டிங்ஸ் [சிறுகதை]
கதைத் திருவிழா-17, தூவக்காளி [சிறுகதை]
கதைத் திருவிழா-16, சிறகு [சிறுகதை]
கதைத் திருவிழா-15, வண்ணம் [சிறுகதை]
கதைத் திருவிழா-14, ஆபகந்தி [சிறுகதை]
கதைத் திருவிழா-13, ஆமை [சிறுகதை]
கதைத் திருவிழா-12, கணக்கு [சிறுகதை]
கதைத் திருவிழா-11, சுக்ரர் [சிறுகதை]
கதைத் திருவிழா-10, அருள் [சிறுகதை]
கதைத் திருவிழா-9, ஏழாவது [சிறுகதை]
கதைத் திருவிழா-8, மணிபல்லவம் [சிறுகதை]
கதைத் திருவிழா-7,மூத்தோள் [சிறுகதை]
கதைத் திருவிழா-6,அன்னம் [சிறுகதை]
கதைத் திருவிழா-5, மலையரசி [சிறுகதை]
கதைத் திருவிழா-4, குமிழி [ சிறுகதை]
கதைத் திருவிழா-3,லட்சுமியும் பார்வதியும் [சிறுகதை]
கதைத் திருவிழா-2, செய்தி [சிறுகதை]
கதைத் திருவிழா-1 ‘தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 2
கதைத் திருவிழா-1’தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 1