இன்றுடன் லோகி மறைந்து 11 ஆண்டுகள் முழுமையடைகின்றன. நான் நினைவுநாட்களில் பொதுவாக குறிப்புகள் எழுதுவதில்லை. பிறநாட்களில் நினைக்காத ஒருவரை நினைவு நாட்களில் எண்ணிக் கொள்கிறோம். லோகி என்னுடைய பேச்சில் எப்போதும் வந்துகொண்டிருப்பவர். எப்படியோ ஒருநாளில் ஒருமுறையாவது அவரை நினைவுறுகிறேன்.
2004-ல், லோகி என் வீட்டுக்கு வந்து நான் கஸ்தூரிமான் படத்தில் பங்கெடுத்தாக வேண்டும் என்று கட்டாயப்படுத்தினார். நான் அரைகுறையாக ஒப்புக்கொண்டதுமே பத்தாயிரம் ரூபாய்க்கான காசோலையை அளித்தார். “இது எதுக்கு” என்று நான் தயங்க “இருக்கட்டுமே” என்றார். “சினிமாவில் ஒருபோதும் உனக்கு மதிப்பிற்கும் பணத்திற்கும் குறைவிருக்காது. சினிமா உன்னை கவலையற்றவனாக்கும்” என்று வாழ்த்தினார்.
லோகி விடைபெற்று வெளியே சென்றபின் உள்ளே வந்த அவருடைய நண்பர் “சாதாரண செக் அல்ல அது. இன்று மலையாள சினிமாவின் பல நட்சத்திரங்கள் அவரிடமிருந்து முதல் செக் பெற்றவர்கள்” என்றார். அப்போதுகூட அந்த மதிப்பு தெரியவில்லை. அப்போது அந்த ஒரு படத்துக்கு அப்பால் செய்ய எண்ணமும் இருக்கவில்லை. ஆனால் இதோ பதினேழு ஆண்டுகளாகிவிட்டன. இன்றும் சினிமாவில் வாய்ப்புகள் வந்துகொண்டே இருக்கின்றன. நான் தேர்ந்தெடுக்கும் அளவுக்கு.
லோகியை என் ஆசிரியன், அண்ணன் என்றே எப்போதும் உணர்ந்திருக்கிறேன். இத்தனை இயல்பாக அன்புடன் இருப்பவர்கள் அரிது. எவ்வுயிர்க்கும் தீங்கு எண்ணாத இயல்பான கள்ளமின்மை கொண்ட கலைஞன். மிகக்கொடிய வறுமை, கைவிடல்கள் வழியாக சமூகத்தின் அடித்தட்டிலிருந்து வந்தவர், ஆனால் சற்றும் கசப்பு தொடாதவர். இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னரும் அவருடைய இறப்பின் துயர் எழுந்து அழுத்துகிறது.
படம்; நைவேத்யம்
பாடகர் விஜய் ஏசுதாஸ், ஸ்வேதா மோகன்
இசையமைப்பு எம்.ஜெயச்சந்திரன்
லோகித தாஸ் எழுதியது இந்தப்பாடல்.
கோலக்குழல்விளி கேட்டோ ராதே என் ராதே
கண்ணன் என்னே விளிச்சுவோ ராவில் ஈ ராவில்
பால்நிலாவு பெய்யும்போள் பூங்கினாவு நெய்யுநோ
எல்லாம் மறந்நு வந்நு ஞான் நின்னோடிஷ்டம் கூடான்
ஆண்குயிலே நீ பாடும்போள் பிரியதரம் ஏதோ நொம்பரம்
ஆம்பல்பூவே நின் சொடியில் அனுராகத்தின் பூம்பொடியோ?
அறிஞ்ஞுவோ வனமாலி நின் மனம் கவர்ந்நொரு ராதிக ஞான்
ஓராயிரம் மயில்பீலிகளாய் விரிஞ்ஞுவோ என் காமனகள்
விருந்தாவனம் ராக சாந்த்ரமாய் யமுனே நீ உணரூ
நீயொரு காற்றாய் புணரும்போள்
அரயாலிலையாய் என் ஹ்ருதயம்
கண்முனையால் என் கரளில்
கவித குறிக்குகயயோணோ நீ
தளிர்த்துவோ நீல கடம்புகள்
பூ விடர்த்தியோ நிற யௌவனம்
அணஞ்ஞிடாம் சித்ர பதங்கமாய்
தேன் நிறஞ்ஞுவோ நின் அதரங்ஙள்
மிழி பூட்டுமோ மது சந்திரிகே பரிணய ராவாயி.
***