ஏழாவது,மூத்தோள்- கடிதங்கள்

கதைத் திருவிழா-9, ஏழாவது [சிறுகதை]

அன்புள்ள ஜெ

கிறிஸ்தவ இறையியல் உள்ளடக்கம் கொண்ட லாசர், ஏழாவது போன்ற கதைகளை பல முயற்சிகளுடன் நான் வாசித்து புரிந்துகொண்டேன். உயிர்த்தெழுதலின் படிமம் ஆக திகழும் லாசர் கதையும் கடைசி மீட்சியின் படிமமாக திகழும் ஏழாவதும் முக்கியமான கதைகள்

இந்தக்கதைக்காக வாசித்தபோதுதான் ஷேக்ஸ்பியர் ஹாம்லெட் நாடகத்தில் சொல்லும் The Rest is Silence என்ற வரியின் ஊற்று பைபிள்தான் என்று தெரிந்தது. இதுவரை நான் ஹாம்லெட்டை ஆயிரம் முறையாவது பாடம் நடத்தியிருப்பேன். இது தெரியாமலிருந்தது.

ஒருகேள்விதான். நீங்கள் ஏன் இஸ்லாமிய இறையியல் பற்றி எழுதுவதில்லை?

எம்.சுப்ரமணியம்

***

அன்புள்ள சுப்ரமணியம் அவர்களுக்கு,

இஸ்லாமிய இறையியலின் சாரம்சமான சில விஷயங்கள்தான் பத்துலட்சம் காலடிகள், அன்னம், முதுநாவல் போன்ற கதைகளில் உள்ளன என நினைக்கிறேன். ஆனால் பைபிள் அளவுக்கு குர்-ஆன் எனக்கு நெருக்கமானது அல்ல. நான் இளமையிலேயே பைபிளின் சொற்கள் சூழ வளர்ந்தவன். கீதையையே கொஞ்சம் தாமதமாகத்தான் வந்தடைந்தேன்

ஜெ

***

அன்புள்ள ஜெயமோகன்

‘ஏழாவது’ கதையையும் அதன் வாசகர் கடிதங்களையும் படித்தேன். என் நினைவு சரி என்றால் வெறும் முள் தொடங்கி கிறிஸ்தவ பின்னணியுடன் நீங்கள் எழுதிய கடிதங்களுக்கு குறைவாகவே கடிதங்கள் வந்திருக்கின்றன. இக்கதைகளின் எல்லா பரிமாணங்களையும் உணர  ஓரளவிற்காவது விவிலிய வாசிப்பும்  கிறிஸ்தவ மெய்யியல் அறிமுகம் தேவை என்பதால் இருக்கலாம். கிறிஸ்தவ வாசகர்கள் எழுதலாம். ஆனால் அவர்களில் பைபிளுக்கு வெளியே தமிழில் வாசிப்பவர்கள் சிலரே. அதிலும் ‘கிறுக்குகூவான் மாதிரி பேசுதான் சார்’ என்று ஆரம்பிக்கும்  கதை  வேதாகமத்தின் ஆகச்சிக்கலான பகுதியான வெளிப்படுத்தின விசேஷத்தின் ஒரு வசனத்தை மையச்சரடாகக்  கொண்டிருக்கும் என்று நம்புவது எந்த கிறிஸ்தவருக்கும் கடினம். இரம்யா குறிப்பிட்டபடி திருவெளிப்பாடு நூல் யோவானின் அகத்தரிசனம். மோசஸுக்கு நிகழ்ந்ததும் அதுவே. அதன் பின் அசைவின்மை மட்டுமே. எதையும் எங்கும் எவருக்கும் நிறுவ வேண்டியதில்லை, the defense rests என்பது போல.

ஏதேன், அங்கி, லாசர் போன்ற மற்ற கதைகளும் கிறிஸ்தவ நம்பிக்கைகளை, இறையியலை ஆழமாகவும் நுட்பமாகவும் பேசுகின்றன. ஏதேன் கதையில் பெருவட்டர் தன் மகன் கடைசியில் எங்கு வந்து சேர்வான் என்பதை முதலில் இருந்தே அறிந்திருக்கிறார். சொத்து என்னவாகும் என்று தெரிந்தே மனைவியை அனுமதித்திருப்பார். கிறிஸ்துவின் கெட்ட குமாரன் உவமைக்கதையை அப்படியே கண்முன் கொண்டுவருகிறது. சொத்தை பிரித்துக்கொண்டுபோன மகன் திரும்பிவர தந்தை காத்திருக்கிறார். அதுவே ‘நான் எழுந்து என் தகப்பனிடத்திற்கு போய்….’ என்று மகனை நினைக்கவைக்கிறது. அதனால்தான் எல்லா சமூக ஒழுக்கங்களையும் பேணிய மூத்த மகனைவிட விழுந்து, அடிபட்டு, எழுந்த இளைய மகனே எல்லார் மனதிற்கும் அணுக்கமாக இருக்கின்றான்.

உயிர்த்தெழல் எல்லாருக்கும் ஏதோவொரு விதத்தில் ஒவ்வொரு நாளும் தேவைப்படுவதை லாசர் கதை ஒரு எளிய சிறுவனின் பார்வையில் சொல்கிறது. கடிகாரத்திற்கு  தினமும் சாவி கொடுப்பதைப்போல. இன்று புதிதாய் பிறந்தோம் என்று  ஏற்றுக்கொவதைப்போல உயிர்த்தெழுவோம் என்று இயல்பாக ஏற்க முடிவதில்லை. இறந்தால்தான் உயிர்த்தெழல் என்பதால் அது கடினமாக தோன்றுகிறது.  ஆனால் ஒவ்வொரு இழப்பும், வலியும், துரோகமும், சுடுசொல்லும் இறப்புதான். அவற்றிலிருந்து எழும்தோறும் பெருகி வளர்கிறோம். விதை பிழைத்திருந்தால் தனித்திருக்கும், செத்து பிழைத்தால் மிகுந்த பலனைக்கொடுக்கும் என்பது கிறிஸ்துவின் சொல்லாகவும் வாழ்வாகவும் இருக்கிறது.

எல்லா கதைகளுக்காகவும் நன்றி. அவற்றை படிக்கும்போது பைபிள் மனதில் விரிவதுபோல இனி பைபிளை படிக்கும்போதெல்லாம் இந்த கதைகளும் உடன் வரும்.

மிக்க அன்புடன்
நிக்கோடிமஸ்

***

கதைத் திருவிழா-7,மூத்தோள் [சிறுகதை]

அன்புள்ள ஜெ,

மூத்தோள் ஒரு அருமையான கதை. எனக்கு இந்தியத் தொன்மங்களில் எந்த பழக்கமும் இல்லை. இங்குள்ள நவீன இலக்கியச்சூழலில் இந்த வகையான தொன்மங்கள் பேசப்படுவதும் இல்லை. ஏனென்றால் இதெல்லாம் இங்கே எவருக்குமே தெரியாது. இங்குள்ள தொன்மங்களையே தெரியாதவர்கள் ஐரோப்பிய –தென்னமேரிக்க தொன்மங்களை வைத்து எழுதப்படும் படைப்புக்களை படிப்பதாகவும் ரசிப்பதாகவும் பாவனை செய்கிறார்கள். புரிந்துகொண்டவரை எடுத்துக்கொண்டு அதேபோல எழுதி பார்க்கிறார்கள். ஒட்டுமொத்தமாகவே நவீன எழுத்து என்பது இதுதான். ஆகவேதான் இவை மூளைக்குமட்டுமே எட்டுகின்றன. மனசைத் தொடுவதில்லை. கனவுக்குள் சென்று வளர்வதே இல்லை.

இந்த மூத்தோள்கதை எனக்கு முன்பு தெரியாது. ஆனால் கதை என்னை உலுக்கிவிட்டது அந்த தீமையின் தெய்வ உருவம் என்னை இத்தனை நாட்களாக அலைக்கழித்துக்கொண்டே இருக்கிறது. இது மனசுக்குள் இருந்திருக்கிறது

எஸ்.பார்த்திபன்

***

அன்புள்ள ஜெ

சின்ன வயதில் சத்தியசோதனை நூலைப் படித்தபோது ஒரு அத்தியாயத்தின் தலைப்பு என்னைக்கவர்ந்தது.. ;நிர்பல் கே பலராம்..ஆதரவற்றோரின் பலம் கடவுள்தான்

மூத்தோள் கதையில் ஒர் அன்னையென தன் கைகளில் ஏந்தி , பண்டாரத்துக்கு ஓர் அரிய தரிசனத்தை வழங்கும் அன்னை என்ற படிமம் என்னை உலுக்கி விட்டது.

பெரிய பெரிய தவசீலர்களுக்கும் அர்ஜுனன் போன்ற வீரர்களுக்கும் கிடைத்த விஸ்வரூப தரிசனத்துக்கு நிகரான ஓர் அனுபவமல்லவா கையறு நிலையில் தற்கொலையை நாடிய ஓர் ஏழைக்கு கிடைத்து விட்டது

இது அந்த ஆலயத்தில் இருக்கும் அதிகார வர்க்கத்தினர் கனவிலும் எதிர்பார்க்க முடியாதல்லவா..

செல்வந்தன் கடவுளை அடைவது ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவதைவிட கடினம் என ஜீசஸ் சொல்வது இதைத்தானோ.

பலவான்கள் வெற்றியை துதிப்பது உண்மையில் அழிவை துதிப்பதாகத்தான் ஆகிறது ..இதைத்தானே வரலாறு முழுக்க பார்த்து வருகிறோம்

இந்த கதை மனதில் ஏதோ ஒரு கதவை திறந்து விட்டு விட்டது

அன்புடன்

பிச்சைக்காரன்

***

கதைத் திருவிழா-16, சிறகு [சிறுகதை]

கதைத் திருவிழா-15, வண்ணம் [சிறுகதை]

கதைத் திருவிழா-14, ஆபகந்தி [சிறுகதை]

கதைத் திருவிழா-13, ஆமை [சிறுகதை]

கதைத் திருவிழா-12, கணக்கு [சிறுகதை]

கதைத் திருவிழா-11, சுக்ரர் [சிறுகதை]

கதைத் திருவிழா-10, அருள் [சிறுகதை]

கதைத் திருவிழா-9, ஏழாவது [சிறுகதை]

கதைத் திருவிழா-8, மணிபல்லவம் [சிறுகதை]

கதைத் திருவிழா-7,மூத்தோள் [சிறுகதை]

கதைத் திருவிழா-6,அன்னம் [சிறுகதை]

கதைத் திருவிழா-5, மலையரசி [சிறுகதை]

கதைத் திருவிழா-4, குமிழி [ சிறுகதை]

கதைத் திருவிழா-3,லட்சுமியும் பார்வதியும் [சிறுகதை]

கதைத் திருவிழா-2, செய்தி [சிறுகதை]

கதைத் திருவிழா-1 ‘தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 2

கதைத் திருவிழா-1’தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 1

====================================================

69 ஆகாயம் [சிறுகதை]

68.ராஜன் [சிறுகதை]

67. தேனீ [சிறுகதை]

66. முதுநாவல்[சிறுகதை]

65. இணைவு [சிறுகதை]

64. கரு [குறுநாவல்]- பகுதி 1

64. கரு [குறுநாவல்]- பகுதி 2

63. ‘பிறசண்டு’ [சிறுகதை]

62. நிழல்காகம் [சிறுகதை]

61. லாசர் [சிறுகதை]

60. தேவி [சிறுகதை]

59. சிவம் [சிறுகதை]

58. முத்தங்கள் [சிறுகதை]

57. கூடு [சிறுகதை]

56. சீட்டு [சிறுகதை]

55. போழ்வு [சிறுகதை]

54. நஞ்சு [சிறுகதை]

53. பலிக்கல் [சிறுகதை]

52. காக்காய்ப்பொன் [சிறுகதை]

51. லீலை [சிறுகதை]

50. ஐந்து நெருப்பு[ சிறுகதை]

49. கரவு [சிறுகதை]

48. நற்றுணை [சிறுகதை]

47. இறைவன் [சிறுகதை]

46. மலைகளின் உரையாடல் [சிறுகதை]

45. முதல் ஆறு [சிறுகதை]

44. பிடி [சிறுகதை]

43.. கைமுக்கு [சிறுகதை]

42. உலகெலாம் [சிறுகதை]

41. மாயப்பொன் [சிறுகதை]

40. ஆழி [சிறுகதை]

39. வனவாசம் [சிறுகதை]

38. மதுரம் [சிறுகதை]

37. ஓநாயின் மூக்கு [சிறுகதை]

36. வான்நெசவு [சிறுகதை]

35. பாப்பாவின் சொந்த யானை [சிறுகதை]

34. பத்துலட்சம் காலடிகள் [சிறுகதை]

33. வான்கீழ் [சிறுகதை]

32. எழுகதிர் [சிறுகதை]

31. நகைமுகன் [சிறுகதை]

30. ஏகம் [சிறுகதை]

29. ஆட்டக்கதை [சிறுகதை]

28. குருவி [சிறுகதை]

27. சூழ்திரு [சிறுகதை]

26. லூப் [சிறுகதை]

25. அனலுக்குமேல் [சிறுகதை]

24. பெயர்நூறான் [சிறுகதை]

23. இடம் [சிறுகதை]

22. சுற்றுகள் [சிறுகதை]

21. பொலிவதும் கலைவதும் [சிறுகதை]

20. வேரில் திகழ்வது [சிறுகதை]

19. ஆயிரம் ஊற்றுக்கள் [சிறுகதை]

18. தங்கத்தின் மணம் [சிறுகதை]

17. வானில் அலைகின்றன குரல்கள் [சிறுகதை]

16. ஏதேன் [சிறுகதை]

15. மொழி [சிறுகதை]

14. ஆடகம் [சிறுகதை]

13. கோட்டை [சிறுகதை]

12. விலங்கு [சிறுகதை]

11. துளி [சிறுகதை]

10. வேட்டு [சிறுகதை]

9. அங்கி [சிறுகதை]

8. தவளையும் இளவரசனும் [சிறுகதை]

7. பூனை [சிறுகதை]

6. வருக்கை [சிறுகதை]

5. “ஆனையில்லா!” [சிறுகதை]

4. யா தேவி! [சிறுகதை]

3. சர்வ ஃபூதேஷு [சிறுகதை]

2. சக்தி ரூபேண! [சிறுகதை]

1. எண்ண எண்ணக் குறைவது [சிறுகதை]

முந்தைய கட்டுரைஆமை, அருள்- கடிதங்கள்
அடுத்த கட்டுரைகதைத் திருவிழா-17, தூவக்காளி [சிறுகதை]