ராஜன்,மலையரசி- கடிதங்கள்

68.ராஜன் [சிறுகதை]

அன்புள்ள ஜெ

ராஜன் சிறுகதை படித்ததும் தோன்றியது: பூதங்கள் நம் உத்தரவுகளை நிறைவேற்றும் தான்.ஆனால் அது பூதம் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்‌.நம் எல்லைக்குட்பட்ட வாழ்வை தாண்டியவர்கள்.கண்ணண் நாயர் விளக்கை தேய்த்ததும் “உத்தரவு ஏமானே ” என கைக்கூப்பி வணங்கினாலும் “யானைக்க விஷம் வச்சா கொல்லுதவன கொல்லுவேன்” என கம்பீரம் காட்டுகிறான்.

அன்புடன்

பாலா

***

அன்புள்ள ஜெ

ராஜன் ஒரு அழகான சிறுகதை அந்தச்சிறுகதையை நான் பதினைந்துநாட்களுக்கு முன்பு வாசித்தேன். வாசித்த கொஞ்சநாளிலேயே கேரளத்தில் யானை கொல்லப்பட்ட செய்தி வந்தது. யானையிடமிருந்து பெற்ற நாடு கேரளம். ஆனால் அதை யானையை அழித்து நிலைநாட்ட விரும்புகிறார்கள்

கேரளமக்களின் தொன்மங்களில் யானை எப்படியெல்லாம் இடம்பெற்றிருக்கிறது. அங்கே அது ஒரு விலங்கு மட்டும் அல்ல. அதைக்கொல்வது என்பது மூதாதையரையும் தெய்வங்களையும் கொல்வதுதான். ஆனால் இன்று உருவான மனநிலை அல்ல. ராஜன் கதையிலேயே மிகச்சரியாக இன்றைய நிகழ்ச்சிக்கான மனநிலை உள்ளது. பழத்தில் ஆர்சனிக் வைத்து அந்த யானையை கொல்ல அனுப்புகிறார் அந்த நாயர்

இங்கே கொல்லப்பட்ட யானை என்பது அம்மை யானை. அது உன்னும் ஆழமான அர்த்தம் கொண்டது

ராஜாராம்

***

கதைத் திருவிழா-5, மலையரசி [சிறுகதை]

அன்புள்ள ஜெ

பல கதைகள் ஒன்றுடன் ஒன்று பிணைந்து நீங்கள் உருவாக்கும் அந்த புனைவுநிலத்தை அழகாக எங்களுக்குள் விரிந்து வரச்செய்துவிடுகின்றன. ஆயிரம் ஊற்றுக்கள், மலையரசி, லட்சுமியும் பார்வதியும் போன்ற கதைகளை ராஜன் போன்ற கதைகளுடன் இணைத்துப்பார்க்கவேண்டும். ராஜன் கதையில் கேரளநிலமே பிடியானையிடமிருந்து பெற்றது என்று வருகிறது. பார்வதிபாய் ஒரு பிடியானைதானே?

ராஜீவ்குமார்

***

அன்புள்ள ஜெயமோகன்

மலையரசி தங்களின் பிறகதைகளின் தொடர்ச்சியாகவே தோன்றுகிறது. பார்வதி அன்னை சொன்ன ”நேர்மையானவரும் திறமையற்றவருமான அதிகாரியை விட திறமையான சற்று நேர்மைக்குறைவுகொண்ட அதிகாரி மேல். முற்றிலும் நேர்மையான அதிகாரி என்பவர் எதையுமே செய்யாமலிருப்பவர்… ஏனென்றால் அரசாட்சி என்பதிலேயே ஒர் அநீதி இருக்கிறது” என்னும் இடம் நெருடுகிறது . நேர்மையும், திறமையும் mutually exclusive eventsஆ  என்ன?

பார்வதி தேவி அலகில்லாத கருணையும் அலகில்லாத குரூரமும் கொண்ட பராசக்தியாக  இருந்து பெரும்  பஞ்சத்திலிருந்து காக்க மகனான  ஸ்வாதித் திருநாள் மகாராஜாவுக்கு ஸ்வர்க்க ஸாயுஜ்ய பதவியையும் பெற்றுத் தருகிறார் .

கோபால்
புனே

***

கதைத் திருவிழா-9, ஏழாவது [சிறுகதை]

கதைத் திருவிழா-8, மணிபல்லவம் [சிறுகதை]

கதைத் திருவிழா-7,மூத்தோள் [சிறுகதை]

கதைத் திருவிழா-6,அன்னம் [சிறுகதை]

கதைத் திருவிழா-5, மலையரசி [சிறுகதை]

கதைத் திருவிழா-4, குமிழி [ சிறுகதை]

கதைத் திருவிழா-3,லட்சுமியும் பார்வதியும் [சிறுகதை]

கதைத் திருவிழா-2, செய்தி [சிறுகதை]

கதைத் திருவிழா-1 ‘தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 2

கதைத் திருவிழா-1’தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 1

***

69 ஆகாயம் [சிறுகதை]

68.ராஜன் [சிறுகதை]

67. தேனீ [சிறுகதை]

66. முதுநாவல்[சிறுகதை]

65. இணைவு [சிறுகதை]

64. கரு [குறுநாவல்]- பகுதி 1

64. கரு [குறுநாவல்]- பகுதி 2

63. ‘பிறசண்டு’ [சிறுகதை]

62. நிழல்காகம் [சிறுகதை]

61. லாசர் [சிறுகதை]

60. தேவி [சிறுகதை]

59. சிவம் [சிறுகதை]

58. முத்தங்கள் [சிறுகதை]

57. கூடு [சிறுகதை]

56. சீட்டு [சிறுகதை]

55. போழ்வு [சிறுகதை]

54. நஞ்சு [சிறுகதை]

53. பலிக்கல் [சிறுகதை]

52. காக்காய்ப்பொன் [சிறுகதை]

51. லீலை [சிறுகதை]

50. ஐந்து நெருப்பு[ சிறுகதை]

49. கரவு [சிறுகதை]

48. நற்றுணை [சிறுகதை]

47. இறைவன் [சிறுகதை]

46. மலைகளின் உரையாடல் [சிறுகதை]

45. முதல் ஆறு [சிறுகதை]

44. பிடி [சிறுகதை]

43.. கைமுக்கு [சிறுகதை]

42. உலகெலாம் [சிறுகதை]

41. மாயப்பொன் [சிறுகதை]

40. ஆழி [சிறுகதை]

39. வனவாசம் [சிறுகதை]

38. மதுரம் [சிறுகதை]

37. ஓநாயின் மூக்கு [சிறுகதை]

36. வான்நெசவு [சிறுகதை]

35. பாப்பாவின் சொந்த யானை [சிறுகதை]

34. பத்துலட்சம் காலடிகள் [சிறுகதை]

33. வான்கீழ் [சிறுகதை]

32. எழுகதிர் [சிறுகதை]

31. நகைமுகன் [சிறுகதை]

30. ஏகம் [சிறுகதை]

29. ஆட்டக்கதை [சிறுகதை]

28. குருவி [சிறுகதை]

27. சூழ்திரு [சிறுகதை]

26. லூப் [சிறுகதை]

25. அனலுக்குமேல் [சிறுகதை]

24. பெயர்நூறான் [சிறுகதை]

23. இடம் [சிறுகதை]

22. சுற்றுகள் [சிறுகதை]

21. பொலிவதும் கலைவதும் [சிறுகதை]

20. வேரில் திகழ்வது [சிறுகதை]

19. ஆயிரம் ஊற்றுக்கள் [சிறுகதை]

18. தங்கத்தின் மணம் [சிறுகதை]

17. வானில் அலைகின்றன குரல்கள் [சிறுகதை]

16. ஏதேன் [சிறுகதை]

15. மொழி [சிறுகதை]

14. ஆடகம் [சிறுகதை]

13. கோட்டை [சிறுகதை]

12. விலங்கு [சிறுகதை]

11. துளி [சிறுகதை]

10. வேட்டு [சிறுகதை]

9. அங்கி [சிறுகதை]

8. தவளையும் இளவரசனும் [சிறுகதை]

7. பூனை [சிறுகதை]

6. வருக்கை [சிறுகதை]

5. “ஆனையில்லா!” [சிறுகதை]

4. யா தேவி! [சிறுகதை]

3. சர்வ ஃபூதேஷு [சிறுகதை]

2. சக்தி ரூபேண! [சிறுகதை]

1. எண்ண எண்ணக் குறைவது [சிறுகதை]

***

முந்தைய கட்டுரைவம்புகள், புலம்பெயர் இலக்கியம்-கடிதங்கள்
அடுத்த கட்டுரைஅன்னம்- கடிதங்கள்