விஷ்ணுபுரம் -குமரகுருபரன் விருது- 2020
மெய்யியலுக்கு மிக நெருக்கமான கலைவடிவம் கவிதைதான். நவீன காலகட்டத்தில் கூட அரவிந்தரின் சாவித்திரி மெய்யியலை பேசும் கவிதை வடிவ காப்பியம் தான். தமிழில் மெய்யியல் தள கவிதைகளுக்கு பாரதி துவங்கி ஒரு மரபு இருக்கிறது. பிச்சமூர்த்தி, நகுலன், பிரமிள், அபி, தேவதேவன், தேவதச்சன் ஷங்கர், சபரி வரை அது நீள்கிறது. வேணுவின் கவிதைகள் சபரி அல்லது ஷங்கரின் கவிதைகளில் இருக்கும் பகடித்தன்மை இல்லாதது. ஆகவே சமகாலத்திலிருந்து விலகியது. அபி, தேவதச்சன் கவிதைகளுக்கு நெருக்கமானது வேணுவின் கவியுலகம் என தோன்றியது. தமிழ் கவிதைகளின் மெய்யியல் தளம் அதிகமும் வேதாந்தம் சார்ந்தது.