கதைகள் கடிதங்கள்

அன்புள்ள ஜெ

இந்தச்சிறுகதை வரிசையை நான் இன்னும் முடிக்கவில்லை. கரு மிச்சமிருக்கிறது- நீண்ட கதை என்பதனால். ஆகவே எழுதி முடித்துவிட்டீர்களே என்ற வருத்தம் இன்னும் உருவாகவில்லை. தொடர்ச்சியாக வாசித்துக்கொண்டிருக்கிறேன்

இந்தக்கதைகள் ஒருவகையான இயல்பான எளிமையான உற்சாகத்துடன் ஆரம்பித்தன. மெல்லமெல்ல அவை ஆன்மிகமான தத்துவார்த்தமான கேள்விகளை நோக்கி திசைமாறின. ஆனால் பழையகதைகளை சென்று வாசித்துப்பார்க்கும்போது அது வேறுமாதிரி தோன்றுகிறது. ஆனையில்லா என்ற கதையில் இருந்தே உலகியலை நோக்கிச் சிரிக்கும் ஒரு விலகிய பார்வைதான் இருக்கிறது. உலகியல் சார்ந்த விஷயங்களில் ஆழமான ஈடுபாட்டுடன் உணர்ச்சிகரமாக எழுதப்பட்ட கதைகள் ஏதுமில்லை. உலகியல் என்று எதைச் சொல்கிறேன் என்றால் அரசியல் பிரச்சினைகள் சமூகப்பிரச்சினைகள் போன்றவற்றை. அன்றாட வாழ்க்கை சார்ந்தவற்றை என்று இன்னும் சரியாகச் சொல்லலாம்.

நாம என்னத்துக்கு இன்னொருத்தருக்க பூனையை புலியாக்கணும் என்ற கேள்வியுடன் வரும் பூனை இன்னும் கூர்மையாக சித்தரிக்கிறது. இதில் உலகியல்துன்பத்தை அழுத்தமாக காட்டும் கதை என்றால் அது ஆயிரம் ஊற்றுக்கள்தான். அந்தக்கதைகூட கடைசியில் ஓர் ஆன்மிகமான கனிவின் தருணத்தைத்தான் சொல்கிறது. இதைத்தான் நாn இந்தக்கதைகள் வழியாக தொடச்சியாக வந்து கூடு, நிழல்காகம் வரை வந்து முதிர்ச்சி அடையும் விஷயயமாகப் பார்க்கிறேன்.

அல்லது இப்படிச் சொல்கிறேனே. வெற்றி போன்ற ஒரு கதை இந்த வரிசையிலேயே இல்லை. அது எதிர்மறையான கதை என்று சொல்லலாம். இனிமையான கதையான கெய்ஷா போன்ற ஒரு கதைகூட இந்த வரிசையிலே இல்லை. இதிலுள்ள எல்லா கதைகளுமே அந்த உலகியல் சார்ந்த ஒரு தளத்தைவிட்டு மேலே எழுந்துவிட்டிருக்கின்றன. ஆகவேதான் சிவம் போன்ற கதைக்கு வந்து சேரமுடிகிறது என்று நினைக்கிறேன்

நாலைந்து நாள் வைத்து வைத்துத்தான் இந்தக்கடிதத்தை எழுதியிருக்கிறேன். ஒரு போக்கில் சிந்திக்கமுடிகிறது. எழுதும்போது தொடர்ச்சியே வரவில்லை.

எம்.சாரதா

***

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு

வணக்கம்

எண்ண எண்ணக்குறைவதிலிருந்து, ஆகாயம் வரைக்கும் 69கதைகள்.ஆனால் முட்டையிட்டு குஞ்சுபொறித்து வானுக்கே திரும்பிச்சென்ற அக்குருவிகளின் கதையையும் சேர்த்து 70 ஆகவே நான் கணக்கில் கொண்டிருக்கிறேன். அத்தனை கதைகளின் மீதும் அக்குருவிகளின் சிறகடிப்பை உணரமுடிந்ததென்னால். முதல் வாரக்கதைகளை படிக்கையிலேயே இவ்விடுமுறைக்காலம் முடிந்தால் கதைகளும் நின்றுவிடுமே என்று அஞ்சத் துவங்கியிருந்தேன்.  மிகப்பிடித்த  ஒரு பண்டத்தைசுவைத்துச் சாப்பிடச்சாப்பிட அது தீர்ந்துவிடுமே என்று கவலை  வருவதைபோல.

கதைகள் வரத்தொடங்கியபின்னர் இந்த வைரஸ், அதனாலான உலகளாவிய தொற்று மற்றும் இறப்புக்கள் குறித்த  மனதின் எதிர்மறை எண்ணங்கள் குறையத்துவங்கி பின்னர் முற்றிலுமாக அவற்றை மறந்து வாழ்வைக் கொண்டாடும் மனநிலைக்கே  வந்துவிட்டிருந்தேன்..

இக்கதைகளின் போது, மூளைப்பிளவாளுமை இருப்பவளைப்போல  என்னை இரண்டாக பகுத்துக்கொண்டுவிட்டிருந்தேன்.  உறவுகளும் உணர்வுகளுமாய் உயிர் நிறைந்து ததும்பும் இத்தொடர் சிறுகதைகளில் முற்றிலுமாக ஆழ்ந்து கதைகளுக்குள்ளேயே நுழைந்து  அக்கதைகளின் களங்களிலேயே வாழத்துவங்கிவிட்டிருந்தேன். அன்னையாக ஆசிரியையாக குடும்பத்தலைவியாக இல்பேணுவதும் ஆன்லைன் வகுப்புக்கள் எடுப்பதும் ஒருபக்கம் இயல்பாக நடந்துகொண்டிருந்தது. மறுபுறம் அனந்தனாக மாம்பழங்களை சுவைத்தேன், நாடகம் அமைத்தேன், நடிகைகளைத் தேடியலைந்தேன் தங்கையை தாழிட்ட அறைக்கதைவை திறந்து மீட்டேன் நாகமணியை பொக்கிஷமாக பாதுகாத்தேன், அரைத்த மாவை வாங்கப்போனேன் குமரேசனாயிருந்து ராஜம்மையை காதலித்தேன், முயன்று டவரின் மீதேறி எங்களிருவருக்குமாக விரிந்திருந்த நீலாகாசத்தைக் கண்டேன் குற்றங்கள் புரிந்தேன் துப்புத்துலக்கினேன் மின்னதிர்ச்சியை அடைந்தேன், மலைப்பாம்பு, மரஞ்செடிகொடிகள், கருங்குரங்கு, யானைகள், பூனை, புலி குருவி, காகங்கள்,நாய் என்று பல்லுயிர்ப்பெருக்கின் ஒரு பகுதியாக பல்வேறிடங்களில் பல ஆளுமைகளாக நானிருந்தேன். போற்றியாக, கரடிநாயராக, டீக்கனாராக சரஸ்வதியாகஇருந்தேன் விருந்துக்கும், இசைக்கச்சேரிக்கும், களவுக்கும், மலையேற்றத்துக்கும் மருத்துவமனைக்கும் போனேன் களவுகொடுத்தேன். கன்றை ஈன்றேன் கருப்பட்டியைத்தேடிச்சென்று கதவைதாழிட்டுக்கொண்டு இருட்டில் அழுதேன். ஆரோக்கியப்பச்சையை தின்றுவிட்டு காடுமேடெல்லாம் அலைந்தேன் கதகளியாடினேன், கணவனிடம் அறை வாங்கினேன். மூக்கே இல்லாமல் பிறந்த  மகவிற்கு பலநூறு பெயர்களிட்டேன்.  சிற்பங்கள் செய்தேன், மனம் கவர்ந்தவளை தினமும் பேருந்தில் தொடர்ந்தேன் ஆறுகளை ஒடைகளை கடந்தேன். எங்கெங்கோ பயணித்தேன், பிறந்தேன் இறந்தேன் மீண்டும் உயிர்த்தேன் நன்றும் தீதும் இன்பமும் துன்பமும் பலதரப்பட்ட சுற்றமும் நட்புமாக ஒரு முழுஜென்மத்திற்கான வாழ்வையே இந்நாட்களில் நான் முற்றாக வாழ்ந்து முடித்துவிட்டேன்

மிகப்பிரியமானவர்களை நீண்ட பயணத்தின்பொருட்டு ரயிலேற்றிவிட்டு தனியே வீடு திரும்புகையில் இருக்கும் வெறுமையும் துயரும் நிரம்பிய இப்போதிருக்கும் இக்கதைகளினியில்லை என்னும் உணர்வினை எழுத்தில் சரியாக கொண்டுவரவே முடியவில்லை என்னால்.

அறைச்சன்னல் கம்பிகளின் வழியேமட்டும் பார்த்திருந்த,  எல்லையின்றி பரந்து விரிந்திருந்த ஆகாயத்திற்கு வழிகாட்டும்  அன்னைப்பறவையென முன்னே பறந்த படியிருக்கும்  உங்கள் எழுத்துக்களை தொடர்ந்து முற்றிலும் புதியதோர் உலகிற்குள்உயர உயரப்பறக்க துவங்கி இருக்கும் ஆயிரக்கணக்காணவர்களில் நானும் ஒருத்தி.

ஒரு வாழ்வுக்குள் பல வாழ்வை வாழவைத்த இச்சிறுகதைகளை ஆமாடப்பெட்டிகளில் சேர்த்துவைத்திருக்கும் அருமணிகளைப்போல, வண்ணக்கூழாங்கற்களைப்போல, மயிற்பீலியைபோல பூஞ்சிறகுகளைப்போல, மின்னும் காக்காய்பொன்னைபோல மனதில் சேர்த்து வைத்துக்கொண்டிருக்கிறேன். தொடர்கதைகள் முடிந்துவிட்டன, எனினும் அவையளித்திருந்த  நிறைவும், துயரும் இனிமையும் நெகிழ்வும் ஒருகணமும் ஒழியாமல் அசைந்துகொண்டேயிருக்கும் வாழ்வின் அசைவில்லாத சாட்சிகளென இருக்கும் மலைத்தொடர்ச்சியைபோல  எப்போதும் உடனிருக்கும்

ஒருகுரல் மலையடுக்குகளில் பல்லாயிரமாக பெருகுவதைப்போலவே இக்கதைகள் பெருகிபெருகிச்சென்று  சேர்ந்திருக்கும், மனதை நிறைத்திருக்கும் அனைவரின் சார்பாகவும் நன்றி

உங்களின் எழுத்துக்களின் தாக்கமில்லா பகுதியென என் வாழ்வில் எதுவுமே இல்லையென்னும்படிக்கு முழுவாழ்வுமே உங்களிடமிருந்து கற்றவைகளும் பெற்றவைகளுமாகவே நிறைந்திருப்பதால் நீங்கள் சொன்னவைகளை, எழுதியவைகளை,  அளித்தவைகளையே எப்போதும் கடிதங்களென திருப்பி உங்களுக்கே அனுப்புகிறேன்.

அன்புடன்

லோகமாதேவி

***

69 ஆகாயம் [சிறுகதை]

68.ராஜன் [சிறுகதை]

67. தேனீ [சிறுகதை]

66. முதுநாவல்[சிறுகதை]

65. இணைவு [சிறுகதை]

64. கரு [குறுநாவல்]- பகுதி 1

64. கரு [குறுநாவல்]- பகுதி 2

63. ‘பிறசண்டு’ [சிறுகதை]

62. நிழல்காகம் [சிறுகதை]

61. லாசர் [சிறுகதை]

60. தேவி [சிறுகதை]

59. சிவம் [சிறுகதை]

58. முத்தங்கள் [சிறுகதை]

57. கூடு [சிறுகதை]

56. சீட்டு [சிறுகதை]

55. போழ்வு [சிறுகதை]

54. நஞ்சு [சிறுகதை]

53. பலிக்கல் [சிறுகதை]

52. காக்காய்ப்பொன் [சிறுகதை]

51. லீலை [சிறுகதை]

50. ஐந்து நெருப்பு[ சிறுகதை]

49. கரவு [சிறுகதை]

48. நற்றுணை [சிறுகதை]

47. இறைவன் [சிறுகதை]

46. மலைகளின் உரையாடல் [சிறுகதை]

45. முதல் ஆறு [சிறுகதை]

44. பிடி [சிறுகதை]

43.. கைமுக்கு [சிறுகதை]

42. உலகெலாம் [சிறுகதை]

41. மாயப்பொன் [சிறுகதை]

40. ஆழி [சிறுகதை]

39. வனவாசம் [சிறுகதை]

38. மதுரம் [சிறுகதை]

37. ஓநாயின் மூக்கு [சிறுகதை]

36. வான்நெசவு [சிறுகதை]

35. பாப்பாவின் சொந்த யானை [சிறுகதை]

34. பத்துலட்சம் காலடிகள் [சிறுகதை]

33. வான்கீழ் [சிறுகதை]

32. எழுகதிர் [சிறுகதை]

31. நகைமுகன் [சிறுகதை]

30. ஏகம் [சிறுகதை]

29. ஆட்டக்கதை [சிறுகதை]

28. குருவி [சிறுகதை]

27. சூழ்திரு [சிறுகதை]

26. லூப் [சிறுகதை]

25. அனலுக்குமேல் [சிறுகதை]

24. பெயர்நூறான் [சிறுகதை]

23. இடம் [சிறுகதை]

22. சுற்றுகள் [சிறுகதை]

21. பொலிவதும் கலைவதும் [சிறுகதை]

20. வேரில் திகழ்வது [சிறுகதை]

19. ஆயிரம் ஊற்றுக்கள் [சிறுகதை]

18. தங்கத்தின் மணம் [சிறுகதை]

17. வானில் அலைகின்றன குரல்கள் [சிறுகதை]

16. ஏதேன் [சிறுகதை]

15. மொழி [சிறுகதை]

14. ஆடகம் [சிறுகதை]

13. கோட்டை [சிறுகதை]

12. விலங்கு [சிறுகதை]

11. துளி [சிறுகதை]

10. வேட்டு [சிறுகதை]

9. அங்கி [சிறுகதை]

8. தவளையும் இளவரசனும் [சிறுகதை]

7. பூனை [சிறுகதை]

6. வருக்கை [சிறுகதை]

5. “ஆனையில்லா!” [சிறுகதை]

4. யா தேவி! [சிறுகதை]

3. சர்வ ஃபூதேஷு [சிறுகதை]

2. சக்தி ரூபேண! [சிறுகதை]

1. எண்ண எண்ணக் குறைவது [சிறுகதை]

முந்தைய கட்டுரைகூடு, காக்காய்ப்பொன் – கடிதங்கள்
அடுத்த கட்டுரைஅவனை எனக்குத் தெரியாது- கடிதங்கள்