ஊரடங்குச் சட்டத்தையும் மீறி உங்களது உடல் வைக்கப்பட்டிருப்பதாகச் சொன்ன அந்த வைத்தியசாலையின் வாசலில் எங்களுக்கான கடைசி நம்பிக்கைகளை இறுகப் பிடித்தவர்களாக நின்றிருந்தோம். கண்களில் கருணை உள்ளவர் எவரையாவது எங்கள் மீதுசாட்டு ரஹ்மானே என்கிற வேண்டுதல், தகிக்கும் உள்ளத்தைத் தாண்டி வார்த்தைகளாக பொரிந்து கொண்டிருந்தது.