ஷாஜி

ஷாஜி இதுவரை அவரது கட்டுரைகளை ஆங்கிலத்தில்தான் எழுதிவந்தார். அவற்றின் மூலவடிவங்கள் ஆங்கில இதழ்களில் வெளிவந்தன. தமிழில் வாசிக்க முடியும், எழுத்துக்கள் கைவருவதில்லை. ஆரம்பத்தில் அவரது கட்டுரைகளை நான் மொழியாக்கம் செய்தேன். பின்னர் முபாரக் மொழியாக்கம் செய்தார். இப்போது அவரே தமிழில் நேரடியாக எழுத ஆரம்பித்திருக்கிறார். ஆச்சரியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது

ஷாஜியின் நடை இயல்பாக, ஒரு புதிய கையின் எந்த தயக்கங்களும் இல்லாமல் இருந்தது. அவர் தொடர்ந்து நிறைய எழுதுவார் என நினைக்கிறேன். ஒரே குறை கொஞ்சம் என்னுடைய நடையின் சாயல் இருப்பதுதான் வேறு வழியே இல்லை, நான் மொழியாக்கம்செய்த கட்டுரைகளைத்தான் அவர் அதிகம் படித்திருப்பார். போகப்போக சரியாகலாம்

ஜெ

http://musicshaji.blogspot.com/2011/02/blog-post_2217.html
http://musicshaji.blogspot.com/2011/02/blog-post_28.html

முந்தைய கட்டுரைதிராவிடவேதம் விளக்கம்
அடுத்த கட்டுரைசிறுகதைகள் கடிதங்கள்