நற்றுணை போழ்வு- கடிதங்கள்

 நற்றுணை [சிறுகதை]

அன்புள்ள ஜெ

நற்றுணை கதையை முழுசாக வாசிக்க இரண்டு வாசிப்பு தேவைப்பட்டது. ஏராளமான வரலாற்றுக்குறிப்புகள். ஏராளமான நுண்ணிய செய்திகள். டதி போன்ற ஆளுமைகள் ஒருபக்கம் சைக்கிள் போன்ற கருவிகள் இன்னொருபக்கம். ஐடியாலஜியும் டெக்னாலஜியும் ஒன்றுசேர்ந்து விடுதலையை உருவாக்குகின்றன. ஆனால் எல்லாவற்றையும் இணைக்கிறது யட்சி என்ற அந்த கிறுக்குநிலை. அதுதான் கனவு. அந்தக்கனவின் கதை இது

சிவக்குமார் எஸ்

***

அன்புள்ள ஆசான்,

‘மதுரம்’ல் இருந்த அதே இனிமை ‘நற்றுணை’ கேசினியில் உணர முடிந்தது. இவ்வளவு இனிமையான நம்பிக்கை ஊட்டும் ‘பேய்’ அல்லது யக்ஷி கதை நான் படித்ததில்லை

அழுது வெறிகொண்டு எழுந்து வாய்விட்டு சிரித்து தீயவர்கள்  வீழ்வதை கண்டு சந்தோஷித்து என்று எல்லா உணர்ச்சி உச்சத்தையும் என்னுள் எழுப்பியது. ஒரு சிறுகதை காவிய உணர்ச்சிகள் அத்தனையும் தொட்டு சென்றது மலைப்பாக இருந்தது.

பேய் அல்லது அமானுஷ்யம் என்றால் நான் எளிதில் பயப்படுபவன். பெரும்பாலும் ‘யாரோ தொடரும் உணர்வு’ ஷெல்ப் தானே திறந்து கொள்வது கதவு திறப்பது என்று இரவில் எல்லா விஷயங்களும் பயம் தரக்கூடிய மற்றும் எளிதில் அது ‘பூதாகாரமாக’ விரிந்து விரிந்து தூக்கத்தை தொலைக்கும் விஷயமாக இருப்பது.

கேசினி அவ்வளவு க்யூட் ஆக இனிமையாக இருப்பது மற்றும் அந்த புலியின் உறுமல் இரண்டுமே நம்பிக்கை தரும் விதமாக இருந்தது

அந்த ஊர் வீடு அதன் அமைப்பு அந்த மொத்த நிலவமைப்பு காலமாற்றங்கள் மனிதர்கள் அவர்களின் நல்லவை மற்றும் தீய செயல்கள் காலகாலமாக இருக்கும் அதன் தாக்கம் என்று கேசினி போல ‘காலமும் இடமும் அற்ற வெளியில்’ இருந்துகொண்டு அவற்றை எழுதியது போல இருந்தது.

எல்லோருக்கும் கேசினி போனற நம்பிக்கை தரும் யக்ஷி அருகில் இருக்கவேண்டும் என்று பட்டது.நற்றுணை – மிக பொருத்தமான அருமையான தலைப்பு

(இதில் குறிப்பிட்டுள்ள ‘மாதவி’யின் கதை படிக்க ஆவலாக உள்ளது :)

// கேசினிதான் மாதவியை அந்தச் சிக்கலில் இருந்து காப்பாற்றினாள். அது வேறு கதை //
)

நன்றி ஆசான்

அன்புடன்
ஸ்ரீதர்

இணைவு [சிறுகதை]

போழ்வு [சிறுகதை]     

அன்புள்ள ஜெ

வரலாற்றின் மூர்க்கமான விதிகளைப் பற்றிய கதைகள் இணைவு போழ்வு. அதிகாரம் குரூரமான வன்முறை மூலம் மட்டுமே நிலைநிறுத்தப்படக்கூடியது. ஆகவே அதிகாரத்தில் எவர் இருந்தாலும் குரூரமாகவெ இருக்கமுடியும். ஆனால் அவர்கள் இலட்சியவாதிகளாகவும் நீதிமான்களாகவும் கருணை கொண்டவர்களாகவும் இருக்கவேண்டும். அப்படி இருப்பவர்கள் இரண்டாகப்பிளந்துவிடுகிறார்கள். இது நெப்போலியன் முதல் எல்லா பேரரசர்களுக்கும் இருக்கும் பண்பு. ஆகவேதான் நாம் எல்லா பெரிய அரசர்களைப்பற்றியும்  ‘இன்னொரு’ முகம் என்று சிலவற்றை வாசிக்கிறோம். இந்தக்கதை அப்படி ‘இன்னொரு’ முகத்தை காட்ட முயலவில்லை. இரண்டு முகங்களும் எப்படி உருவாகின்றன எப்படி அவை தேவைப்படுகின்றன என்று காட்டுகிறது

ஆர்.ஸ்ரீனிவாஸ்

***

அன்புநிறை  ஜெ,

தங்களின் போழ்வு, இணைவு சிறுகதைகள் வாசித்தேன். அதை வாசிக்க வாசிக்க எனக்கு தமிழ்நாட்டில் நடந்த பாளையக்காரர்கள் கிளர்ச்சி அல்லது தென்னிந்திய கிளர்ச்சி என்று கூறப்படும் ஆங்கிலேயர்களுக்கு எதிரான கிளர்ச்சி நினைவிற்கு வந்தது. பாளையக்கார முறை  மதுரை தளவாய் அரியநாதர் என்பவரால் இங்கு அறிமுகப்படுத்தப்பட்டது. அதற்கு முன்பு இது காகதாயர் அரசர் பிரதாபருத்ரன் வாராங்கலில் இந்த முறை முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது. அவர்களிடமிருந்து இது விஜயநகர பேரரசு நாயக்கர்கள் அரச என்று தொடர்ந்து இந்தமுறை பின்பற்றப்பட்டு வரப்பட்டது. இவர்கள் மதுரையை எழுபத்திரண்டு பாளையங்களாக பிரித்து காவல் காத்தனர். மக்களை காவல்காப்பதால் அவர்களிடமிருந்தே காவல்பிச்சை என்ற வரியையும் வசூல் செய்தனர்.  பல அரசியல் மாற்றங்களுக்கு பிறகு நாயக்கர்களை தோற்கடித்து ஆற்காடு நவாப் தலைமைக்கு வரும்பொழுது இந்த பாளையக்காரர்கள் ஆற்காடு நவாபிற்கு வரிகட்ட மறுத்தனர். ஆற்காடு நவாபிற்கு ஆதரவாக ஆங்கிலேயர்கள் வருகின்றனர். இடையில் கர்னாடக போர்கள் நடக்கின்றன. இறுதியில் ஆற்காடு நவாப்பை சிறையிலிடுகின்றனர். ஆங்கிலேயேர்கள் மொத்த ஆட்சியையும் கைப்பற்றுகின்றனர்.

இங்கு அனைத்து நிலப்பரப்பிலும் துரோகத்தால் வீழ்ந்தவர்களே அதிகம் இங்கு புலித்தேவன், வீரபாண்டிய கட்டபொம்மனிலிருந்து அனைவரும் முதலில் வரிக்கட்டிக்கொண்டிருந்தவர்கள் தான். வரி அதிகரித்த பொழுது தங்களால் கட்டமுடியாது என்ற நிலைவரும் பொழுதுதான் எதிர்த்தனர். அதுவே பின்பு ஆங்கிலேயர்கள் நாட்டைவிட்டு துரத்துவதற்கான புரட்சியாக மாற்றினர். இதில் வீரபாண்டி கட்டபொம்மன் ஒருபடி மேலே சென்று அப்போதைய சென்னை பிரைவி கவுன்சிலில் ஜாக்சன் துரை தன்னை அவமானம் தெய்ததாகவும் தான் ஒழுங்காக வரிகட்டிக்கொண்டு வருவதாகவும் முறையீடு செய்துள்ளார். அவரை நீக்கி லூசிங்டன் என்பவரை ஆட்சியாளராக நியமித்தனர். மேலும் காலின் ஜாக்சன் ஜேம்ஸ் லண்டன் போன்ற கிழக்கிந்திய அலுவலர்கள் வீரபாண்டிய கட்டபொம்மன் பிரச்சனை இல்லாதவர் என்று பதிவு செய்துள்ளனர்.

இதில் மிக சுவாரசியமானது பாளையக்காரர்களின் கூட்டமைப்பு. இக்கூட்டமைப்பில் பெரும்பாலான தமிழகம் முழுவதும் அடங்கியது. தமிழகம் தவிர்த்து மலபார், கர்னாடக மற்றும் மராத்திய கூட்டமைப்பும் அடங்கியது. இதையெல்லாம் ஒருங்கிணைத்தவர் திண்டுக்கல் கோபால் நாயக்கர் இவர் திண்டுக்கல் கோட்டையில் வேலுநாச்சியாருக்கு ஆங்கிலேயருக்கு எதிராக போராடியதால் அடைக்கலம் கொடுத்தவர். இவர் பலப்போர்களில் வீரமுடன் ஆங்கிலேயர்களை எதிர்த்தவர். காவிரி போர், ஓடாநிலை போர், அரச்சலூர் போர் என இவர் சந்தித்த போர்களைப் பற்றிய விவரனைகள் ஆங்கிலேயர்களின் பதிவேடுகளில் வாசிக்க கிடைக்கிறது. இவரும் துரோகத்தால் வீழ்த்தப்பட்டார். இவரை ஆங்கிலேயருக்கு காட்டிக்கொடுத்தது தன் சொந்த சமையற்காரர் நல்லப்பன் என்பவர். மலபார் கோவை கூட்டமைப்பின் தலைவர் கேரளா வர்மா என்பரை ஏமன்நாயர் என்பவர் ஆங்கிலேயருக்கு காட்டிக்கொடுத்தார்.  இது அனைத்திந்திய முறை போலும். நம்முடைய சுதேசி போர்கள், புரட்சிகள் அனைத்தும் தோற்றதற்கு காரணம் ஒன்றுபோலவே இருக்கும். அது வேலூர் புரட்சியானாலும் சரி, முதல் சுதந்திரப் போர் என கூறப்படும் 1857ம் ஆண்டு புரட்சியானாலும் சரி ஒன்றுபோல் தான் நடந்தது. ஆங்கிலேயரிடமிருந்து தப்பித்துச்செல்ல வேலுத்தம்பி காடுகளில் தான் தஞ்சம் புகுவார் அதே போன்று தான் பாளையக்காரர்கள் வீரபாண்டிய கட்டபொம்மு, மருது சகோதரர்கள் மற்றும் 1857ம் ஆண்டு புரட்சியின் குறிப்பிட்ட தலைவரான நானா சாகேப் போன்றோரும் காடுகளில்தான் தஞ்சம் புகுவர்.

இந்த கூட்டமைப்பும் சரியான ஒருங்கிணைப்பு தலைமை நவீன ஆயுதங்களை பயன்படுத்த தெரியைாமை போன்றவற்றால் தோற்றது. இந்த கூட்டமைப்புகளின் புரட்சி தென்னிந்திய புரட்சி என்று அறியப்படுகிறது. இதை ஒடுக்கியவர் கர்னல் அன்னூ என்பவர். இதைத் தவிர்த்து பாளையக்காரர்கள் தங்கள் சக்தி ஏற்றவாறு அவர்கள் இடத்திலிருந்து கிளர்ச்சி செய்தனர்.  .

1809ம் ஆண்டு வேலுதம்பி கொண்டுவந்த குண்டறை விளம்பரம் எனும் அறிக்கை போலவே, அதற்கு முன்பே 1801ம் ஆண்டு சின்னமருது என்பவர் திருச்சி பிரகடனம் எனும் அறிக்கையை ஜூன் 12ம் தேதி வெளியிட்டார். அது ஸ்ரீரங்க கோயில், திருச்சி கோட்டை என அனைத்து மைய இடங்களிலும் பொதுமக்கள் கூடும் இடங்களிலும் ஒட்டப்பட்டு ஆங்கிலேயருக்கு எதிராக மிகத் தீவிரமான எதிர்ப்பை பதிவு செய்தது. அந்த அறிக்கை அனைவரும் ஒன்றினைந்து ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராட அறைகூவியது. அது அப்பொழுது மிகப்பொிய  பேரதிர்ச்சியை ஆங்கிலேயேரிடையே ஏற்படுத்தியது. அவ்வறிக்கையின் ஒவ்வொரு வார்த்தையும் ஆங்கிலேயருக்கு எதிராக அறைகூவியது.

இவ்வாறு அனைத்திந்திய முறையில் ஆங்கிலேயர்களுக்கு எதிரான கிளர்ச்சிகள், சிறியளவிலான புரட்சிகள் நடந்துக்கொண்டுதான் இருந்தன. அதில் கேரளாவில் நடந்த ஒரு கிளர்ச்சியின் மையக் கதை வாசிக்கையில் எனக்கு தமிழகத்தில் நடந்த பாளையக்கார புரட்சி நினைவிற்கு வந்தது. கதையில் கிருஷ்ணாம்பிள்ளைகை்கு தண்டனை நிறைவேற்ற வேலுதம்பி வருவதற்கு முன்பு அவரின் ஆடை அலங்காரம் மற்றும்  பெயின்ஸ் மன்றாடல் என அந்தக் காட்சிபதிவு அற்புதமாக இருந்தது. அப்போதைய இந்தியா வணிக இந்தியா, அரசியல் இந்தியா, ஒடுக்கப்பட்டவர்களின் இந்தியா என பலவாறாக பிரிந்திருந்தது. அதில் அரசியல் இந்தியாவை இக்கதைகள் அருமையாக எடுத்துக்காட்டின.

இக்கதைகளைப் படித்தவுடன் இந்தியா முழுவதும் அக்காலத்தில் ஏற்படுத்திய ஒரு புரட்சி அலையின் சித்திரம் மனதில் இருந்தது. இந்த விரிந்த நிலப்பரப்பில், வெவ்வேறு கலாச்சார அமைப்புகள் கொண்ட நிலத்தில் போர் முறைகள் ஒன்றாக இருந்தும் ஒருங்கிணைப்பு கிட்டாமை என்பது வருந்தத்தக்கதே. இக்கதைகள் அக்கால வரலாற்று நினைவுகளை மீண்டும் நினைத்துப்பார்க்க உதவியது.

அன்புடன்

ரா. பாலசுந்தர்

69 ஆகாயம் [சிறுகதை]

68.ராஜன் [சிறுகதை]

67. தேனீ [சிறுகதை]

66. முதுநாவல்[சிறுகதை]

65. இணைவு [சிறுகதை]

64. கரு [குறுநாவல்]- பகுதி 1

64. கரு [குறுநாவல்]- பகுதி 2

63. ‘பிறசண்டு’ [சிறுகதை]

62. நிழல்காகம் [சிறுகதை]

61. லாசர் [சிறுகதை]

60. தேவி [சிறுகதை]

59. சிவம் [சிறுகதை]

58. முத்தங்கள் [சிறுகதை]

57. கூடு [சிறுகதை]

56. சீட்டு [சிறுகதை]

55. போழ்வு [சிறுகதை]

54. நஞ்சு [சிறுகதை]

53. பலிக்கல் [சிறுகதை]

52. காக்காய்ப்பொன் [சிறுகதை]

51. லீலை [சிறுகதை]

50. ஐந்து நெருப்பு[ சிறுகதை]

49. கரவு [சிறுகதை]

48. நற்றுணை [சிறுகதை]

47. இறைவன் [சிறுகதை]

46. மலைகளின் உரையாடல் [சிறுகதை]

45. முதல் ஆறு [சிறுகதை]

44. பிடி [சிறுகதை]

43.. கைமுக்கு [சிறுகதை]

42. உலகெலாம் [சிறுகதை]

41. மாயப்பொன் [சிறுகதை]

40. ஆழி [சிறுகதை]

39. வனவாசம் [சிறுகதை]

38. மதுரம் [சிறுகதை]

37. ஓநாயின் மூக்கு [சிறுகதை]

36. வான்நெசவு [சிறுகதை]

35. பாப்பாவின் சொந்த யானை [சிறுகதை]

34. பத்துலட்சம் காலடிகள் [சிறுகதை]

33. வான்கீழ் [சிறுகதை]

32. எழுகதிர் [சிறுகதை]

31. நகைமுகன் [சிறுகதை]

30. ஏகம் [சிறுகதை]

29. ஆட்டக்கதை [சிறுகதை]

28. குருவி [சிறுகதை]

27. சூழ்திரு [சிறுகதை]

26. லூப் [சிறுகதை]

25. அனலுக்குமேல் [சிறுகதை]

24. பெயர்நூறான் [சிறுகதை]

23. இடம் [சிறுகதை]

22. சுற்றுகள் [சிறுகதை]

21. பொலிவதும் கலைவதும் [சிறுகதை]

20. வேரில் திகழ்வது [சிறுகதை]

19. ஆயிரம் ஊற்றுக்கள் [சிறுகதை]

18. தங்கத்தின் மணம் [சிறுகதை]

17. வானில் அலைகின்றன குரல்கள் [சிறுகதை]

16. ஏதேன் [சிறுகதை]

15. மொழி [சிறுகதை]

14. ஆடகம் [சிறுகதை]

13. கோட்டை [சிறுகதை]

12. விலங்கு [சிறுகதை]

11. துளி [சிறுகதை]

10. வேட்டு [சிறுகதை]

9. அங்கி [சிறுகதை]

8. தவளையும் இளவரசனும் [சிறுகதை]

7. பூனை [சிறுகதை]

6. வருக்கை [சிறுகதை]

5. “ஆனையில்லா!” [சிறுகதை]

4. யா தேவி! [சிறுகதை]

3. சர்வ ஃபூதேஷு [சிறுகதை]

2. சக்தி ரூபேண! [சிறுகதை]

1. எண்ண எண்ணக் குறைவது [சிறுகதை]

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–80
அடுத்த கட்டுரைஉஷ்ணம் – கடிதங்கள்