சென்ற சிலநாட்களாகவே என் படுக்கையறைக்குள் கருவேப்பிலை மணம். கோடை தொடங்கியதுமே எல்லா சன்னல்களையும் திறந்துவிட்டு கொசுவலை கட்டிக்கொண்டு படுக்கத் தொடங்கினேன். இங்கே உண்மையில் மெய்யான கோடைகாலம் தொடங்கவேயில்லை- இன்னமும்கூட. அவ்வப்போது மழை. பின்னிரவில் நல்ல குளிர். ஆகவே மெய்யான காற்றில் உறங்க விரும்பினேன். காலை எழுந்தால் என் கொசுவலைமேல் கருவேப்பிலைகள்.
யார் செய்வது? இலக்கியவாதி சமூகத்திற்கு வெறும் கறிவேப்பிலை மட்டுமே என உணர்த்த விரும்புவது யார்? அடைக்கலங்குருவிகள்! காலையில் அவை என் தலைக்குமேல் குடும்பச்சண்டை போட்டன. காற்றில் கும்மாளமிட்டன. அறைமுழுக்க பக்கத்துவீட்டு வேல்முருகனின் கொல்லையில் நின்றிருக்கும் பெரிய கருவேப்பிலை மரத்தின் இலைகள். என்ன நடக்கிறது என்று புரிய மேலும் சிலநாட்களாகியது. அருண்மொழிதான் கண்டுபிடித்துச் சொன்னாள். டியூப் லைட்டின்மேல் ஒரு கூடுகட்டும் முயற்சிகள் தொடங்கிவிட்டிருந்தன.
அதன் டிசைன் மற்றும் இடத்தைப் பற்றி கணவன் மனைவி கொண்ட கருத்துப்பரிமாற்றம் வழக்கமாக எல்லா ஜோடிகளிடையேயும் கருத்துப் பரிமாற்றம் நிகழும் அதே வடிவில் நிகழ்ந்ததன் சத்தம்தான் நான் கேட்டது. சிறு தூவல்களும் உதிர்ந்து கிடந்தன. புருஷன் பெண்சாதியை முடியை பிடித்து நாலு கொத்து கொத்தி கருத்தொருமையை உருவாக்கியதன் விளைவாக இருக்கலாம்.
அடைக்கலங் குருவிகள் வீட்டுக்குள் கூடுகட்டுபவை. மரப்பொந்துகள் பாறையிடுக்குகளில் கட்டும் வழக்கம் கொண்டவை. அவற்றைவிட வீடுகள் உதவியானவை என்று பற்பல நூற்றாண்டுகள் முன்னரே கண்டுகொண்டிருந்தன. மனிதர்கள் அவற்றை ஒன்றும் செய்வதில்லை, ஆனால் அந்த முட்டைகளுக்காக வரும் பாம்புகள் காகங்கள் போன்றவற்றை மனிதர்கள் அண்டவிடுவதில்லை.
இன்று பெரும்பாலான வீடுகளில் குருவிகள் நுழைவதில்லை. எந்நேரமும் மின்விசிறிகள் சுழல்வதே காரணம். அவ்வப்போது திறந்து கிடக்கும் ஒழிந்த அறைகளிலோ வெளியில் பொருட்களைப் போட்டுவைக்கும் இடங்களிலோ அவை கூடு கட்டுகின்றன. எனக்கு பொதுவாக மின்விசிறி ஒவ்வாது. மூக்கு அடைக்கும். ஒன்று ஏஸி. அல்லது இயற்கைக் காற்று. மின்விசிறி இல்லாததனால்தான் இவை என் படுக்கையறையை தெரிவுசெய்திருக்கின்றன.
இந்த புரிதலை விலங்குகள் எளிதாக அடைகின்றன. கவி போன்ற கானுலாநிலையங்களில் மான்கள் கூட்டம்கூட்டமாக வந்து நம் விடுதிகளைச் சுற்றி மேய்வதைக் காணலாம். மனிதர்கள் இருக்குமிடங்களை சிறுத்தைகள் அணுகுவதில்லை என்பதே காரணம். கடலுக்குள் விழுந்துவிடும் மீனவர்கள் டால்ஃபின்கள் இருக்குமிடத்தை நாடுவார்கள் என்று எப்போதோ படித்த நினைவு
அடைக்கலங்குருவி கருவேப்பிலை கொத்துகளை கொண்டு கீழே போட்டது. அது சற்றே வாடி நாராக ஆனதும் எடுத்துச்சென்று வளைத்து கூடுகட்டியது. ஒரு சிறுசெய்தி, கூடு கட்டுவது ஆணின் வேலை. பெண் வந்து பார்த்து கூடு சரியாக இருக்கிறதா என்று சோதனையிட்டு அதன்பின்னரே அண்டவிடும். அதன்பிறகே காதல், முட்டையிடல் எல்லாமே.
பரிசோதனை முடிந்து கூடு ஏற்கப்பட இரண்டு நாட்கள் ஆயின. அதற்குள் எனக்குச் சந்தேகம் கூடு மிகமேலோட்டமாக டியூப்லைட் மேல் அமைக்கப்பட்டிருந்தது. விழுந்துவிடுமோ? ஆகவே கீழே துணியால் ஒரு தாங்கு கட்டினேன். அது போதுமா என்ற பதற்றம். அதற்கு பிரச்சினை வரக்கூடாது என்று எழுதும் அறையிலேயே படுக்கையை மாற்றிக்கொண்டேன்
மூன்றுமுட்டைகள் போட்டிருக்கிறது தாய், தந்தைக்கு மூன்று இனிய பதற்றங்கள். மூன்று வருகைகளுக்காக நான் காத்திருக்கிறேன். பார்த்தால் மூன்று சிறிய மண்ணுருண்டைகள் போல. இரவில் பார்த்தால் இரட்டைவிரல் போல வால் கூட்டுக்கு வெளியே நீட்டிக்கொண்டிருக்கும்.பகலில் நாம் அங்கே சென்றால் டிவீட் என்று ஒரு ஓசையுடன் பறந்துசெல்லும். நம்மை திசைதிருப்புகிறதாம்.கணவனும் மனைவியும் இப்போது ‘சொருமிப்பு’ ஆக இருக்கிறார்கள்.
வீட்டில் ஒர் அறை பேற்றறையாக மாறிவிட்டிருக்கிறது.குஞ்சுகள் இன்னும் சிலநாட்களில் வரும் என நினைக்கிறேன்
லீலை [சிறுகதை]
கரவு [சிறுகதை]
ஐந்து நெருப்பு[ சிறுகதை]
நற்றுணை [சிறுகதை]
இறைவன் [சிறுகதை]
மலைகளின் உரையாடல் [சிறுகதை]
முதல் ஆறு [சிறுகதை]
பிடி [சிறுகதை]
கைமுக்கு [சிறுகதை]
உலகெலாம் [சிறுகதை]
மாயப்பொன் [சிறுகதை]
ஆழி [சிறுகதை]
வனவாசம் [சிறுகதை]
மதுரம் [சிறுகதை]
ஓநாயின் மூக்கு [சிறுகதை]
வான்நெசவு [சிறுகதை]
பாப்பாவின் சொந்த யானை [சிறுகதை]
பத்துலட்சம் காலடிகள் [சிறுகதை]
வான்கீழ் [சிறுகதை]
எழுகதிர் [சிறுகதை]
நகைமுகன் [சிறுகதை]
ஏகம் [சிறுகதை]
ஆட்டக்கதை [சிறுகதை]
குருவி [சிறுகதை]
சூழ்திரு [சிறுகதை]
லூப் [சிறுகதை]
அனலுக்குமேல் [சிறுகதை]
பெயர்நூறான் [சிறுகதை]
இடம் [சிறுகதை]
சுற்றுகள் [சிறுகதை]
பொலிவதும் கலைவதும் [சிறுகதை]
வேரில் திகழ்வது [சிறுகதை]
ஆயிரம் ஊற்றுக்கள் [சிறுகதை]
தங்கத்தின் மணம் [சிறுகதை]
வானில் அலைகின்றன குரல்கள் [சிறுகதை]
ஏதேன் [சிறுகதை]
மொழி [சிறுகதை]
ஆடகம் [சிறுகதை]
கோட்டை [சிறுகதை]
துளி [சிறுகதை]
விலங்கு [சிறுகதை]
வேட்டு [சிறுகதை]
அங்கி [சிறுகதை]
தவளையும் இளவரசனும் [சிறுகதை]
பூனை [சிறுகதை]
வருக்கை [சிறுகதை]
“ஆனையில்லா!” [சிறுகதை]
யா தேவி! [சிறுகதை]
சர்வ ஃபூதேஷு [சிறுகதை]
சக்தி ரூபேண! [சிறுகதை]
எண்ண எண்ணக் குறைவது [சிறுகதை
***