சின்னஞ்சிறு வெளி

 

நாளிரவு

பொற்கொன்றை!

இன்றைய மலர்

வான் அலை

நாற்புறமும் திறத்தல்

வீடுறைவு

தனிமைநாட்கள், தன்னெறிகள்.

கொரோனோவும் இலக்கியமும்

தனிமையின் புனைவுக் களியாட்டு

ஒரே இடத்தில் புறவுலகை முழுக்க உதறி அமைவது என்பது எத்தனை ஆழமானது என்று நாள்செல்லச் செல்ல புரிகிறது. ஒன்று இந்த இடமே பிரம்மாண்டமாக விரிந்துவிடுகிறது. நிலத்தளம், இரண்டு மொட்டைமாடிகள். மூன்று பரப்புகளுக்கும் மூன்று தனியியல்புகள் இருக்கின்றன. நிலத்தில் தலைக்குமேல் விரிந்த மலர்மரத்தின் கூரை. முதல்தளத்தில் சூழ்ந்திருக்கும் மரக்கிளைகள். இரண்டாம் மாடியில் வானம்.

நோய்க்கூறெனச் சொல்லும் அளவுக்கு தனிமை அகம் நோக்கிக் குவியவைக்கிறது. சிதறல்களே இல்லை. எழுதவேண்டுமென்றால் அமர்ந்தால்போதும். படிக்கவேண்டுமென்றால் ஏதாவது ஒரு நூலை கையில் எடுத்தால் போதும். எப்போதும் முனைகொண்ட உளநிலை. சிதறலே இல்லை.

நன்று, ஆனால் அது எத்தனை அபாயகரமானது. சில தருணங்களில் நம்மைச் சூழ்ந்து மிகமிகச் செறிவான கடந்த காலம் கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. நிகழ்காலத்திற்கும் கடந்த காலத்திற்குமான வேறுபாடு என்ன? நிகழ்காலம், ஆழம் அற்றது, ஏனென்றால் பொருள் என குவியாதது. கடந்தகாலம் மீது நம் அவதானிப்புகள், நம் உணர்ச்சிகள் படிந்திருக்கின்றன. அங்கே விதையென இருக்கும் ஒவ்வொன்றும் நிகழ்காலத்தில் மரமென முளைத்திருக்கின்றன.

கடந்த காலத்தை எழுதித் தள்ளுகிறேன். எழுத எழுத என்னிடமிருந்து விலக்கிக்கொள்கிறேன். சிலசமயம் நான் அனுபவித்தவை. சிலசமயம் நான் கற்பனைசெய்து அனுபவித்தவை. சிலசமயம் என் கற்பனைக்கும் அப்பாற்பட்டவை என நின்று திகைக்கச் செய்தவை. கடந்த காலத்தை நிகழ்காலத்துடன் இணைக்கும் பொறுப்பு கலைக்கு உண்டு. கடந்தகாலத்தை விளக்கும் பொறுப்பு. அதனூடாக நிகழ்காலத்தை அர்த்தப்படுத்திக் கொள்ளும் பொறுப்பு. இலக்கியம் என்பதே மாபெரும் நினைவுகூரல்தானா?

இங்கே காலையில் எழுந்து நின்றிருக்கையில் என்னுடன் இருப்பவர்களில் எவரும் உயிருடன் இல்லை. பெரும்பாலானவர்கள் மறைந்துவிட்டனர். சிலர் அரைநூற்றாண்டுக்கு முன்னரே சென்றுவிட்டனர். அவர்களின் உலகம் அத்தனை செறிவுடனும் அழகுடனும் இருக்கையில் சூழ்ந்திருக்கும் அன்றாடச் செய்திகளின் உலகம் சலிப்புறவைக்கிறது. அதில் ஒன்றும் புதிதாக இல்லை. திரும்பத் திரும்ப ஒன்றே. சிறிய மனிதர்கள் உலோகப் பொருட்களைப்போல ஓசையிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த வீடுறைவு நாட்களுக்குப் பின்னர் முற்றாகவே மாறிவிடுவேன் என நினைக்கிறேன். முன்பு போல அகவிசையை சிதறடிக்க மாட்டேன். இன்றுகாலை எண்ணிக் கொண்டேன், முற்றாகவே அரசியல் உட்பட இங்குள்ள புறவயச்செயல்பாடுகளில் இருந்து உள்ளத்தை விலக்கிக் கொள்ளவேண்டும். விவாதிக்கவே கூடாது. புனைவிலக்கியத்தில் மட்டுமே இருக்கவேண்டும்

கூடவே அகப்பயிற்சிகள் சில.  அதை செறிவாக தீவிரமாக ஆக்கிக் கொள்ளவேண்டும். பயணங்கள், புறப்பயணம் முடியாமலாகுமென்றால் அகப்பயணங்கள் மட்டும்.

***

பிடி [சிறுகதை]

கைமுக்கு [சிறுகதை]

உலகெலாம் [சிறுகதை]

மாயப்பொன் [சிறுகதை]

ஆழி [சிறுகதை]

வனவாசம் [சிறுகதை]

மதுரம் [சிறுகதை]

ஓநாயின் மூக்கு [சிறுகதை]

வான்நெசவு [சிறுகதை]

பாப்பாவின் சொந்த யானை [சிறுகதை]

பத்துலட்சம் காலடிகள் [சிறுகதை]

வான்கீழ் [சிறுகதை]

எழுகதிர் [சிறுகதை]

நகைமுகன் [சிறுகதை]

ஏகம் [சிறுகதை]

ஆட்டக்கதை [சிறுகதை]

குருவி [சிறுகதை]

சூழ்திரு [சிறுகதை]

லூப் [சிறுகதை]

அனலுக்குமேல் [சிறுகதை]

பெயர்நூறான் [சிறுகதை]

இடம் [சிறுகதை]

சுற்றுகள் [சிறுகதை]

பொலிவதும் கலைவதும் [சிறுகதை]

வேரில் திகழ்வது [சிறுகதை]

ஆயிரம் ஊற்றுக்கள் [சிறுகதை]

தங்கத்தின் மணம் [சிறுகதை]

வானில் அலைகின்றன குரல்கள் [சிறுகதை]

ஏதேன் [சிறுகதை]

மொழி [சிறுகதை]

ஆடகம் [சிறுகதை]

கோட்டை [சிறுகதை]

துளி [சிறுகதை]

விலங்கு [சிறுகதை]

வேட்டு [சிறுகதை]

அங்கி [சிறுகதை]

தவளையும் இளவரசனும் [சிறுகதை]

பூனை [சிறுகதை]

வருக்கை [சிறுகதை]

“ஆனையில்லா!” [சிறுகதை]

யா தேவி! [சிறுகதை]

சர்வ ஃபூதேஷு [சிறுகதை]

சக்தி ரூபேண! [சிறுகதை]

எண்ண எண்ணக் குறைவது [சிறுகதை

 

முந்தைய கட்டுரைமுதல் ஆறு [சிறுகதை]
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–46