அன்புள்ள ஜெ.
இதுவும் திராவிட வேதம் பற்றியதே.
திரு கவிதா (பர்புள் மீடியா சொல்யுஷன்ஸ்) அவர்கள் தொடர்பு கிடைக்காததினால் மட்டுமே. கூகள் செய்து பார்த்தேன். கிடைக்கவில்லை
ஸ்ரீ ராமபரதி குழுவினர் திவ்ய பிரபந்த பாட சாலை (பள்ளிக்கரணையில்) நடத்தி (கடந்த இருபது வருடங்களாக) வருகிறார்கள். இந்த இயக்கம் அரையர் சேவையை ஒட்டி உள்ளது. (பாடலும் நடனமுமாக). அவர்கள் www.araiyar.com என்கிற இணைய தளம் நடத்துகின்றனர்.
ஸ்ரீ ராம பாரதி இறைவனடி சேர்ந்து விட்டார். அவரது துணைவியார் திருமதி சௌபாக்கிய லக்ஷ்மி இந்த நிறுவனத்தை நடத்தி வருகிறார். இது ஒரு பின்னணி.
ஸ்ரீ ராம பாரதி திவ்ய பிரபந்தத்திற்கு ஆங்கில மொழி பெயர்ப்பை ‘sacred book’ என்று பதிப்பித்து உள்ளார். இதனில் ஒரு பகுதியை திரு. ஜெகத்ரட்சகன் பாட சாலையின் அனுமதியுடன் தங்கள் புத்தகத்தில் பதிப்பித்து கொண்டனர்.
ஆனால் திராவிட வேதம் இது வரை அது மாதிரியான அனுமதி எதுவும் பெறவில்லை. இருப்பினும் அவரது புகைப்படமும் அவரது மொழிபெயர்ப்பு பற்றிய குறிப்பும் வலை தளத்தில் இருக்கிறது. அதை எடுத்து ஆண்ட விதமும், வருத்தமாக இருக்கிறது. முதலில் இது ஜகத்ரட்சகனின் ஒரு முயற்சியோ என நினைத்தோம். திரு கவிதா அவர்களின் பதிலுக்கு பின் தான் எங்களால் இந்த அத்து மீறலை அடையாளம் கண்டு கொள்ள முடிந்தது.
ஒருபுறம் நல்ல விஷயம் தானே என்றாலும், மறுபுறம், ஒருவரின் கடும் உழைப்பு ‘taken for granted’ என்கிற நிலையை எப்படி சரி செய்வது என புரியவில்லை.
நீங்கள், இந்த விஷயத்தோடு சம்பந்தம் அற்றவர் எனினும், வேறு வழி தோன்றாமல் இதனை தெரிவிக்கிறோம் இடைஞ்சலுக்கு மன்னிக்கவும்
சௌபாக்கிய லக்ஷ்மி அவர்களுக்கும் ஒரு cc செய்துள்ளேன்
அன்புடன்
முரளி
—
M.Murali
Consultant
அன்புள்ள முரளி
நான் பார்த்தவரை திராவிட வேதம் அமைப்பினர் பிறரது உழைப்புக்கும் ஆர்வத்திற்கும் எந்த மதிப்பும் கொடுக்காமல் எடுத்து கையாண்டிருப்பதே தெரிகிறது
எவருமே இதை பொருள் லாபத்துக்காகச் செய்யவில்லை. ஆனால் தன் செயல் தன்னுடன் அடையாளம் காணப்படவேண்டும் என்பது மனித இயல்பு. திராவிட வேதம் தளத்தை இன்னொருவர் எடுத்தாண்டால் அதை இவர்களும் அப்படித்தான் நினைப்பார்கள்
திராவிட வேதம் இணையதளம் எடுத்தாளப்பட்ட பகுதிகளை நீக்க வேண்டும். அல்லது அவர்களிடம் முறையான அனுமதி பெற்று அவர்களின் பெயருடன் சேர்க்க வேண்டும்.
பிற சமான இணையதளங்களை சுட்டி கொடுக்கவேண்டும். அதுவே முறை
ஜெ