பொற்கொன்றை – கடிதங்கள்

பொற்கொன்றை!

இன்றைய மலர்

வான் அலை

நாற்புறமும் திறத்தல்

வீடுறைவு

தனிமைநாட்கள், தன்னெறிகள்.

கொரோனோவும் இலக்கியமும்

தனிமையின் புனைவுக் களியாட்டு

அன்புள்ள ஜெ.

 

கோவிட் நோய்த்தொற்று. ஊரடங்கு குறித்து எதுவும் எழுத வேண்டாம் என்ற உங்கள் நிலைப்பாடு இந்த இக்கட்டான சூழலில் மிகவும் ஆரோக்கியமானது என தோன்றுகிறது . இந்த நாட்களில் வீட்டிலிருந்தே வேலை செய்தாலும் . பெரும்பாலான நேரத்தை செய்திகளை பார்ப்பதில்தான் செலவழித்துக்கொண்டிருக்கிறோம்.

 

இன்று எத்தனை பேருக்கு புதிதாக நோய்த்தொற்று வந்திருக்கிறது , இறப்பு எத்தனை, எந்த மாநிலங்களில் நோய்த்தொற்று மற்றும் இறப்பு அதிகம் , எந்த நாடுகளில் நிலைமை மிகவும் மோசம் இது போன்ற 24×7 செய்திகள் . அது ஒரு கட்டத்தில் சலிப்பை உண்டாக்கி வாட்சப் . முகநூல் பார்க்கலாம் என்று போனால் அங்கும் அதுவே . எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருள் போல எங்கு சென்றாலும் இந்த செய்திகள், வாதங்கள்  , தேவையில்லாத கருத்து மோதல்கள் என இந்த தனித்திருக்கும் நாட்களை மேலும் சுமையாக்கியது. இரண்டு வாரங்களுக்கு முன் இதுதான் என் நிலைமை.

 

பிறகு உங்கள் தளத்தில் ” தனிமைநாட்கள் . தன்னெறிகள்” என்னும் பதிவை வாசித்துவிட்டு நானும் அதை பின்பற்றுவது என உறுதிமொழி எடுத்து அதை செயல்படுத்த தொடங்கினேன் . ஒரு நாளைக்கு 10 நிமிடங்களுக்கு மேல் செய்திகளை பார்ப்பதில்லை. என்னுடைய முகநூல் கணக்கை தற்காலிகமாக செயலிழக்க வைத்தேன் .

 

இப்படி செய்த முதல் நாளே மனம் தெளிவுற்றது . தேவையற்ற பயம்,வெறுப்பு , மன உளைச்சல்கள் 90% குறைந்துவிட்டது . பிறகு என்னிடம் இருக்கும் புத்தகங்களை மீள்வாசிப்பு செய்வது , நண்பர்களுடன் தொலைபேசியில் உரையாடுவது என நாட்கள் கொஞ்சம் இனிமையாக தொடங்கி.இப்போது தனித்திருக்கிறோம் என்ற எண்ணம் நீங்கி அந்திசாயும் வேளையில் மொட்டைமாடி தென்றல் காற்றுடன் தனிமையை கழிப்பது  மெதுவாக பிடிக்கத்தொடங்கிவிட்டது

 

நீங்கள் பொற்கொன்றை பதிவில் சொன்ன உறுதிமொழியை 15 நாட்களுக்கு முன்னரே நான் எடுத்தது நல்ல பலன் கிடைத்திருக்கிறது . நான் என்னுடைய சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் பெங்களூரில் என்னுடைய நண்பருடன்தான் தங்கியிருக்கிறேன் ,அவர் கேரளத்தை சேர்ந்தவர் . இன்று அதிகாலை 5 மணிக்கே என்னை எழுப்பினார் . “கண்களை நான் சொல்லும் வரைக்கும் திறக்காதே உனக்கு ஒரு சர்ப்ரைஸ் காத்திருக்கிறது” என்று சொன்னார் . தூக்க கலக்கத்திலும் ஒரு ஆவல் உண்டானது . இரண்டு நிமிடம் கழித்து கண்களை திறக்க சொன்னார் .

 

கண்களை திறந்து பார்த்தபோது கண்ணெதிரே மொபைல் திரை . நண்பருடைய அம்மா வீடியோகால்  மூலம் பூஜையறையில் அலங்கரிக்கப்பட்டிருந்த சிறிய கிருஷ்ணர் சிலை முன்பு ஒரு தட்டில் வைக்கப்பட்டிருந்த பழங்கள் ,இனிப்பு, புத்தாடை , கண்ணாடி, தானியங்கள் , காசு ,எல்லாம் வைக்கப்பட்டிருந்தை காட்டினார் . விஷு நன்னாளில் இப்படி கண் விழித்தால் அந்த வருடம் முழுவதும் பொன் . பொருள் . ஆரோக்கியம் அனைத்தும் கிடைக்க கடவுள் அருள் புரிவார் என்று சொன்னார் நண்பரின் அம்மா .

 

என்னுடைய நண்பரிடம்  என்னையும் எழுப்ப சொல்லி  அதிகாலையிலேயே என்னை நெகிழவைத்து விட்டார் . இந்த  கஷ்டமான சூழ்நிலையில் இதுபோன்ற சின்ன சின்ன சந்தோஷங்கள் மனதை நிறைத்துவிடுகிறது .

 

அனைவருக்கும் இனிய தமிழ்ப்புத்தாண்டு மற்றும் விஷு நல்வாழ்த்துக்கள்.

 

 

பாலசுப்ரமணியம் மூர்த்தி

 

 

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு.

 

வணக்கம். முன்பு “துளி” சிறுகதை பற்றி எழுதியிருந்தேன். அதன் பின் வந்த பல கதைகள் மேலும் உச்சத்தை தொட்டன. மனதை மென்மையாக்கின. மனித மனத்தின் ஆழ்ந்த உள் அறத்தை பிரதிபலித்தன. உண்மையிலேயே நாளின் சில கணங்களை பரவசமாக்கின.

 

தங்களது இந்த படைப்புகளுக்கு வாசகர்கள் சார்பில் நன்றி.

 

எழுந்து தொடர. நலமுடன் வாழ வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்.

 

அன்புடன்

பா.ரவிச்சந்திரன்

 

பெருமதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்களுக்கு.

 

வணக்கம்.

 

சில வாரங்களுக்கு முன்பான ஒரு திங்கள்கிழமையின் மதிய வே ளை.  அது வாகனங்கள் நிறுத்திவைக்கவென ஒதுக்கப்பட்ட பகுதி. அந்த வெட்டவெளியில். அதற்கு முந்தைய கணம் வரை இன்றியமையாதது என கருதப்பட்டதும். மிகவும் பாதுக்காக்கப்பட்டதுமான எங்கள் கணிப்பொறிகள் வெறும் தரையில் வைக்கப்பட்டிருந்தன. அப்பகுதியே மானிட்டர். கீபோர்ட். மவுஸ். கூடவே இணைக்கும் வெவ்வேறு ஒயர்கள் என நிறைந்து கிடந்தது. அங்கிருந்த எவரும். முன் எப்போதும் கண்டிராத மட்டுமல்ல கனவிலும் நினைத்திடாத அக்காட்சியால் கொஞ்சம் பரபரப்பும் சமவிகிதத்தில் மிரட்சியும் கலந்த பயத்தை செரிக்க முயன்றுகொடிருந்தார்கள்.

 

நான் மட்டும் கொஞ்சம் தள்ளி நின்று அடக்கமாட்டாமல் சிரித்துக்கொண்டிருந்தேன். ”ஆனையில்லா”. “வருக்கை”. “பூனை” மூன்று கதைகளையும் திரும்பத்திரும்ப படித்துக்கொண்டிருந்ததால் வந்த வினை அது. உண்மையில் நல்வினை. ஆனையில்லா வெளிவரும் முன்னர் உள்ளத்தில் ஓரத்தில் வெறுமை படரத்துவங்கியது. உலக நாடுகளில் கொரானா பரவும் வேகம். உறுதியாக நம்மையும் வீட்டுக்குள் சிறைவைக்கும் என்பது புத்திக்கு புரிந்த நாட்கள் அவை.

 

நல்லவேளையாய் இந்தச் சிறுகதைகள் அமைந்தன. அவ்வாரத்துவக்கத்தில். எங்கள் மென்பொருள் நிறுவனத்தில். நான் பயன்படுத்திய நாற்காலி மற்றும் மேசையைத் தவிர வீட்டிலிருந்தே வேலை செய்யத் தேவைப்படும் கணிணி சம்பந்தப்பட்ட அனைத்து பொருட்களையும் என்னுடன் அனுப்பி வைத்துவிட்டார்கள். எப்படியும் அனைவரையும் வீட்டிலிருந்தே வேலை செய்யச்சொல்வார்கள் என்ற கணிப்பு இருந்ததாலோ என்னவோ அவ்வாரம் முழுவதும் மனது மிகவும் பாரமாய் உணர்ந்தது.

 

ஒரு நாளில் எப்படியும் மூன்று முறையாவது நண்பர்களுடன் உணவுக்கும் தேநீருக்கும் என அமையும் இடைவேளைகள். எவ்வளவு அழுத்தமேற்பட்டாலும் களிப்பின்றி முடியாத உடையாடல்கள். பயணத்தோழமைகள். இவை அனைத்தையும் மறக்கடிக்கும் வல்லமை கொண்ட வைரஸ் என இவையெல்லாம் மனதில் ஒரு பகுதியை ஆக்கிரமித்துக்கொண்டிருந்தாலும்.

 

இதைச் சமன்செய்யும் வண்ணம் மனதின் இன்னொரு பகுதியை உங்களது எழுத்து உற்சாகமாக வைத்திருக்கிறது. நம் கண்முன்னே மிகப்பிரம்மாண்டமாய் வளர்ந்து நிற்கும் யானைக்குள்ளிருந்து ஒரு கொச்சன் எழுந்துவரும் தருணத்தையும். உண்மையில் சிறுத்தையாகவே இருந்தபோதும் அதை பூனை என்றெண்ணுவதால் வெகு இலகுவாக சமாளிக்கும் மனித மனத்தை இப்போதைய சூழலுடன் ஒப்பிட்டுப் பார்க்கமுடிகிறது.

 

பல தரப்பட்ட கதைக்கருக்கள்.  நாலாவித கதாப்பாத்திரங்கள். புதிய சூழல்கள் என மிக அற்புத அனுபவத்தை தரும் கதைகள் ஒவ்வொன்றுமே. குறிப்பாக. இந்நாட்களில் உங்கள் கதைகளில் வெளிப்படும் பகடி. ஒரு முழுநாளின் சோர்வையும் கரைத்துவிடும் வல்லமை கொண்டது. வெற்றுக் கூச்சல்களிலிருந்தும் அல்லது உண்மையா பொய்யா எனத்தெரியாத செய்திகளிலிருந்தும் என்னை நானே தற்காத்துக்கொள்ள இக்கதைகளும் உங்கள் கட்டுரைகளும் பேருதவி புரிகின்றன.

 

அதிலும் இன்றைக்கு எழுதிய பொற்கொன்றை கட்டுரை மனதுக்கு நல்லூக்கம் அளித்தது. தர்க்கமற்ற. வெறுமனே வெறுப்பும் காழ்ப்பும் நிறைந்த காலத்தை நாங்கள் கடப்பதற்குரிய நற்சொற்கள் எங்களுக்கு விதிக்கப்பட்டிருப்பது வரம். அவ்வகையில் எங்களுக்கான பொற்கொன்றை. அன்றாடம் நம் தளத்திலே எழுகின்றது.

 

மனம் நிறைந்த நன்றிகளுடன்.

காளீஸ்வரன்.

 

எழுகதிர் [சிறுகதை]

நகைமுகன் [சிறுகதை]

ஏகம் [சிறுகதை]

ஆட்டக்கதை [சிறுகதை]

குருவி [சிறுகதை]

சூழ்திரு [சிறுகதை]

லூப் [சிறுகதை]

அனலுக்குமேல் [சிறுகதை]

பெயர்நூறான் [சிறுகதை]

இடம் [சிறுகதை]

சுற்றுகள் [சிறுகதை]

பொலிவதும் கலைவதும் [சிறுகதை]

வேரில் திகழ்வது [சிறுகதை]

ஆயிரம் ஊற்றுக்கள் [சிறுகதை]

தங்கத்தின் மணம் [சிறுகதை]

வானில் அலைகின்றன குரல்கள் [சிறுகதை]

ஏதேன் [சிறுகதை]

மொழி [சிறுகதை]

ஆடகம் [சிறுகதை]

கோட்டை [சிறுகதை]

துளி [சிறுகதை]

விலங்கு [சிறுகதை]

வேட்டு [சிறுகதை]

அங்கி [சிறுகதை]

தவளையும் இளவரசனும் [சிறுகதை]

பூனை [சிறுகதை]

வருக்கை [சிறுகதை]

“ஆனையில்லா!” [சிறுகதை]

யா தேவி! [சிறுகதை]

சர்வ ஃபூதேஷு [சிறுகதை]

சக்தி ரூபேண! [சிறுகதை]

எண்ண எண்ணக் குறைவது [சிறுகதை

 

முந்தைய கட்டுரைநகைமுகன், பூனை -கடிதங்கள்
அடுத்த கட்டுரைவான்கீழ் [சிறுகதை]