பொற்கொன்றை!

 

இன்றைய மலர்

வான் அலை

நாற்புறமும் திறத்தல்

வீடுறைவு

தனிமைநாட்கள், தன்னெறிகள்.

கொரோனோவும் இலக்கியமும்

தனிமையின் புனைவுக் களியாட்டு

கோவிட் நோய்த்தொற்று, ஊரடங்கு குறித்து எதுவும் எழுதவேண்டாம் என்பதே என் எண்ணம், இனிமேலும் எழுதப்போவதில்லை. என்னை ஒவ்வொருநாளும் கருத்துரைக்க, விவாதிக்கவும் அழைத்துக்கொண்டே இருக்கிறார்கள். அவர்களுக்கு “இல்லை, நான் பேச விழையவில்லை” என்பதே என் பதில்.

இந்த விஷு நன்னாளில் ஒருசில சொற்கள்.

ஒரு குடும்பச்சூழலில் அக்குடும்ப உறுப்பினர்களிடையே உச்சகட்ட வன்முறை எப்போது நிகழும் என்றால் அக்குடும்பமே ஒரு நெருக்கடியை சந்திக்கையில், வீழ்ச்சிநோக்கிச் செல்கையில்தான். பெரும்பாலும் பணக்கஷ்டம் உள்ள குடும்பங்களில் குடும்பவன்முறை உச்சத்தில் இருக்கிறது.

இதுவே சமூகத்திற்கும் பொருந்தும். போர், கொள்ளைநோய் போன்ற இடர்க்காலகட்டங்களில் அனைவருமே பதற்றநிலையை அடைகிறார்கள். அனைவருமே அனைத்து எதிர்மறை உணர்வுகளையும் பெருக்கிக்கொள்கிறார்கள். ஏற்கனவே இருக்கும் ஐயங்கள், கசப்புகள், வெறுப்புகள் வளர்ந்து பேருருக்கொள்கின்றன

அதில் எந்த தர்க்கமும் பேணப்படுவதில்லை. ஆகவே எந்த விவாதத்தினாலும் ஒருவரின் ஐயம்,அச்சம், பதற்றம், வெறுப்பு ஆகியவற்றிலிருந்து எழும் கருத்துக்களை மாற்றிவிட முடியாது. அச்சூழலில் கருத்துவிவாதங்களுக்கு எந்த இடமும் இல்லை. அவை மேலும் கசப்புகளையும் வெறுப்பையும் வளர்க்கும். அதனால் முதல் இழப்பு நமக்கே. இந்தத் தனிமையில் கசப்பு நிறைந்தவர்களாக நீடிப்பதைப்போல துன்பம் வேறில்லை.

இந்த நெருக்கடி காலகட்டத்தில் உச்சகட்ட வெறுப்புகள் எழுந்து நின்றுள்ளன.வெறுப்பு நம்மை கறைபடியச்செய்வது. வெறுப்பை உருவாக்கிக்கொள்பவர்களே முதன்மையாக இருளில் விழுகிறார்கள். நம் வீட்டுக்குள் ஒரு மலினத்தை ஒருவன் வீசிவிட்டுச் செல்கிறான் என்பதுபோன்றதே ஒருவன் தன் காழ்ப்பை நம்மேல் ஏற்றிவிட்டுச் செல்கிறான் என்பது. வெறுப்பை எழுப்பும் ஒரு சொல்லுக்கும் செவிகொடுக்காமல் இருப்போம்.நம்மில் எவர் மீதும் எவர் உமிழும் காழ்ப்பையும் கருத்தில்கொள்ளாமலிருப்போம்.நம் நலனுக்காக.

அத்துடன் வழக்கமான பொது எதிர்ப்பு மனநிலை,உளப்பிறவுக்கு நிகரான அதீத அரசியல் நிலைபாடுகள்,அதன் விளைவான எள்ளல்கள் கசப்புகள் கொந்தளிப்புகள்.அவை நம்மை நாமே கீழ்மையாக வெளிப்படுத்திக்கொள்பவை அன்றி வேறல்ல.

எங்கும் பொய்ச்செய்திகள், திரிபுச்செய்திகள், உள்நோக்கம்கொண்ட கருத்துக்கள், மிகையான உணர்ச்சிகள். ஒவ்வொருவரும் தங்கள் வழக்கமான அரசியலை,வழக்கமான காழ்ப்புகளை இந்த தருணத்தில் மேலும் ஆவேசமாக முன்வைக்கிறார்கள். அதை உடனடியாக தெரிந்துகொண்டு ஆகப்போவது ஒன்றுமில்லை. தேவையில்லாமல் நாம் அகத்தே எதிர்வினையாற்றுவோம். நம் உள்ளத்தை இருளாக்கிக்கொள்வோம். அவர்கள் இங்கேதான் இருப்பார்க்ள். மூன்றுமாதம் கழித்து என்ன சொன்னார்கள் என்று பார்ப்போம்

இந்நாளில் ஓர் உறுதி எடுத்துக்கொள்வோம். எந்த காழ்ப்புச்செய்திகளையும் எந்த வெறுப்புச்செய்திகளையும் கேட்கச் செவிகொடுக்க மாட்டோம், எதிர்வினையாற்ற மாட்டோம் என்று நாம் செவிகொள்ளும் ஒரு செய்தி அது எந்த ஊடகத்திலாயினும் அத்துறைசார் நிபுணரால் அரசியல் சார்புகள் அற்று சொல்லப்படுவதாக மட்டும்தான் இருக்கவேண்டும்

இந்தக் காலம் கடந்துபோகும். இதை அகத்தே ஒளியுடன் கடந்துவந்தோம் என்று நாமே திரும்பிப்பார்த்து நிறைவுகொள்ளவேண்டும். அதுவே முக்கியமானது.

இந்நாளில் நல்ல இசை கேட்போம். எளிய இனிப்பு செய்து உண்போம். வீட்டில் இருந்தாலும் நல்ல ஆடை அணிவோம். இந்த நாளில் இனிமையையும் நல்லுணர்வுகளையும் மட்டும் நிறைத்துக் கொள்வோம்.இந்நாளை கொன்றையில் பொன்எழும் நாள் என மூவாயிரமாண்டுகளாக நம் முன்னோர் கொண்டாடி வருகிறார்கள்.

பொன் எழுக!

***

ஊட்டியில் ஒருநாள்

ஏகம் [சிறுகதை]

ஆட்டக்கதை [சிறுகதை]

குருவி [சிறுகதை]

சூழ்திரு [சிறுகதை]

லூப் [சிறுகதை]

அனலுக்குமேல் [சிறுகதை]

பெயர்நூறான் [சிறுகதை]

இடம் [சிறுகதை]

சுற்றுகள் [சிறுகதை]

பொலிவதும் கலைவதும் [சிறுகதை]

வேரில் திகழ்வது [சிறுகதை]

ஆயிரம் ஊற்றுக்கள் [சிறுகதை]

தங்கத்தின் மணம் [சிறுகதை]

வானில் அலைகின்றன குரல்கள் [சிறுகதை]

ஏதேன் [சிறுகதை]

மொழி [சிறுகதை]

ஆடகம் [சிறுகதை]

கோட்டை [சிறுகதை]

துளி [சிறுகதை]

விலங்கு [சிறுகதை]

வேட்டு [சிறுகதை]

அங்கி [சிறுகதை]

தவளையும் இளவரசனும் [சிறுகதை]

பூனை [சிறுகதை]

வருக்கை [சிறுகதை]

“ஆனையில்லா!” [சிறுகதை]

யா தேவி! [சிறுகதை]

சர்வ ஃபூதேஷு [சிறுகதை]

சக்தி ரூபேண! [சிறுகதை]

எண்ண எண்ணக் குறைவது [சிறுகதை

முந்தைய கட்டுரைநகைமுகன் [சிறுகதை]
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–32