அன்பர் ஜெயமோகன் அவர்களுக்கு
வணக்கம். தங்கள் வலைப்பதிவில் அடியேனின் கடிதத்தை வெளியிட்டதற்கு நன்றி.
வரும் 27ஆம் தேதி மார்ச் மாதம், திருநெல்வேலியில் வழக்கம்போல் நாங்கள் வருடா வருடம் நடத்தும் உழவாரப்பணி அன்பர்களுக்கான பயிற்சிப்பட்டறை நடத்த உள்ளோம்.
இதில் சுற்றியுள்ள பல மாவட்டங்களில் இருந்து அன்பர்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர்.
கோயில்கள் புனரமைப்பின் பொது செய்யக் கூடியவை என்ன, செய்யக்கூடாதவை என்ன என்பது பற்றிய விளக்கப் படங்கள் சொற்பொழிவுகள் நடைபெறும்.காலைச்சிற்றுண்டியுடன் ஆரம்பித்து, மதிய உணவு, மாலைத் தேநீர் உடன் நடக்கும் நிகழ்வு இது.
சிதிலமடைந்த கோயில்களைப் பற்றிய செய்திகளை, பட்டியலை நமக்குப் பகிர்பவர்களில் உழவாரப்பணியினர்தான் அதிகம். இந்து அறநிலையத்துறை அல்லது தொல்லியல் துறையினரிடம் சிதிலமடைந்த கோயில்கள்,மண்டபங்கள், கேட்பார் அற்று கிடக்கும் கல்வெட்டுகள், நடுகற்கள் போன்றவற்றின் பட்டியல் ஏதும் உள்ளதா என்றூ கேட்டால் ‘இல்லை’ என்றே பதில் வரும்.
அதேபோல் ஸ்தபதி என்று பெயர் கொண்டு, பழஞ்சின்னங்களை அழித்து, புதியதாகவும், வேண்டும் தெய்வங்களை உள்ளே அனுமத்தித்து, ’பெரிதாக’க் கட்டிக் கொடுக்கிறேன் என்பவர்களும் பலர் முளைத்துள்ளனர்.
அறியாமையும், இறை சிந்தனையால் தூண்டப்பட்டவராகவும், பழங்காலச் சின்னங்கள், கல்வெட்டுகளின் செய்திகள் பற்றிஅதிகம் அறியாத பாமர மக்களை பழங்களைகளை ரசிப்பவ்ராகவும், தவறான புனரமைப்புகளை தடுக்கவல்லவராகவும் அவர்களை மாற்றுவதே நம் முதல் கடமை.
ரீச் ஆங்கில விரிவைப் பார்த்தால் (REACH – Rural Education And Conservation of Heritage). முதல் இரு வார்த்தைகள் இல்லையெனில், பின்னிரு வார்த்தைகள் நடக்காது).
J. chandrasekaran
P.R.O, REACH FOUNDATION
visit:
www.conserveheritage.org
http://templesrevival.blogspot.com
http://reachhistory.blogspot.com
join our yahoo groups to know all happenings in heritage issues…
http://groups.yahoo.com/group/temple_cleaners/join